காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் - 2014
கடந்த ஞயிற்றுக்கிழமை (21-12-2014) காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடாக்கிளையின் குளிர்கால ஒன்றுகூடலும், இராப்போசன விருந்தும் கனடா ஸ்காபரோவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்த விழாவில் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவரான திரு. குணசிங்கம் வைத்தியகலாநிதி திருமதி குணசிங்கம் ஆகியோர் லண்டன் ஒன்ராறியோவில் இருந்து வருகைதந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
விழா ஆரம்பத்தில் முதலில் மங்களவிளக்கேற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டது. தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து இயல், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. புதிய தலைமுறையினர் விரும்பி ரசிக்கும் திரையிசை நடனங்களும் அவ்வப்போது இடம் பெற்றன. நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர்களும், மாணவர்களின் பிள்ளைகளும், குறிப்பாக அடுத்த தலைமுறையினர் இந்த நிகழ்ச்சியில் அதிகமாகக் கலந்து கொண்டனர். திரு. பரம்ஜி ஞானேஸ்வரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். கனடா கிளையின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். இதைவிட காங்கேசந்துறை வடபகுதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வருவதால் அங்கு மீள்குடியேற்றம் நடைபெறாமல் இருப்பதும், பாடசாலையை மீண்டும் காங்கேசந்துறையில் இயங்கச் செய்ய எப்படியான நடவடிக்கைகள் சாத்தியம் என்பது பற்றியும் சங்கக் காப்பாளர்களில் ஒருவராக பி. விக்னேஸ்வரன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு, அது சம்பந்தமாகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட விவரண ஒளிப்படமும் காண்பிக்கப்பட்டது.

நாள்: 31-01-2015
நாள்: 01-02-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
பாரிஸ் மாநகரிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் 'ரி. ஆர். ரி." தமிழ் ஒலி வானொலி நடாத்தும் தோழர் சபாரத்தினம் சுரேந்திரன் ஞாபகார்த்தச் சர்வதேச ரீதியிலான சிறுகதைப்போட்டி - 2015
It is with sadness that we inform you our former Principal Mr. P. Kanagasabapathy passed away this morning in Toronto, Canada. Funeral Information: Viewing will be held on Monday, Tuesday 5:00 PM to 9:00 PM, December 29th & 30th 2014 ,





அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் - நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை - தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல் இலக்கிய முயற்சிகள் மற்றும் மேலைத்தேய பிறமொழி நாவல் இலக்கியம் தொடர்பாகவும் உரைகளும் கலந்துரையாடலும் இடம்பெறும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









