
நேற்று மெல்பேர்ன் நகரத்து
Victorian state Library இற்குச்
சென்றிருந்தேன்.
இதுவே என் வீடு. என் வாழ்வு
இங்கே நிலைத்திருந்தால்.
நித்தம் ஒரு மணி நேரமாவது
வாசிப்பில் என்னைத் தொலைத்திட
இத்தாய்
அவள் மடிதந்து என்னை
அரவணைத்திருப்பாள்.
யாழ்.நூலகத்திற்கு முன்
அமர்ந்திருக்கும் சரஸ்வதி...
நினைவுகள் என் மனசை
உருக வைத்த தருணமது.
கலையழகால்
எம்மைப் பிரமிக்க வைத்த
இவளையும்
இனிமேல்
என்னாலும் மறக்க முடியாது.
நண்பர்களை ஒன்றுகூடிப்
பிரிதல்போல,
இவளைப் பிரிதலும்
மனசுக்கு ஏனோ துயர்தான்.
தாயே! உன்னை
மறுபடியும் சந்திக்க
காலம் வழிவகுக்கும்.
அப்போது மீண்டும்
நாம் சந்திப்போம்.
24.1.2026



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









