தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான சல்மா மாலிக் அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.
நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணிப் பெண் படைப்பாளி. நான்குசுவர்களுக்குள் அடைப்பட்டவாழ்க்கையும்,அதனுள்ளிருந்து கசிந்துருகும் தனிமையும்தான் இவரது கவிதைகள். தற்போது சமூக நலத்துறை வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றிவருகிறார். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (கவிதைகள் - 2000), இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல் - 2004) வெளிவந்துள்ளன. விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் இடம்பெற்றிருந்தது.
அரசியலிலும் குறிப்பிடத்தக்க இடத்தை இவர் அடைந்துள்ளார். உள்ளூராட்சி அமைப்புக்களில் பெண்களுக்கு முதன்முதலாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதனால் இவர் அரசியலுக்கு வர முடிந்தது. 2001 முதல் 2006 வரை இவரது கிராமமான துவரங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவியாகப் பதவி வகித்தார். உள்ளூராட்சி நிர்வாகத்தில் தனது கிராமத்தை சிறந்த இடத்திற்கு கொண்டு வந்தார். அதன்பின்பு தன்னை திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றார். 2006 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் மருங்காபுரி தொகுதிக்கு போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டார். தற்போது தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றி வருகின்றார்.
இவர் தலைவியாக இருக்கும் பொழுது பெண் கருவைப்பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
அது போக இந்திய துணை ஜனாதிபதியின் மனைவி சல்மா அன்சாரி தலைவியாக உள்ள துர்காபாய் தேஷ்முக் விருதுக்குழுவில் உறுப்பினராக உள்ளார். கவிஞர் சல்மா எழுதி, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ தமிழ் இலக்கிய உலகில் வரவேற்பையும் சர்ச்சைகளையும் ஒன்று சேர உருவாக்கிக்கொண்ட நாவல். இஸ்லாமிய சமூகப் பின்னணியில் இருந்து வந்து இலக்கியத்தில் தனித்துவத்தோடு இயங்கும் சல்மா இலக்கியப் பெண் எழுத்தாளருக்கான பெமினாவின் ’வுமன் ஆப் வொர்த் ’ என்ற விருது, பெற்றவர்
தமிழ் நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மாவின் வாழ்க்கை குறித்த ஒரு ஆவணப்படம் சானல் 4 நிறுவனத்தின் உதவியுடன் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் பெர்லினில் நடந்த திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் காண்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்தப் படம் கவனம் செலுத்துகிறது.
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் 20 பெண் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் "இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு" குறித்தும், "பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளதற்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம்" குறித்தும் கவிஞர் சல்மா, பேசினார்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவியாகவும் (Chairperson of Ponnampatti Town panchayat) , தமிழ்நாடு சமூக நலவாரிய தலைவராகவும் (Chairperson of the Tamil Nadu Social Welfare Board) இருக்கிறார். கதா’வும் காலச்சுவடும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் மூலம் சமூக நலத்துறையில் தலைமைப்பதவியை ஏற்று அதன் மூலம் மகளிருக்கு தொண்டுகள் ஆற்றி உள்ளார் சல்மா. அமெரிக்காவில் நடை பெற்ற சூடானிய திரைப்பட விழாவில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய சல்மா பற்றிய ஆவணப்படம் வெளியிடப்பட்டு பாராட்டைப் பெற்றார்: அந்த ஆவணப்படம் நான்கு சர்வதேச விருதுகள் வென்றுள்ளது. (அக்டோபர் 2013) ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் கவிஞர் சல்மா பற்றி " The Three Faces of Salma" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மாவின் தந்தை சம்சுதீன்.தாயார் சர்புன்னிசா. வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன.
“எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்.”
“பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்”
“ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான் பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது” - கவிஞர் சல்மா
ஒரு இறுகலான சமுதாயத் தளைகளை அறுத்தெறிந்து இன்று நிமிர்ந்து நிற்கும் சல்மா தமிழ்ச் சமூகத்தினையும் தலைநிமிரச் செய்துள்ளார் என்பது சந்தோஷமான விஷயமாகப்படுகிறது. சல்மாவின் ஆற்றல் மேலும் மேலும் தொடர பிராத்திப்பதோடு இதயம் பிழிந்து வாழ்த்துகின்றோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.