03-12-2017, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு., பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறது. ஒரு பகுதியாக திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலை தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் இயக்குனர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. கேளடி கண்மணி, ஆசை, ரிதம் என தமிழ் சினிமாவில் கதையின் மையத்தை ரிதமேட்டிக்காக அணுகியவர் இயக்குனர் வஸந்த். சினிமா உருவாக்கம் குறித்தும், நூற்றாண்டில் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை குறித்தும் இயக்குனர் வஸந்த் எஸ் சாய் அவர்களுடன் கலந்துரையாட அவசியம் வாருங்கள்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
www.thamizhstudio.com