இடம்: 08 Shadlock St. Unit 5A Markham, On. L3S 3K9 (On Steels Ave E between Middlefield Rd and Markham Road)
திகதி: ஞாயிறு, ஒக்டோபர் 22, 2017
நேரம்: பி.ப 3.00 – 5.30
ஆர்வமுள்ள அனைவரையும் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து தேனுகாவுடனான கருத்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நூலுக்கான குறைந்தபட்ச அன்பளிப்பு: $ 40.00
யாழ். இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடாவும் நூலக நிறுவனமும்
தொடர்பு: அருண்மொழிவர்மன்: 416 854 6768; தயாநிதி: 647 298 1894; பிரேமச்சந்திரா 647 779 3502
நிகழ்ச்சி நிரல்
(1) உலகம் பலவிதம் நூல் அறிமுகமும் வெளியீடும் (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் இந்து சாதன எழுத்துக்கள், பதிப்பாசிரியர் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ் இந்துக் கல்லூரி 125ம் ஆண்டுவிழா வெளியீடு)
வரவேற்புரை: அருண்மொழிவர்மன்
தலைமை உரை: பேராசிரியர் சேரன்,
நூல் வெளியீடு
பேச்சாளர்கள்:
1.பேராசிரியர்,நா.சுப்பிரமணியன்: ம .வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் நாவல்களும் தமிழ் உரைநடையும்
2. க.சண்முகலிங்கம். சமூகவியலாளர், முன்னாள் தமிழ் விவகார,,இந்து கலாசார அமைச்சின் செயலாளர், இலங்கை:
சமூகவியல்,,பார்வையில் ம .வே .திருஞானசம்பந்தப்பிள்ளையின் படைப்புகள்
3.,கலாநிதி மைதிலி தயாநிதி: காலனியம்,காலனிய எதிர்ப்பு பின்னணியில் ம.வே.,திருஞானசம்பந்தப்பிள்ளையின் பத்திகளில் பெண்குறித்த கருத்துக்கள்
4. ஆ. சிவநேசச்செல்வன். முன்னாள் ஆசிரியர்,வீரகேசரி,தினக்குரல்: பழைய இந்து சாதனம் இதழ்களை எவ்வாறு காப்பகப்படுத்தினோம்?
5. வ.ந.கிரிதரன். எழுத்தாளர், ஆசிரியர் ,பதிவுகள் இணைய இதழ்: இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி(ம .வே . திருஞானசம்பந்தப்பிள்ளை படைப்புகளை முன் வைத்து)
6. எஸ்.கே.விக்னேஸ்வரன். முன்னாள் முகாமைத்துவ ஆசிரியர், சரிநிகர் வார இதழ்: பத்திரிகையாளராகவும் , பத்தி எழுத்தாளராகவும் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை
கருத்துப் பரிமாற்றம்
நன்றி உரை,–,அருண்மொழிவர்மன்
யாழ்ப்பாணத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளரும், படைப்பாளியுமான ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை (1885-1955) அவர்கள் அப்போது வெளிவந்த இந்துசாதனம் பத்திரிகையில் எழுதிய ஆக்கங்களின் முழுத்தொகுப்பு நூலின் அறிமுகமும் வெளியீடும் எதிர்வரும் 22ம் திகதி மாலை யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் (கனடா) சங்கம் மற்றும் நூலக நிறுவனம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 35 ஆண்டுகள்(1912-1947) யாழ்.இந்துக் கல்லூரி ஆசிரியராகவும், அதே நேரத்தில் 40 ஆண்டுகள் (1912-1951) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்து சாதனம் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் இயங்கிவந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் சிறந்த ஈழத்துத் தமிழ் உரை நடை வல்லாளர், நாடகர், நாவலாசிரியர் மட்டுமல்ல அரசியல் சமூகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்களையும் தொடர்ச்சியாக எழுதிவந்த ஒரு சிறந்த பத்தி எழுத்தாளரும் கூட. இந்துசாதனம் என்ற பத்திரிகையூடாகப் பலமான சுதேச ஊடகம் ஒன்று ஒரு சமூகத்திலும் தேசத்திலும் காலனித்துவ ஆட்சியிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அதன் உயர்ந்தபட்ச அளவுக்கு ஏற்படுத்துவதற்கு வழி காட்டிய ஒரு பத்திரிகையாளராகவும் அவர் விளங்கினார்.
அவரது எழுத்துக்களின் திரட்டான இந்த நூலில் எளிமையும் அழகும் கொண்ட மொழியில் பெரும்பாலும் அவர் எழுதிய எல்லா விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 700 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் வெளியிட்டுள்ளனர்.
உங்களை இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பதுடன், இத் தகவலை இவ் விடயத்தில் ஆர்வமுள்ள உங்கள் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களையும் இந் நிகழ்விற்கு அழைத்து வருமாறு தயவு செய்து வேண்டிக்கொள்கிறோம்.
(2) சுற்றாடல் பாதுகாப்பு - அண்டாட்டிகா: ஆய்வாளர் ஒருவரின் கண்ணோட்டம் - கலாநிதி தேனுகா இளங்கோவுடன் ஒரு கருத்துரையாடல்.
உலகம் பலவிதம்: பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 35 ஆண்டுகள்(1912-1947) யாழ்.இந்துக் கல்லூரி ஆசிரியராகவும், அதே நேரத்தில் 40 ஆண்டுகள் (1912-1951) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்து சாதனம் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் இயங்கிவந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை,அவர்கள் சிறந்த ஈழத்துத் தமிழ் உரை நடை வல்லாளர், நாடகர், நாவலாசிரியர் மட்டுமல்ல அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் தொடர்ச்சியாக எழுதிவந்த ஒரு சிறந்த பத்தி எழுத்தாளரும் கூட. இந்துசாதனம் என்ற பத்திரிகையூடாகப் பலமான சுதேச ஊடகம் ஒன்று ஒரு சமூகத்திலும் தேசத்திலும் காலனிய ஆட்சியிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வழிநடத்திய பத்திரிகையாளர்.
அவரது எழுத்துக்களின் திரட்டான இந்த நூலில் எளிமையும் அழகும் கொண்ட மொழியில் பெரும்பாலும் அவர் எழுதிய எல்லா விடயங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இம் முயற்சியினை ஒரு வரலாற்றுத் தொண்டாகக் கருதி, அதன் பதிப்பாசிரியராக இருந்து சிறப்புறச் செய்துமுடித்துள்ளார், யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறையைச் சேர்ந்த,,சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் அவர்கள். கிட்டத்தட்ட 700 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை கொழும்பிலிருக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு - அண்டாட்டிகா ஆய்வாளர் ஒருவரின் கண்ணோட்டம்: நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்த கலாநிதி தேனுகா இளங்கோ, நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பூட்டியாவர். எரிமலை ஆராய்ச்சியாளரான இவர் தனது ஆய்வு வேலை தொடர்பாக அதிகம் பிரயாணம் செய்துள்ளார். 2010-15 ஆண்டுகட்கிடையில் தனது கலாநிதிப் பட்டப்படிப்பினை ஐக்கியராச்சியத்திலுள்ள கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். அப்பொழுது எரபஸ் எரிமலைக் குழம்பேரியிலிருந்து வரும் வாயுக்களை அளப்பதற்காக இருதடவை அண்டாட்டிகாவில் சில வாரங்கள் வெளிக்கள ஆய்வினை மேற்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூமெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப் படிப்பின் பின்னர் இருவருடகாலம் ஆய்வு வேலையில் ஈடுபட்டார். இக்கால கட்டத்தில் அண்டாட்டிகாவில் உள்ள எரபஸ் எரிமலைக்கு மீண்டும் சென்று எரிமலை உண்டாக்கும் பனிக்குகை பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். அண்டாட்டிகாவில் ஆய்வு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்கும் அவசியத்தினை உணர்ந்தார்.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அலட்சியப்படுத்த முடியாத இடம் அண்டாட்டிகா. அது மட்டுமன்றி, சுற்றாடலில் எமது தாக்கத்தினை அங்கு கவனியாதிருக்கவியலாது. பருவநிலை ஆய்வாளர், நிலவியலாளர். உயிரியலாளர் போன்றோர் அண்டாட்டிகாவில் கடந்தகால, நிகழ்கால உலகப் பருவநிலை, மற்றும் சூழல் மண்டலத்தின் மீது பருவநிலை சூடாதலின் தாக்கம் என்பவற்றினை ஆராய்ந்து வருகின்றனர். இத்தகைய ஆய்வுகள் அண்டாட்டிகாவில் நடைபெறுவது தெரிந்த விடயமே. ஆனால் பெரிதும் பேசப்படாத விடயம் ஒன்றும் உண்டு. அங்கு நடைமுறையில் இருக்கும்சூழல் கட்டுப்பாட்டுவிதிகளும், வாழ்க்கை முறைகளும் அண்டாட்டிகாவில் வேலை செய்வோர்க்கு மனிதர்கள் இயற்கை உலகில் எவ்வளவு பலமான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
தகவல்: பிறேமச்சந்திரா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.