கிளிநொச்சி: "ரசஞானி" லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் கிளிநொச்சியில் திரையிடல்!

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் – "ரசஞானி" கிளிநொச்சியில் திரையிடப்படவுள்ளது. கிளிநொச்சி, பழைய ஆஸ்பத்திரி மருந்தகத்துக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தப் படத்தை இயக்கிய 'மறுவளம்' எஸ். கிருஸ்ணமூர்த்தியும் கலந்து கொள்கிறார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் முருகபூபதி நீண்டகாலமாக வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரையில் 25 புத்தகங்களுக்கு மேல் பிரசுரமாகியுள்ளன. பல நூற்றுக்கணக்கான பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கும் முருகபூபதி, சமூகச் செயற்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார். இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.



சிவாஜி ஒரு பண்பாட்டியற் குறிப்பு - ஜெயகாந்தன் உலகப்பொது மனிதன் ஆகிய ஆவணப்படங்களை தயாரித்தவரும், சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சிக்காக குறும்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் இயக்கித் தயாரித்தவருமான எழுத்தாளர் 'கனடா' மூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். 'கனடா' மூர்த்தி அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 06-01-2018 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பனில்
Dr. Jayanthisri Balakrishnan is one of Tamil Nadu’s renowned mental health counselor and motivational speaker. Last year, she visited 18 war-impacted regions in Sri Lanka, and provided counsel to widows, teachers, and students who were impacted by war. She gave a poignant and powerful oration to the attendees in an effort to heal the psychological trauma experienced by the community members organized by Puthiya Velicham.

ஜனவரியில் இலங்கையின் வடகிழக்கில் கல்வி, விவசாயம் சம்பந்தமாக நடைபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் விவசாயிக்களுக்காக நடைபெறவுள்ள பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்குபற்றவுள்ள தகவலை முனைவர் தாரணி அவர்கள் அறியத்தந்திருந்தார். அவை பற்றிய அவர் அனுப்பிய விபரங்களைக் கீழே அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன். இவர்களது திட்டம் பூரண வெற்றியடைய வாழ்த்துகள்!
பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.


அண்மையில் 28-10-2017 அன்று மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர். கல்லூரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். 

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ 23-11-2017 அன்று அதாவது நாளை 10வதுஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ கடந்த வந்த பாதை உங்களுக்காக...



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









