04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
ஹிந்தி சினிமாவை எப்போதும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது தமிழ் ஒளிப்பதிவாளர்கள்தான். உலகில் ஒளிப்பதிவை பொறுத்தவரை தமிழர்களின் தொழில்நுட்பத்திறன் வியக்கத்தக்கது. அதில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். எந்நேரமும் விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். அவருக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டுக்காக தமிழ் ஸ்டுடியோ நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை இயக்குநர்களோடு மட்டுமே கலந்துரையாடியுள்ளோம். முதல்முறையாக பியூர் சினிமா புத்தக அங்காடியில் ஒளிப்பதிவாளரோடு ஒரு கலந்துரையாடல். தமிழில் ஆட்டோகிராப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும், ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற பர்ஃபி, ராம் லீலா போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன், தற்போது மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் எதிர்வரும் ஞாயிறு பியூர் சினிமா புத்தக அங்காடியில் பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், சினிமா ரசனையில் ஒளிப்பதிவின் பங்கு, ஒளியமைப்பு குறித்தும், அதன் தேவை குறித்தும் ரவிவர்மனோடு உரையாடலாம். அனைவரும் வருக...
குறிப்பு: நிகழ்விற்கு வரவிரும்பும் நண்பர்கள் முகநூலின் Event Invite இல் வருகிறேன் என்றோ அல்லது கீழ்க்கண்ட எண்ணிற்கு அழைத்தோ உங்களின் வருகையை பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பெருந்திரளான நண்பர்கள் வருவதால், பியூர் சினிமா அரங்கமே போதவில்லை. அதிகமான நண்பர்கள் வருகிறோம் என்பதை உறுதிப்படுத்தினால், மூன்றாவது மாடியில் இருக்கும் பெரிய அரங்கை முன்னமே தயார் செய்துவிடுவோம். அங்கே 300 நண்பர்கள் வரை அமரலாம். எனவே உங்கள் வருகையை உறுதிப்படுத்தினால் அனைவருக்கும் இருக்கையை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
வருகையை உறுதிப்படுத்த: 9566266036
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.