நினைவேந்தலும் நூல் வெளியீடும்




இலங்கையிலிருந்து மாதந்தோறும் தவறாது வெளிவரும் 'ஞானம்" இலக்கிய சஞ்சிகைச் சிறப்பிதழின் அறிமுக நிகழ்வு பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ளது. 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" என்ற பெயரில் 976 பக்கங்களில் பெரிய அளவில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழின் அறிமுக நிகழ்வுää நவம்பர் 1- ம் திகதி (01 - 11 - 2015) ஞாயிறு மாலை 5. 00 மணிக்கு பாரிஸ் மாநகரில் (T I S C I - 13, RUE DE L'AQUEDUC , 75010 PARIS - M° : Gare du Nord) இடம்பெறவுள்ளது. மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 'ஞானம்" பிரதம ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன்ää இணை ஆசிரியர் திருமதி ஞானம் ஞானசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுவர். படைப்பாளிகள் - இலக்கிய நேசர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும். பிரான்சிலுள்ள படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது. ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்துவாழும் எம் படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே ஞானம்ää 'ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்" அதிக பக்கங்களில் பெரிய அளவில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி நிரல்: 'தொல்காப்பியரும் சங்கச் சான்றோரும் கண்ட> காணவிழைந்தபெண்கள்"
பிரதமவிருந்தினர் உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
சிறப்பு விருந்தினர்கள் உரை:
திருமதி. சுந்தரேஸ்வரி சிவதாஸ் - 'தொல்காப்பியர் கண்டபெண்கள்"
திரு.குமரகுரு கணபதிப்பிள்ளை - 'சங்கச் சான்றோர் கண்டபெண்கள்"
திருமதி. விமலாம்பிகை பாலசுந்தரம் - 'சங்ககாலப் பெண்கள் நிலை"
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 31-10-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற வெள்ளிக்கிழமை பாராட்டுவிழா ஒன்று ஸ்காபரோவில் நடைபெற்றது. சென்ற ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி 2015 இல் இந்த நிகழ்வு ஸ்காபரோ, 3300 மக்னிக்கல் அவென்யூவில் உள்ள பாபா பாங்குவிட் ஹோலில் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றி, கனடா தேசிய கீதம், தமிழ் வாழ்த்துப் பாடல், மௌன அஞ்சலி ஆகியவற்றுடன் பாராட்டு விழா ஆரம்பமானது. கனடா தேசிய கீதத்தை செல்வி சாலினி மணிவண்ணனும், தமிழ் தாய் வாழ்த்தை செல்வி சங்கவி முகுந்தனும் இசைத்தனர். எழுத்தாளர் குரு அரவிந்தனை கனடா எழுத்தாளர் இணையத்துடன் இணைந்து கனடாவில் உள்ள பல தொடர்பு சாதனங்கள், மன்றங்கள், சங்கங்கள் என்பன அவரைக் கௌரவித்திருந்தனர்.

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' - வள்ளுவராண்டு 2047
காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.

நவம்பர் 7 (சனி) | நவம்பர் 8 (ஞாயிறு)
இடம்: சென்னை
பயிற்சிக் கட்டணம் : ரூபாய் 3500
முன்பதிவுக்கு : 98406-98236
தமிழ் ஸ்டுடியோவின், படச்சுருள் மாத இதழுக்கு நிதி திரட்டும் விதமாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன் இருவரும் இணைந்து இரண்டு நாள் திரைப்பட ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை நடத்திக்கொடுக்கவுள்ளனர்.
பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில், ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்கள் யாவும் கோட்பாட்டு ரீதியில் விளக்கப்பட்டு, இரண்டாம் நாள்., திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் கேமராவைக் கொண்டு செய்முறைப் பயிற்சியாக, சிறப்பு வகுப்பும் நடத்தப்படும். ஒளிப்பதிவில் லைட்டிங்க் பற்றியும், அழகியல் பற்றியும் இதில் விளக்கப்படவிருக்கிறது.
நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில் நடைபெற உள்ளது.
டேவிட் ஐயாவின் வாழ்க்கை, அவரது அரசியல், சமூகப் பங்களிப்பு தொடர்பாக உள்ள பதிவுகள் , எழுத்துக்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை தொகுக்கும் பணியில் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். டேவிட் ஐயா பற்றி எழுதக் கூடியவர்கள் தமது பதிவுகளை இம்மாதம் (ஒக்டோபர்) இறுதிக்குள் அனுப்பித் தருமாறு வேண்டுகிறோம்.
ஏலவே வெளிவந்த குறிப்புகள், கட்டுரைகள் இருப்பின் அவற்றினை தொகுப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்கிறோம். புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், மற்றும் அவரின் கையெழுத்துப் பிரதிகள் இருப்பின் அவற்றின் பிரதிகளையும் எமக்கு அனுப்பித் தருமாறு கேட்கிறோம். டேவிட் ஐயா தொடர்பான நூல் தொகுப்பு பணிக்கு, அவர் தொடர்பான பல்வேறு பார்வைகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இந்த நிகழ்வில் கவிஞர் திருமாவளவனின் முழுக் கவிதைகளின் தொகுப்பான "சிறு புள் மனம்" செம்பதிப்புத் தொகுப்பும் வெளியிடப்பட உள்ளதுடன் திருமாவளவனின் படைப்புலகம் பற்றிய உரைகளும் கருத்துப் பகிர்வும் இடம் பெறவுள்ளது. திருமாவளவனின் கவிதைகள் ஆற்றுகை செய்யப்படவுமுள்ளன.
இந்த முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்பு மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., தொடர்பு தொலைபேசி எண் (0044) 7817262980
நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின் முக்கியமான நேர்காணல், தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்ட 15 சிறந்த திரைப்படங்களின் பட்டியல் என இந்த இதழும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிரவும்.
இந்த இதழில்:
ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்திரன்
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
”ஆண்களைவிட பெண்களே அறிவாளிகள்” - இயக்குனர் புவனா நேர்காணல் - தமிழரசன்
லெனின் விருது வழங்கும் விழாவில் பி.கே.நாயர் பேசியது - தமிழில்: ஆர்த்தி வேந்தன்
ஷியாம் பெனகல் தொடர்ச்சி – அறந்தை மணியன்
தணிக்கைக் குழுவால் தடைசெய்யப்பட்ட15 இந்தியத் திரைப்படங்கள் - கெளரவ் அரோரா
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
‘நான் உங்கள் தோழன்’ - தம்பி ஐயா தேவதாஸ்
கோர்ட் பட இயக்குநர் சைதன்யா தம்ஹனே நேர்காணல் - மாணிக் சர்மா::தமிழில்: வின்சென்ட் காபோ
படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_37.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொல்காப்பியம் தமிழில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கணநூலாகும். பண்டைத் தமிழ் மொழி, இலக்கியம், வாழ்க்கைமுறை, அரசியல், பண்பாடு; முதலான பல்வேறு விடயங்களை விளக்கி இலக்கணம் கூறும் முதல் நூல் தொல்காப்பியமே. இந்நூல் தமிழினத்தின் தொன்மை அடையாளத்தை ஆவணப்படுத்தும் பெரும் செல்வம். அதனை அமைப்பு ரீதியாக உலகமயப்படுத்தி அதனூடாகத் தொல்காப்பியக் கல்வியைப் பரப்புதல், தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை உலகறிச் செய்தல் ஆகிய குறிக்கோள்களுடன் ‘அனைத்துலகத் தொல்காப்பியம் மன்றத்தின் தொடக்க விழா பாரிஸ்மாநகரில் 27.09.2015இல் நடைபெற்றுள்ளது. உலகளாவிய நிலையில் அறிஞர் பலர் அதில் பங்குபற்றினர். கனடாவிலிருந்து பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் அம்மகாநாட்டிற் பங்குபற்றினார். தொல்காப்பிய மன்ற மூதறிஞர் குழுவில் பேராசிரியர் பொற்கோ, பேராசிரியர் அகிலேசனார். பேராசிரியர் இ. பாலசுந்தரம், பேராசிரியர் சிவமணி, ஆகியோருடன் இலங்கை, சிங்கப்பூர், இலண்டன, தமிழ்நாடு, மலேசியா ஆகிய இடங்களிலிருந்தும் பல அறிஞர்; இடம்பெற்றுள்ளனர்;. அனைத்துலகத் தொல்காப்பியம் மன்றத்தின் கனடாக்கிளை அங்குரார்ப்பணம் திங்கட்கிழமை, ஒக்டோபர் 26ஆம் திகதி; பி.ப 6.30ஸ்காபரோவிலுள்ள GTA MALL இரண்டாம் மாடியில் இடம்பெறவுள்ளது. இதில் இணைந்துகொள்ள விரும்பும் இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். திரு சிவபாலு தங்கராசா 416 546 9413) அல்லது பேராசிரியர் இ. பாலசுந்தரம் (416 267 5255) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
அமைப்புக்குழவினர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

‘இளவாலை திருக்குடும்பக்கன்னியர்மடத்தின் புகழ் மிக்க அதிபராகத் திகழ்ந்த அருட் சகோதரி லுசில்லா அவர்கள் அதிபராக இருந்த காலம் இளவாiலைக் கன்னியர்மடத்தின் வரலாற்றில் சிறப்பும்,, பொலிவும் மிக்க காலமாகும். அவரிடம் கல்வி பயலும் மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் அமெரிக்கா,, லண்டன்,, பிரான்ஸ்,, ஜேர்மனி,, நோர்வே போன்ற பல நாடுகளில் சிறந்து விளங்குவது தனக்கு பெருமகிழ்வைத் தருவதாக பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த அருட்தந்தை ரி.இ.ரி. ராஜன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார். இன்று அம்மாணவிகளை லண்டனில் மீண்டும் சந்திப்பது அன்றைய மகிழ்வான நினைவுகளை மீட்பதற்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தமிழ் இலக்கியம் கடந்தகாலப் போரினால் ஏற்பட்ட தடைகளையும் மீறி தற்பொழுது துளிர்த்து வருகிறது. பலர் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் வெவ்வேறு பிரதேசத்தில் இயங்குகிறார்கள் என்பது, பல இலங்கை நண்பர்களோடு பேசியபோது எனக்குப் புரிந்தது. இந்த இலக்கியச் செடியை உரமீட்டு மேலும் வளம்பெற செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தால் பலருடன் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மட்டுமே அதை ஏற்படுத்தமுடியும் என்பதும் மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதிவளமும் தேவை என்பதும் புரிந்தது. ஆங்காங்கு நடத்தப்படும் மாநாடுகளையும் இலக்கிய சந்திப்புகளையும் விட்டு விட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியான செயற்பாடுகளே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எனது கணிப்பு. இது போன்ற விடயங்களை அங்கே தனிநபர்களோ அல்லது தற்போதைய அரசாங்கமோ செய்யும் நிலையில்லை. மொழியில் ஏற்படும் முன்னேற்றம் எழுத்தாளர்கள் அல்லது இலக்கியத்தோடு நின்று விடாது. தமிழ் எமது நாட்டில் புவியியல் மதம் என பிரிந்திருக்கும் தமிழர்களை இணைக்கும் பாலமாகும். அதை வலுப்படுத்துவது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டிய கடமையாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது வளத்தில் சிறிய பகுதியை ஒருங்கிணைத்தால் அதனால் ஏற்படும் மாற்றம் மிகவும் பெரிதாக இருக்கும் என்ற கணிப்பில் சமீபத்தில் கனடாவில் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் சிலருடன் பேசியபோது அவர்களும் இக்கருத்தை வரவேற்றார்கள்.

சி. வைத்தியலிங்கம் அவர்களின் புதல்வியான திருமதி யமுனா சுமங்கலி தர்மேந்திரன் லண்டன் பிரெண்ட் மாநகராட்சி மன்றத்தின் நூலகங்களில் கடந்த முப்பத்தாறு வருடங்களாக பணியாற்றி வருகின்றார். லண்டனில் தமிழ் மொழியை வளர்ப்பதில் பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருகின்ற யமுனா தர்மேந்திரன், தமிழ் மக்களின் நலன் கருதி ஆயிரக்கணக்கான தமிழ்நூல்களை பிரெண்ட் மாநகராட்சி நூலகங்களில் அறிமுகஞ்செய்து வருவதோடு தமிழ் விழாக்கள் பலவற்றையும் மிகவும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். கடந்த ஒன்பது வருடங்களாக மாதந்தோறும் தமிழ் வாசகர் வட்டத்தினை நடாத்தி வரும் திருமதி யமுனா தர்மேந்திரன், அவற்றினூடாக பல்வேறு இலக்கிய ஆளுமைகளின் திறமைகளை கலந்துரையாடல் மூலமாகவும், ஆய்வுகள் மூலமாகவும் வெளிக்கொண்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார். இத்தகைய முன்னெடுப்புக்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் திகழ்பவர் லண்டனில் சமூகசேவை மனத்துடன் ‘சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின்’ முன்னைய தலைவராகவும், தற்போதைய லண்டன் தியாகராஜ உற்சவ விழா நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டு வரும் அவரது துணைவர் திரு. தருமேந்திரன் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
இத்தகைய செயற்பாடுகளின் மத்தியில் தமது தந்தையான, ‘ஈழத்துச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர்களின் மூலவராகக் கருதப்படும் சி.வைத்தியலிங்கம் ஞாபகார்த்தமாக’, யாழ் பல்கலைத் தமிழ் வழாகத்தில் தமிழைத் தமது கல்வித்தேர்ச்சிப் பயிற்சியாக (பட்டப்படிப்பு – – Degree) தெரிவுசெய்துள்ள மாணவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாவை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக இட்டுள்ளனர். அதன் மூலமாக வரும் வருமானத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நிதியுதவியினைப் பெறுவதற்கான ஒழுங்குகளும்; செய்துள்ளனர். முப்பத்தாறாயிரம் ரூபா மேலதிகமாக அனுப்பப்பட்டு 2015- 2016 கல்வியாண்டில் இத்திட்டம் தொடங்கவுள்ளது.
மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற முடியும் என்பதனையும் தெரிவிக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு என்றும் அழியாது சிரஞ்சீவியாக இருப்பதுபோன்று இந்த நற்பணியும் அழியாது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஆகக்கூடியது மூன்று சிறுகதைகளை அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
3. சிறுகதைகள் தமிழ் ஒருங்குகுறி(Unicode) அல்லது பாமினி எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுச் சிறுகதைப் போட்டி- 2015’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும்.
4. அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.
6. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும், வானொலியில் ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
8. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
ப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:\
முதலாம் பரிசு - 300 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு - 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
முடிவுத்திகதி: 30.11.2015. இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டி முடிவுகள் 2016 தை மாதம் முதல் வாரம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

காலம்: 10.10.2015 சனிக்கிழமை காலை 1030 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை. | இடம்: Trinity Centre , East Avenue, east Ham, London. தொலைபேசி: 07736 908 421 | 07479 942 681 | 07817 262 980 | 07915 555 458 | மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | மதிய உணவு ஏற்பாடுகளுக்காக உங்கள் வரவை முன்கூட்டியே அறியத்தாருங்கள்! அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: தேவகாந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'குவியம்' இணையத்தள ஆசிரியரும், எழுத்தாளருமான பொன் குலேந்திரன் அவர்களின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தில், அக்டோபர் 7ந்திகதி , 'ஓவியா பதிப்பக' வெளியீடாக வெளிவரவுள்ளது. கனடாவில் 'பீல் தமிழ் முதியோர் சங்கத்தி'ல் வெளியிடப்படுமெனவும், தொகுப்பின் கதைகள் பாரம்பர்யம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்று கூறுகின்றார் நூலாசிரியர் பொன் குலேந்திரன். தொகுப்பிலுள்ள ஒரு கதை ஆசிரியரின் துபாய் நாட்டில் அவரடைந்த அனுபவங்களைச் சார்ந்ததென்றும், நூலின் அட்டையினை நண்பர் புகழேந்தி அவர்கள் தயாரித்திருப்பதாகவும் மேலும் அவர் கூறுகின்றார். நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். பொன் குலேந்திரன் அவர்களுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள்
1. திருவெண்ணைநல்லூர்
2. கிராமம்
3. திருக்கோவிலூர்
4. ஜம்பை - விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு ( தோராயமானது ). மொழி: தமிழ்.
எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து)
வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கை ராகவன்
நாள் : அக்டோபர் 4 2015
தொடக்கம் : காலை 6:30 மணி - பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி - பனுவல் புத்தக விற்பனை நிலையம்
பயணக் கட்டணம் : ரூ.1000 ( நமக்கே நமக்காக தனியாக ஒரு பஸ் - காலை - மதியம் உணவு , தேனீர் , நினைவு பரிசு என எல்லாம் சேர்த்து )
ஆன்லைன் அல்லது பனுவலில் ( திருவான்மியூர் ) முன்பதிவு செய்யலாம்.
http://www.panuval.com/tickets/Archelogial-trip-to-Thirukoilur
Or Watsapp 97890-09666 to book yours.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இடம்: Don Montgomery Community Recreation Centre, 2467 Eglinton Ave. E,
Scarborough, ON M1K 2R1
காலம்: செப்டம்பர் 23, பி.ப 4மணி
ஏற்பாடு: தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்)

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய பாராட்டு விழா ஒன்று எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற இருக்கின்றது.
காலம்: அக்ரோபர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை.
October 16th 2015 - Friday
நேரம்: மாலை 6: 45 P.M
இடம்: BABA Banquet Hall, 3300 McNicoll Avenue, Toronto. On. M1V 5J6.
(Middlefield Rd / McNicoll)
இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
விழாக் குழுவினர்
905 861 9323
416 312 5047
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

காலம் : Sep 15 ,2015 மாலை ஆறு மணி
இடம் : Rainbow villlage , 2466 Eglinton avenue east. 2nd floor party hall
இரவு உணவுடன் நடைபெறும் இந்த சந்திப்புக்கு ஒரு சிறிய கட்டணம் அறவிடப்படும்($15). உங்கள் வருகையை முற்கூட்டியே உறுதிப்படுத்தவும்.நன்றி!
தகவல்: செல்வகுமார் செல்லத்துரை
அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு கலந்துரையாடல் எதிர்வரும் 20 -09-2015 ஆம் திகதி ஞாயிறு கனடாவில், 430 Mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough , Ontario முகவரியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் திருவாளர்கள் தேவகாந்தன், என். கே. மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: திரு. சபேசன் 4168011654 | e mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
ஒருங்கிணைப்பு: சின்னையா சிவநேசன்
"அன்றாட தமிழாக்கத்தின் இன்றைய நிலவரம்" - உஷா மதிவாணன்
"தமிழாக்கத்தில் வாசகர்களின் எதிர்பார்ப்புகள்" - சுல்பிகா இஸ்மயில்
"புனைவிலக்கிய தமிழாக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகள் " - என்.கே.மகாலிங்கம்
"தமிழாக்கம்: வாசகர்களின் அவதானிப்புகள்" - அருண்மொழிவர்மன்
"தமிழாக்கம்: கண்ணில் பட்டதும் காதில் விழுந்ததும்" - மணி வேலுப்பிள்ளை
நாள்: 26-09-2015 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை |இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
3A, 5637, Finch Avenue East, | Scarborough, |M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
12-09-2015 - சனிக்கிழமை, இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர், கன்னிமாரா நூலகம் எதிரில். மாலை 4 மணிக்கு.
சிறப்பு அழைப்பாளர்கள்:
செயல்பாட்டாளர் சிவகாமி IAS
எழுத்தாளர் அழகிய பெரியவன்
பத்திரிகையாளர் அசோகன் (அந்திமழை)
நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தமிழ் ஸ்டுடியோவின் 67வது குறும்பட வட்டத்தில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்பட்டு, படச்சுருளின் தலித் சினிமா சிறப்பிதழ் பற்றிய திறனாய்வுக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. படச்சுருள் வாசகர்களும், தமிழ் ஸ்டுடியோ பார்வையாளர்களும், குறும்பட இயக்குனர்களும் இந்த நிகழ்வில் பரவலாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அரங்கம் சிறிதுதான் என்றாலும், அம்பேத்கர் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கூட வேண்டும். அப்படி பெருங்கூட்டம் கூடினால், இன்னொரு முறை பெரிய திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் ஸ்டுடியோ திரையிடும். நண்பர்கள் சனிக்கிழமை மாலை மறக்காமல் குறும்பட வட்டத்திற்கு வந்துவிடுங்கள்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

‘தேடல்களின் வெளிப்பாடாகவும்,சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும் ‘கட்டைவிரல்’ கட்டுரைகளைப் படிக்க முடிந்தது . இலங்கை வீரகேசரியில் வெளியான பல கட்டுரைகள் கட்டை விரலுக்கு அழகு சேர்ப்பதாகவும், ‘தடுத்திடுவார்கள் இன அழிப்பை’,‘போர்க்காலக் காதல்’ போன்ற கவிதைகள் கடந்த கால,சமகால நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டும் சிறந்த கவிதைகள்’ என முன்னாள் லண்டன் தெற்கு லண்டன் சதாக் பகுதியின் நகரசபை முதல்வரும்,தற்போதைய நகரசபை உறுப்பினருமான செல்வி எலிசா மன் அவர்கள் லண்டன் ஈஸ்ற்ஹாம் ரினிற்ரி மண்டபத்தில் மிக அண்மையில் பாரீசிலிருந்து வருகைதந்த திவ்வியநாதனின் நூல்; வெளியீட்டின்போது, தனது தலைமையுரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் பேசுகையில்: ‘ கட்டைவிரல்’ தொகுப்பில் கவிதை, கட்டுரை,சமையற்குறிப்புகள் என விரிந்து கிடப்பது பாராட்டுக்குரியது. திவ்வியநாதனின் இத்தகைய உழைப்பு தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய அளப்பரிய செயற்பாடு. மேலும் இத்தகைய ஈடுபாடு; தொடரவேண்டுமென வாழ்த்துக் கூறினார்;.’
‘ நூலசிரியர் திவ்வியநாதன் பல புத்தங்களின்; தேடல்களினால் பெற்றுக் கொண்ட அறிவையும்,அவரது சொந்த அனுபவங்களையும் ஒன்று சோர்த்து இக் ‘கட்டைவிரலை’ப் படைத்துள்ளார். இக் ‘கட்டைவிரல்’ ஆங்கில மொழியில் வெளிவருமேயானால் மேலும் பயனுள்ளதாக அமையும்’ என இலக்கிய ஆர்வலரும்,இரசாயனப் பொறியியலாளருமான திரு ஜெயதீசன் தனது உரையில் தெரிவித்தார்.’