கனடா நாட்டின் தலைமை அமைச்சருக்கு நன்றி

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளைச் சிறப்பிக்கும் அழகைப் பாருங்கள்! உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். என் உள்ளங் கவர்ந்த நாடுகளுள் கனடாவுக்கு முதன்மை இடம் உண்டு. அந்த நாட்டில் மாந்தநேயம் கொண்டவர்களைத் திரும்பிய திசையெல்லாம் காணலாம். மாந்தர்கள் மட்டும் என்று இல்லாமல் விலங்குகளையும் நேசித்து ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் நடவடிக்கைகளை அங்குச் சென்றால் நேரில் பார்க்கலாம். இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு ஆதரவுகாட்டி, அடைக்கலம் தந்து செம்மாந்து வாழ இந்த நாடு வழிவகை செய்ததை ஒவ்வொரு தமிழரும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும். அந்த நாட்டின் தலைமை அமைச்சர் தமிழர்களையும், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் போற்றுவதில் தன்னிகரற்று விளங்குபவர். தமிழ்மொழி மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் திருவிழாவுக்கு வாழ்த்துரைத்த தலைமை அமைச்சர் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் நன்றிமலர்கள் உரியதாகட்டும்.
பார்க்கவும்: https://www.facebook.com/muelangovan
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

[உரிய நேரத்தில் எமக்குக் கிடைக்காததால் இவ்வறிவித்தல் உரிய நேரத்தில் பிரசுரமாகத்தவறி விட்டது. 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிவித்தல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம் உரிய நேரத்தில் இதனைத்தவற விட்டமைக்காக வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இவ்வறிவித்தல் இங்கு பிரசுரமாகின்றது.- பதிவுகள்-]
‘சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்புத் தொடர்ந்து வருடந்தோறும் ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியை முன்னெடுத்து 25 வருடங்களை பூர்த்திசெய்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். கணபதி வந்தனம், கவித்துவம், கீர்த்தனம், நவீன வடிவில் அமைந்த வித்தியாசமான பூ நடனம், கிருஷ்ண பஜனை, செம்பு நடனம், குறத்தி நடனம், சிவஸ்துதி நடனம், தில்லானா என நாட்டியத்தின் பல்வேறு வடிவங்களை இந்த மேடையில் நடன ஆசிரியர்கள், அவர்களின்; மாணவர்களென தொடர்ச்சியாக முன்னெடுப்பதை சிறந்த ஒரு நாட்டியக் கலையின் வளர்ச்சியாக என்னால் அவதானிக்க முடிகின்றது’ என கீழைத்தேச நுண்கலை அமைப்பின் தலைவியும் ( ழுநுடீடு), நாட்டியக் கோகிலவாணியுமான ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் இடம்பெற்ற வெள்ளிவிழா நாட்டிய நிகழ்வின்போது தனது பிரதமவிருந்தினர் உரையில் தெரிவித்தார்.
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
வெள்ளி 13 மேற்கத்திய மூட நம்பிக்கையின்படி ஒரு துரதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், ஜனவரி 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை. ஆனால் அத்தினம் மிசிசாகா ஒன்றாரியோவில் உள்ள பீல் தமிழ் முதியோர்; சங்கத்திற்கு; ஒரு முக்கியமான நல்ல நாளாகும்.. இலங்கையில் வடக்கு மாகாணத்தின் கௌரவ முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், பீல் முது தமிழ்ர் சங்கத்திற்கு இரு மணி நேரத்துக்கு வருகைதந்து, உறுப்பினர்களோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். இச் சங்கம் 1999 இல் நிறுவப்பட்டு 900 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தகுதியும், திறமையான முதியவர்களை உள்ளடக்கியது. கௌரவ முதலமைச்சர் தமிழ் தேசிய உடையான வேட்டியோடும் நெற்றியில் குங்குமப்; பொட்டோடும் சமூகம் தந்து, தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டினார்.. அவரது முகத்தில் ஆன்மீகத் தன்மை பிரதிபலித்தது. குத்துவிளக்கேற்றி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, ; தேசிய க னேடிய கீதம் மற்றும் தமிழ் கீதம் பாடியபின் நிகழ்வு ஆரம்பித்தது, சில அறிமுக உரைகளின் பின், சங்கத்தின் தலைவர் வடமாகாணத்தில் உள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும்; பிரச்சனைகளை வரவேற்பு உரையில் குறிப்பிட்டுப் பேசினார்
என் நேசத்துக்குரியவருக்கு, எனது இந்த வருடத்தின் முதல் புத்தகமாக, இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பக வெளியீடாக 'இறுதி மணித்தியாலம்' எனும் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இந்த வாரம் வெளிவருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பிற்கு காத்திரமானதோர் முன்னுரையை மதிப்பிற்கும், நேசத்திற்குமுரி ய எழுத்தாளர் கருணாகரன் எழுதியிருக்கிறார். இத் தொகுப்பை சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், 'வம்சி' பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம். 

‘இலங்கையிலும்;, அகஸ்தியர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து வந்ததின் பின்னரும் அவருடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்ததையும்; தனது ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்’ என்ற தனது நூலுக்கு அகஸ்தியர் அணிந்துரை வழங்கி அதனை நூலாக்கம் பெறுவதற்கு உதவினார் என்றும்’ லண்டன் ஹரோ நகராட்சி மன்ற உறுப்பினர் மண்டபத்தில் இடம்பெற்ற ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியரின் 20ஆம் ஆண்டு நிறைவும், நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ நூல் வெளியீட்டில் உரையாற்றும்போது லண்டன்; புதினம் ராஜகோபால் அவர்கள் தெரிவித்தார். அகஸ்தியரின் துணைவியான நவமணியின் பிரசன்னம் தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவதாயும், அகஸ்தியரின் முற்போக்கு எழுத்துக்களுக்கு நவமணி பக்கபலமாகத் திகழ்ந்தாகவும், அவரின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வத்துடன் செயல்படுவதாகவும்’ மேலும் அவர் தெரிவித்தார். 







தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈஸ்ட்ஹாமிலுள்ள அக்ஷயா மண்டபத்தில் நிறைவேறியது. பிரபல எழுத்தாளர் முல்லைஅமுதன் ஜெயராணி தம்பதிகளின் மூத்த புதல்வி கார்த்திகா "சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்" என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும் சமர்ப்பணம் செய்தார்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









