சமூக அறிவித்தல் 01 : மெல்பன்
பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் - பிள்ளைகள் - பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் - பெற்றோர்கள் - பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும் எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School மண்டபத்தில் (Ann Street, Dandenong 3175) நடைபெறும்.
தமிழுக்கு தொண்டாற்றி மறைந்த தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சி, நூல், இதழ்களின் கண்காட்சி பெரியவர்கள் பிள்ளைகள் கலந்துகொள்ளும் பலதரப்பட்ட விளையாட்டுப்போட்டிகள், உற்சாகமூட்டும் கலை நிகழ்ச்சிகள், சிந்தனைக்கு விருந்து படைக்கும் அறிவியல் நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெறும். மழலைகள் முதல் வளர்ந்தோர் வரை யாவரையும் மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், புதுமையான தமிழ் மொழிப்போட்டிகள், சிறுவர் ஓவியப்போட்டி என்பனவும் இடம்பெறும்.
அனுமதி இலவசம். எனினும் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவை முன்னிட்டு மைதானத்தில் இடம்பெறும் வேடிக்கையான பொழுது போக்கு (Rides) நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்வதற்கு $ 20 வெள்ளிகள் பிரவேசக்கட்டணம் பெறப்படும். முற்கூட்டியே அதற்கான சீட்டுக்களுக்கு பதிவுசெய்துகொள்ளுமாறு பாரதி பள்ளியின் நிருவாகம் கேட்டுக்கொள்கிறது.
மேலதிக விபரங்களுக்கு: திரு. பரம்: 0417 139 629 திரு. வேந்தன்: 0411 090 049 திரு. நிஷாகர்: 0408 563 234
சமூக அறிவித்தல் - 02: எழுத்தாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.
மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவில் (26-04-2015) புத்தக விற்பனை நிலையம்
மெல்பனில் இயங்கும் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழா முன்றலில் புத்தக விற்பனை நிலையமும் இயங்கவிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் தமது நூல்களை அறிமுகப்படுத்தவும் விற்பனை செய்யவும் இந்த புத்தக நிலையத்தை பயன்படுத்தலாம். இது ஒரு அரிய சந்தர்ப்பம்.
விற்பனைக்கு புத்தகங்கள் வைக்கவிரும்பும் அன்பர்கள் - Dandenong High School மண்டபத்தின் (Ann Street, Dandenong 3175) முன்றலில் இயங்கவிருக்கும் புத்தக விற்பனை நிலையத்திற்கு எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு புத்தகங்களின் பிரதிகளை சேர்ப்பிக்கலாம்.
அல்லது எதிர்வரும் 24-04-2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பின்வரும் ஏதேனும் ஒரு முகவரியில் சேர்ப்பிக்கலாம்.
EdX Institute, 203 Gladstone Road, Dandenong North , Vic- 3175
Sujani Kasinathan, 14, 25-29 Brougham St., Box Hill, Vic- 3128
மேலதிக விபரங்களுக்கு முருகபூபதியை 04 166 25 766 இல் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
முருகபூபதி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.