04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
ஹிந்தி சினிமாவை எப்போதும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது தமிழ் ஒளிப்பதிவாளர்கள்தான். உலகில் ஒளிப்பதிவை பொறுத்தவரை தமிழர்களின் தொழில்நுட்பத்திறன் வியக்கத்தக்கது. அதில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். எந்நேரமும் விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். அவருக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டுக்காக தமிழ் ஸ்டுடியோ நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை இயக்குநர்களோடு மட்டுமே கலந்துரையாடியுள்ளோம். முதல்முறையாக பியூர் சினிமா புத்தக அங்காடியில் ஒளிப்பதிவாளரோடு ஒரு கலந்துரையாடல். தமிழில் ஆட்டோகிராப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும், ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற பர்ஃபி, ராம் லீலா போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன், தற்போது மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் எதிர்வரும் ஞாயிறு பியூர் சினிமா புத்தக அங்காடியில் பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், சினிமா ரசனையில் ஒளிப்பதிவின் பங்கு, ஒளியமைப்பு குறித்தும், அதன் தேவை குறித்தும் ரவிவர்மனோடு உரையாடலாம். அனைவரும் வருக...