அண்ணாமலைக் கனடா வளாகம் மாணவர் அமைப்பு: முத்தமிழ் விழா!

தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
‘ஈழத்தின் இசை மரபு குறித்தும், நடன மரபு குறித்தும், ஓவிய மரபு குறித்தும் ஏனைய நுண் கலைகள் பற்றியதுமான முறைமையான வரலாறு எழுதப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும். ஈழத்து இலக்கிய வரலாறு ஒழுங்குமுறையான வரலாற்று நெறிக்கு உட்படுத்தப்பட்டதுபோல ஏனைய துறைகளில் அந்தச் சாதனை நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நோர்காணல் தொகுப்பு ஈழத்தின் இசை, நாடக, நாட்டிய, ஓவிய, இலக்கிய, அரசியல், மருத்துவ, தொழில்முயற்சி வரலாற்றின் மிக நேர்த்தியான பதிவுகளைக் கொண்டு காணப்படுவது பாராட்டத்தக்க எழுத்து முயற்சியாகும்’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ஈலிங் நூல்நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.
ஈலிங் நூல் நிலையத்தைச் சார்ந்த திருமதி சாந்தி அகிலன் ஒழுங்கு செய்திருந்த ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் மு. நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: ‘லண்டனில் வாழும் 33 பெண் ஆளுமைகளின் தேர்ந்த நேர்காணல்களின் தொகுப்பாக இந்த நூல் சிறப்புப் பெறுகின்றது. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் இசைப் புலமை சார்ந்த தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா போன்றவர்களின் நேர்காணல்கள் அவர்கள் இருவரின் மறைவின் பின் கூடிய அர்த்தம், முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது. இசை, நாட்டியம் போன்ற துறைகளில் நேர்காணல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ள 12 பெண் ஆளுமைகளின் பல்வேறுபட்ட குடும்பப் பின்னணி, இசை நாட்டியப் பின்புலம், வௌtவேறுபட்ட சமயப் பின்னணிகள், செழுமை மிக்க இசை நாட்டிய வல்லுநர்களிடம் பயின்றமை போன்ற வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

- யூலை 9, 2017 அன்று 'டொராண்டோ'வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 'யுகதர்மம்' நூலின் வெளியீடு நடைபெறவுள்ளது. அன்று மாலை 3800 Kingston Road , Toronto என்னும் முகவரியில் அமைந்துள்ள Scarborough Village Community Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அது பற்றிய அறிவித்தலை என் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நிகழ்வு வெற்றி பெற வாழத்துகள். -

25-06-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிறு மாலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
எஸ்.ஆர்.பிரபு வணிக வெற்றியோடு நல்ல தரமான படங்கள் எடுப்பதிலும் நல்லார்வம் கொண்டவர். அண்மையில் வெளியாகி மக்களாலும் பாராட்டப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவரே. வெளியானது முதல் பல்வேறு விருதுகளையும் இப்படம் பெற்று வருகிறது.

சர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2016’ விழா இம் மாதம் 18 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது 'இறுதி மணித்தியாலம்' எனும் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

மல்லிகை ஆசிரியர் டொமினி ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் 27ந் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 வரை COLOMBO15. MATTAKULIYA CROW ISLAND BEACH PARK யில் ஜீவா அவர்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேமன்கவி தொகுத்த 'ஜீவா பதிவுகள்-90'' எனும் ஆவணத் தொகுப்பு அவருக்குக் கையளிக்கப்படும். அவரைத் தொலைபேசி யில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 27ந் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள் பின்வரும் இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளலாம்.. குறுஞ்செய்தி மூலம் ( தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்குத் அனுப்பலாம்
மேமன்கவி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

‘லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு பெண்ணியச் செயற்பாட்டாளர்களையும், எழுத்தாளர்களையும், ஆசிரியர்களையும், கலைஞர்களையும் கொண்டு பரந்த ஜனநாயக அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும். சமூகத்தில் நிலவும் பெண்களுக்கெதிரான பாரபட்சமான நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்;துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்’ என்று கவிஞரும் எழுத்தாளருமான செல்வி உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) தலைமையில் லண்டனில் யூன் மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற பெண்கள் அமர்வில் தலைமை உரையாற்றியபோது குறிப்பிட்டார்.
பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ :இயக்குனர் அகத்தியனுடன் கலந்துரையாடல்
27-05-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பலவேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை மாலை இயக்குனர் அகத்தியன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கிறார். தமிழில் திரைக்கதை இயக்கத்திற்காக முதன் முதலில் தேசிய விருது பெற்றவர் இயக்குனர் அகத்தியன். காதல் கோட்டை திரைப்படம் வாயிலாக மாபெரும் ட்ரெண்ட் செட்டராக மாறியவர். அதன் பின்னணியை வைத்து தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வெளியானது. கோகுலத்தில் சீதை அதன் கதைக்காகவும் எடுக்கப்பட்ட விதத்திற்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குனர் அகத்தியனுடன், தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்கள், புதிய வகை கதை சொல்லும் யுத்திகள், திரைக்கதை அமைப்பு குறித்து நண்பர்கள் கலந்துரையாடலாம்.
வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்” சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.
தயவுசெய்து அந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வலிகள் அறிந்து உங்களினால் முடிந்த ஆதரவினை நல்குவதோடு, மே மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை மெல்பேர்னில் மாலை 6.30 மணிக்கு, Hungarian Community Centre மண்டபத்திலும், சிட்னியில் மாலை 7 மணிக்கு, Wentworthville Redgum Hall மண்டபத்திலும், பேர்த் நகரில் மாலை 7.15 மணிக்கு, Mandogalup ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டபத்திலும் முழுக்குடும்பத்துடன் வந்து இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளை மீட்டி, தொடரும் இலட்சிய பயணத்தில் இணைந்து கொள்வோம்!! 2 009யில் எம் தமிழ்மக்கள் மீது இடம்பெற்ற அப்பேரவலத்தையும், போர்குற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம். ! உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார்.
மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ( விமோசனம் தொகுப்பு ), சாயத்திரை நாவல் ( வே.பொன்னுசாமி ), அபூர்வன்ராஜா ( மற்றும் சிலர் நாவல் ) வீரபாலன் ( கோமணம் நாவல் ) திருமுத்துலிங்கம் ( சமையலறைக்கலயங்கள் நாவல் ) இராமையா ( ஓ ..செகந்திராபாத் ) நித்யா, விசயராணி (சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ( மந்திரச்சிமிழ் ), பற்றிப் பேசினர். சுப்ரபாரதிமணியனின் கதைகளின் பொதுவான த்ன்மை பற்றி கண்மணி ராசாஅ உரையாற்றினார் . பெ.சரவணன் நன்றி கூறினார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும் என்றார் முன்னேற்றப் பதிப்பகம் உரிமையாளர் வீரபாலன்.
நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.
தமிழ்க் கவிதையின் மரபுசார் வடிவங்கள் - தமிழ்ப் யாப்பு வடிவங்கள் பற்றிய அறிமுகமும் நிகழ்வரங்கும்

வணக்கம், நெய்தல் எனும் பெயரில் கவிதை இதழ் வரவுள்ளதால் அதற்காக கவிதை,ஹைக்கூ,கவிதைகள் /கவிதை இதழ்கள் கட்டுரை,கவிதை நூல் அறிமுகம் என அனுப்பலாம்.நூல் அறிமுகத்திற்கு இரண்டு பிரதிகள் அனுப்பவேண்டும்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அசோகமித்திரன் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓவியர் கே.கிருஷ்ணராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கவிஞர் மு.புஷ்பராஜன் இங்கு பிரித்தானியாவிலிருந்து விட்டு போய் நிரந்தரமாக கனடாவில் வசிக்கப் போவதான செய்தியை அறிவித்த அவர் அதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். குடியுரிமை வதிவிடப் பிரச்சினை காரணாமாக, கனடாவில் வதியும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் புஷ்பராஜன் எப்போதாவது ஒரு நாள் அவர்களிடம் போய் சேருவார் என்பதை நாம் எதிர்பார்த்திருந்தாலும் அந்நாள் இவ்வளவு சீக்கிரம் வந்து சேரும் என்பதினை நாம் எவருமே எதிர்பார்க்கவில்லை. இனி அவர் எம்மோடு இல்லை. எமது இலக்கிய சந்திப்புக்கள், அரசியல் கலந்துரையாடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், எமது ரெட்மூன் மாதாந்த திரைப்பட நிகழ்வுகள் எதிலுமே இனி இவரைப் பார்க்க முடியாது. மனதை ஏதோ ஒரு வெறுமை அப்பிக் கொண்டது. அசோகமித்திரன் மறைந்து மூன்றாவது நாள் 25.03.17 அன்று ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள சிந்துமஹால் உணவு விடுதியின் கீழ்த்தளத்தில் ஒன்று கூடினோம். அன்றைய தினம் அங்கு மு.புஷ்பராஜன், பேராசிரியர் மு.நித்தியானந்தன், ஓவியர் கே.கிருஷ்ணராஜா, யமுனா ராஜேந்திரன் இவர்களுடன் தோழர்கள் வேலு, சேனன், எம்.பௌசர், கோகுலரூபன், சாந்தன், கஜன் காம்ப்ளர், செபஸ்டியன் என பத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆர்வலர்களும், அரசியல், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் ஒரேயொரு பெண் பிரதிநிதியாக தோழர் பாரதி மட்டுமே கலந்து கொண்டார் என்பதினையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என கருதுகின்றேன்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ' ஞானம்' இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன ஆகியோர் வருகை தருகின்றனர். எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் விழா நடைபெறும் இடம்: Mulgrave Stirling Theological College Auditorium மண்டபம் ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170) அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலாக எழுத்தாளர் விழா நடைபெற்றுவருகிறது.
கடந்த காலங்களில் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் நடைபெற்றிருக்கும் தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்ட, மீண்டும் மெல்பனில் சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. குறிப்பிட்ட (மாநில) நகரங்களிலுமிருந்தும் சிலர் வருகைதரவுள்ளனர்.
சமீபத்தில் அல்லது முன்னர் தாம் படித்ததும் தமக்குப்பிடித்ததுமான ஒரு படைப்பிலக்கிய நூல் அல்லது மொழிபெயர்ப்பு, பயண இலக்கியம் முதலான துறைகளில் எழுதப்பட்ட ஒரு நூல் பற்றி பேசும் வகையில் வாசிப்பு அரங்கு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. வாசிப்பு அரங்கிற்கு கலைஞரும் எழுத்தாளருமான திரு. மாவை நித்தியானந்தன் தலைமைதாங்குவார்.

மாமேதை மாக்சின் 200ஆம் ஆண்டு துவக்கத்தை முன்வைத்து பாரதி புத்தகாலயம் மார்க்சி்ஸின் தேர்வு நூல்கள் (மொத்தம் 12) 3000த்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் ரூ.3000. முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.1500க்கு கிடைக்கும். தேவைக்கு 94449 60935 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். மேலும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பலாம்.
பாரதி புத்தகாலயம்
7இ இளங்கோ சாலை தேனாம்பேட்டை சென்னை 18
044 24332424
பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை தேனாம்பேட்டை
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும் 2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.
ஏப்ரில் 2, 2017 ஞாயிற்றுக் கிழமை இகுருவி வருடாந்த விழாவில் இகுருவி இதழின் எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘கனடா தமிழர் வரலாறு’ ( Canadian Tamils' History) என்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பு, நூல் வடிவமாக வெளியிடப்பட்டது. இந்த இகுருவி விழாவில் இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், இலங்கையில் இருந்து சின்னத்தம்பி குணசீலன் ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
குரு அரவிந்தனின் ‘கனடா தமிழர் வரலாறு’ நூல் வெளியிடப்பட்ட போது சிறப்புப் பிரதிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ரொறன்ரோ நகராட்சி மன்ற உறுப்பினர் நீதன் சண் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் வெளிவந்த இந்த நூலில் குரு அரவிந்தனனின் ‘பிறீடம் இஸ் பிறி இன் கனடா’ என்ற கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. கனடாவின் 150 வது பிறந்த தினத்தை 2017 இல் கொண்டாடும் கனடிய அரசு பல்கலாச்சார சமூகங்களிடையே இருந்து தெரிவு செய்யப்பட்ட கதைகளில் தமிழ் சமூகத்தைப் பிரதிபலிக்கும் குரு அரவிந்தனின் கதையும் 150 கதைகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 150 வது பிறந்த தினத்தைக் கனடிய அரசுகொண்டாடும் இந்த வேளையில் தமிழர்களின் புலம் பெயர்ந்த வரலாற்றை, அவர்களின் கடந்த 40 வருடகால பங்களிப்பைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் முடிந்த அளவு இடம் பெறற்றிருக்கின்றன. கனடா தமிழர் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.
வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம் கடந்த வெள்ளியன்று 14 ஆம் திகதி அமெரிக்காவில் வேர்ஜினியா மாநில மருத்துவமனையில் காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவருக்கு வயது 83. 1966 ஆம் ஆண்டு முதல், ஆரம்பத்தில் வீரகேசரியின் இணை ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் 1983 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார். 1983 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். அதன்பின்னர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். அங்கு நீண்டகாலம் பொஸ்டன் மாநிலத்தில் வசித்தார். அவருடைய அன்புத்துணைவியாரும் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் அவர்களுக்கு இரண்டு பேரக்குழந்தைகள். இலங்கையின் வடபுலத்தில் மாதகலில் பிறந்திருக்கும் சிவப்பிரகாசம் 1958 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார பட்டதாரியானவர். அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம் மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார். பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் , லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகியது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் உங்கள் பார்வைக்கு வருகிறது. www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம்.
சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம், உட்பட பல பதிவுகளை அவ்வப்போது பூமராங்கில் பார்க்கமுடியும்.
இதனை படிப்பவர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். தங்கள் எண்ணங்களை பின்வரும் மின்னஞ்சல்கள் ஊடாக தெரிவிக்கலாம்.
ஜே.கே.
பூமராங் இணையத்தள நிர்வாகி
தொடர்புகளுக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா, இம்முறை மெல்பனில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017 ) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு Mulgrave Stirling Theological College Auditorium மண்டபத்தில் ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170) நடைபெறும்.
மெல்பன், சிட்னி, கன்பரா, பிறிஸ்பேர்ண், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களிலிருந்து வருகைதரும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குபற்றும் இவ்விழாவில் கருத்தரங்கு, மொழிபெயர்ப்பரங்கு, வாசிப்பு அனுபவப்பகிர்வரங்கு, குறும்பட - ஆவணப்படக்காட்சி என்பனவும் இடம்பெறும்.
இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு சங்கத்தின் உறுப்பினர்களையும், கலை , இலக்கிய, சமூக ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஆசிரியர்களையும் சங்கம் அழைக்கின்றது.
நிகழ்ச்சி இலவசம். நிகழ்ச்சிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் தமது பெயர்களை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு (25-04-2017) முன்னர் பதிவுசெய்துகொள்ளவும். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் செயற்குழு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.