பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ :இயக்குனர் அகத்தியனுடன் கலந்துரையாடல்
27-05-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பலவேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை மாலை இயக்குனர் அகத்தியன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கிறார். தமிழில் திரைக்கதை இயக்கத்திற்காக முதன் முதலில் தேசிய விருது பெற்றவர் இயக்குனர் அகத்தியன். காதல் கோட்டை திரைப்படம் வாயிலாக மாபெரும் ட்ரெண்ட் செட்டராக மாறியவர். அதன் பின்னணியை வைத்து தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வெளியானது. கோகுலத்தில் சீதை அதன் கதைக்காகவும் எடுக்கப்பட்ட விதத்திற்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குனர் அகத்தியனுடன், தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்கள், புதிய வகை கதை சொல்லும் யுத்திகள், திரைக்கதை அமைப்பு குறித்து நண்பர்கள் கலந்துரையாடலாம்.
ஒளிப்பதிவாளர் & நடிகர் இளவரசுடன் கலந்துரையாடல்
28-05-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக கொண்டாடி வரும் தமிழ் சினிமா நூற்றாண்டில் ஞாயிறு நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. சீமான் இயக்கத்தில் வெளியான பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இளவரசன் தொடர்ந்து நடிப்பு துறையில் கால்பதித்து தமிழின் மிக சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிப்பு, ஒளிப்பதிவு, நடிப்பின் நுட்பங்கள், நடிகனுக்கு தேவையான கூறுகள், நடிப்பிற்கான தேவைகள் குறித்து இளவரசுடன் கலந்துரையாடலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக...
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
www.thamizhstudio.com