கருணாகரனின் “இப்படி ஒரு காலம்“ நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு “மதக வன்னிய“ (Mathaka Wanniya)
கருணாகரன் ( Sivarasa Karunagaran ) எழுதிய “இப்படி ஒரு காலம்“ எனும் நூல் , “மதக வன்னிய“ (Mathaka Wanniya) எனும் பெயரில் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைகழக மாணவி சிவலிங்கம் அனுஷா என்பவர் இந்த நூலினை மொழிபெயர்த்துள்ளார். இதனுடைய சிறப்பு நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது நடைபெற்றது.
கிளிநொச்சி நகரின் தோற்றமும் அதன் அழிவுகளும் , போரின் வலி , அந்த நாட்களின் அழிவுச் சுவடுகள் , செம்மணி, ஆனையிறவு, இயக்கச்சி, விசுவமடு, கிளாலி, அக்கராயன், கண்டாவளை போன்ற இடங்களின் போராட்டகால நிகழ்வுகளும் வாழ்க்கையும் எனப் பலவற்றை எடுத்து சொல்லும் இந்த நூல் “இப்படி ஒரு காலம்“ எனும் தலைப்பில் 2014 இல் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கான பெரிய பரப்புரை முற்போக்கு சக்திகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . சிங்கள மொழிபேசும் இளைய தலைமுறையினருக்கு இலங்கை அரசியலின் ஒரு குறிப்பிட்ட காலத்தை - விளங்கிக் கொள்ள கடினமான காலத்தை - அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது எனவும் இனவாதத்திற்கு எதிரான அரசியல் உள்ளடக்கத்தை வாசிப்பின் மூலமாக தெரிந்துகொள்ள இப்புத்தகம் வாய்ப்பளிக்கிறது என்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைய தலைமுறையினர் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 500 - 600 பேருக்கு மேலானவர்கள் இப்புத்தம் சார்ந்து நடத்தப் பட்டநிகழ்வில் பங்கு கொண்டுள்ளனர். பாடல், புத்தக வாசிப்பு, கவிதையுடன் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.. அழகான நிகழ்வாக இருந்தது .
karunagaran vasanthy <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>