கோவிந்த் நிலானி & B. லெனின் - உரையாடல்.!
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவிற்காக கோவிந்த் நிலானி சென்னை வந்திருந்தபோது, அவருக்கும் படத்தொகுப்பாளர் லெனினுக்கும் இடையே இரண்டுமணிநேரம் சினிமா பற்றிய விவாதம் நடைபெற்றது. இருபெரும் ஆளுமைகள், தங்களுடைய திரைப்பட அனுபவங்களை பற்றியும், தங்கள் காலத்து சிறந்த இயக்குனர்கள், கலைஞர்கள் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துக்கொண்டார்கள். சினிமாவை விரும்பும் நண்பர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி இது. இதில் இயக்குனர் லீனாமணிமேகலையும் கலந்துக்கொண்டார்.
காணொளியை காண: https://www.youtube.com/watch?v=AIc81z8JU1Y
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
நண்பர்களே, பேசாமொழி மாற்று சினிமாவிற்கான தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. தற்கால தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனரின் படம் பேசாமொழியில் அட்டைப்படமாக வருவது இதுவே முதல்முறை. அந்த பெருமை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களையே சாரும். பாலாஜி சக்திவேலின் மிக நீண்ட நேர்காணலும், அவருடன் நான் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கமான வடிவமும், இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. தவிர பண்ணையாரும் பத்மினியும் திரைப்பட இயக்குனர் அருண்குமாரின் நேர்காணலும் இந்த இதழில் வெளியாகியிருக்கிறது.

சென்ற வெள்ளிக்கிழமை யூலை மாதம் 24 ஆம் திகதி 2015 அன்று செல்வி அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கனடா றிச்மன்ஹில் சென்ரர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் அதிபர் நர்த்தன நாயகி, மானித மாதங்கி ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் மாணவியான செல்வி அபர்னாவின் அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினர்களாக எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. பூங்கோதை பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சுதர்சன் துரையப்பா அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.
காந்தளகம் வெளியீடாக 916 பக்கங்களில் வெளிவந்துள்ளது இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு தொகுப்பு நூல். இத்தொகுப்பு நூலில் 56 ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று தொகுப்பு நூலினைத் தொகுத்தளித்த எழுத்தாளர் முல்லை அமுதனே இந்நூலின் தொகுப்பாசிரியராகவுமிருக்கிறார். அமரர்களான ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து இரு தொகுப்புகளை வழங்கியுள்ள முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். இவ்விரு தொகுப்பு நூல்களும் ஆவணச்சிறப்பு மிக்கவை. இந்நூலில் இடம் பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் விபரங்களும், அவர்களைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையாசிரியர்கள் பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இந்நூலினை வாங்க விரும்புபவர்கள் காந்தளகம் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளவும்.









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









