கூடு - மூன்றாவது இதழ் வெளிவந்துவிட்டது..
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய மாத இதழான கூடுவின் மூன்றாவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இதழில் கவிஞர், இயக்குனர் லீனா மனிகேமலையின் சிறுகதை, தறியுடன் நாவல் ஆசிரியர் பாரதிநாதன் எழுதியுள்ள சிறுகதை, சு.ராவின் கவிதைகள் பற்றிய அரவிந்தனின் கட்டுரை, இயக்குனர் ருத்ரையா, எழுத்தாளர் ஜெயகாந்தன் இருவருக்குமான கவிஞர் விக்ரமாதித்தனின் அஞ்சலி கவிதை, தமிழ்மகன் எழுதியுள்ள வெ. நீலகண்டனின் தமிழ் பேரரசன் ராஜேந்திர சோழன் புத்தகம் பற்றிய திறனாய்வு, தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறையின் இரண்டாவது கட்டுரை, சுஜாதா தேசிகன் தொடங்கியிருக்கும் புதிய தொடர், ரிஷான் ஷெரிப்பின் இரண்டாவது கட்டுரை, கடங்கநேரியன் கவிதை தொகுப்பு பற்றிய அறிமுகம், போன்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளது. தவறாமல் படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். நன்றி. படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



'கூலித்தமிழ்’ என்ற நூல் வெறுமனே மலையகத்தவரின் அவல வரலாற்றைச் சொல்லுகின்ற நூல் அன்று. அது, கற்க வழியற்றுக் கிடந்த தோட்டத் தமிழரின் போர்க்குணத்தையும், இலக்கியப்படைப்புக்களையும் புலப்படுத்துகின்ற நூல். தோட்டத் தொழிலாளர்கள் அவலம் பற்றி ஈழத் தமிழர்களும் கேட்டும் கேளாதவர்கள் போலவே இருந்துவிட்டார்கள். அவர்களும் இணைந்து குரல்கொடுத்துச் சகோதரத்தமிழரின் அவலத்தைத் தணித்திருக்கலாம். அன்றைய ஈழத்தமிழரின் செயலுக்காக நான் வெட்கப்பட்டு, வேதனைப்படுகிறேன். ஈழத்தமிழர் அசட்டையாக இருந்தார்கள் என்றால், தமிழ்நாட்டுத் தமிழரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். தமிழகத்திலிருந்து புதுவாழ்வு தேடிவந்த சகோதரா;கள் இலங்கை மலைநாட்டில் அடிமைகளாக வாழ்ந்ததை அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்களும் மவுனிகளாகவே இருந்துவிட்டார்கள். அவர்களையும் மன்னிக்க முடியவில்லை. மலையகத் தமிழரின் பிறந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது; புகுந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது என்பது சோகமான உண்மை” என்று தமிழறிஞரும், வழக்கறிஞருமான செ. சிறிக்கந்தராஜா லண்டன் ‘சொறாஸ்ட்ரியன்’ மண்டபத்தில், சென்ற ஏப்ரல் 25ஆம் திகதி மு.நித்தியானந்தனின் நூல்வெளியீட்டில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்திருந்தார்.
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான சல்மா மாலிக் அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.



கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள். 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழி இந்த மாதம் ஜெயகாந்தன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சினிமாவில் ஜெயகாந்தன் ஏற்படுத்திய மாற்ற்னகள், தாக்கங்கள், ஜெயகாந்தனையும் விட்டுவைக்காத சினிமாவின் வரலாறு, ஜெயகாந்தனின் அரசியல் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. ஜெயகாந்தன் இயக்கிய படங்கள், ஜெயகாந்தனின் சினிமா பற்றிய பார்வை போன்றவற்றை பதிவு செய்து, அவற்றை ஆவணமாக்கியுள்ளோம். அவசியம் நண்பர்கள் படித்துவிடுங்கள். 
இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் தமிழ் சினிமா தொடர்பான ஊடகவியலாளராக பணியாற்றியவரும் சினிமா தொடர்பான செய்திகளை தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ச. சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள் நூலின் வெளியீட்டு அரங்கு சிட்னியில் நடைபெறவுள்ளது.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









