இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 39 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது
சிறு பத்திரிகைகள் என்றால் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்படுவது என்று பொது புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது இன்றைக்கு நிலைமை அப்படித்தான். ஆனால் எப்போதும் அந்த நிலைமை இருந்ததில்லை. சுதேசமித்திரன் 1800 பிரதிகள் தினசரி விற்ற காலத்தில் பாரதியாரின் இந்தியா 2000 பிரதிகள் பிரதிகளுக்கு மேல் விற்றதாக தெரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகையின் பிரதிகளை ஒரு முறை கைப்பற்றிய போது 2000 பிரதிகள் கைப்பற்றியதாக தகவல் சொல்கின்றனர் ஆகவே சிர்றிதழ் என்பது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையிலானது என்று சொல்ல முடியாதபடி கைப்பற்றப்பட்ட இந்தியா இதழ் பத்திரிக்கையில் எண்ணிக்கை இருந்திருக்கிறது என்பது எண்ணிக்கையில் அல்லாமல் வேறு காரணங்களும் உள்ளன .
அந்தந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக, தேவையாக சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன .சிறிய பொந்தியில் வைக்கப்படும் தீப்பொறி பெரிய தீயாக மாறுவதைப் போல எண்ணிகையில் குறைவாக அச்சிடப்பட்டாலும் அது தரும் பண்பாட்டு உரிமை, தாக்கம் பெரிதாக தான் இருக்கிறது. தமிழில் மணிக்கொடி எழுத்து கசட்தபற, தாமரை, சாந்தி போன்ற இதழ்கள் மாதிரிகளாக நமக்கு உடனே தென்படுகின்றன. இந்த சிற்றிதழல்கள் சிறுபத்திரிக்கைகள் என்ற வார்த்தை பிரயோகம் பிரெஞ்ச் தாக்கத்தின் மூலமாக வந்தது .புதிய இலக்கியம் நாடகம் ஆகியவற்றின் முன்னோடியாக பிரெஞ்சு மொழி இருந்தது அப்படித்தான் லிட்டில் தியேட்டர்ஸ் இன்று வழங்கப்பட்ட முகம் லிட்டில் மேகசின்ஸ் வெளிவர காரணமாக இருக்கின்றது என்கிறார்கள்.
1912இல் சிக்காகோவில் பொய்ட்ரி என்ற பத்திரிகையை ஒரு பெண்மணி ஆரம்பித்தார். அந்த பத்திரிகை இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, ஒரு மருந்து கம்பெனி பெண் தன் சொத்தில் ஒரு லட்சம் டாலரை அந்த பத்திரிக்கைக்கு எழுதி வைத்திருக்கிறார் அந்த உயில் நடைமுறைக்கு வரும் போது இரண்டு லட்சம் டாலர்கள் என்று ஆகிவிடுகிறது. அந்த பெரிய பணம் அந்த பத்திரிகையின் முதலீடாக மாறி இன்றும் அந்த பத்திரிகையை தொடர்ந்து வர உதவுகிறது. அந்த தொகை வழங்கிய அந்த பெண்மணி கவிஞராக இருந்திருக்கிறார் அவர் எழுதிய கவிதைகளைப் பிரசுரிக்க மறுத்து இருக்கிறது. இருக்கிறது ஆனால் அந்த பெண் அந்த பத்திரிகையின் தீவிர நடவடிக்கைக்காக உதவி செய்திருக்கிறார். எக்ஸ்ட்ரா பவுண்ட் போன்ற கவிஞர்கள் அந்த பத்திரிகைகளுக்கு படைப்புகளை வாங்கி பரிந்துரை செய்து பலருக்கு கவிதைகள் பல வெளிவர உதவி செய்திருக்கிறார்கள் டிஎஸ் எலியட், தாகூர் போன்றவரின் கவிதைகளையும் வாங்கி அந்த பத்திரிகைகளுக்கு எக்ஸ்ட்ரா பவுண்ட் சிபாரிசு செய்து அனுப்பி இருக்கிறார். தாகூரின் கவிதை அந்த இதழில் வெளிவந்த ஆண்டுக்கு பின்னால் தாகூர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பது ஒரு சிறு செய்தி. பேரா சிவகுமார் ஒரு பேச்சில் தெரிவித்தார்.
நான் ஹைதராபாத்தில் என் வேலை நிமித்தமாக வசிக்க தொடங்கிய போது பம்பாய், திருவனந்தபுரம், டெல்லி போன்ற நகரங்களில் தமிழர்களின் குரலாய் சில பத்திரிகைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன், அப்போதான் ஆந்திரா தமிழர்களின் குரலாக ஒரு பத்திரிகையை நடத்தப்பட வேண்டும் என்று என்னைப் போன்ற இளைஞர்கள் நினைத்தோம் பாரதியாரின் பூர்த்தி ஆகாத சுயசரிதை கனவு என்ற பெயரில் அந்த பத்திரிகையை அப்போது ஆரம்பித்தோம் .முதல் இரண்டு இதழ்கள் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வந்தன. ஆனால் அதற்கு பெரிய வரவேற்பு இல்லை.
அந்த காலத்தில் ஹைதராபாத் செகந்திராபாத் நகரங்களில் இருந்த மத்திய தர வாசகர்கள் ஆனந்த விகடன் கொண்டு பல வெகுஜனை இதழ்களில் அக்கறை கொண்டிருந்தார்கள் .அங்கிருந்த மத்திய மற்றும் உயர் குடி பிராமண பெருமக்கள் அந்த வகை பத்திரிக்கைகளை அதிகமாக விரும்பி வாங்கினார்கள். அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் அவர்களின் பண்பாட்டு சார்ந்த அரசியல், பண்டிகை சார்ந்த விஷயங்கள் முன்னணி பெற்றன. இந்த சூழலில் அங்கு பெரும்பகுதியான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பிராமணர்கள் அல்லாத எழுத்து என மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படைப்புகளை அபூர்வமாக எழுதினார்கள். அவர்களுக்குக் களமாக கனவு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அதற்கான வரவேற்பு இல்லாததால். மூன்றாம் இதிலிருந்து அந்த இதழை தமிழ்நாட்டு படைப்பாளிகளும் எழுத மாற்றினேன் அதுவரை ஒத்துழைப்புச் செயல் தந்து கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் விலகிக் கொண்டார்கள்.
அதற்கு பின்னாலும் நான் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்த பின்னும் கனவு இதழின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
“ வாசன் மகனுக்கு என்றால்தான் அச்சு பொறி அடிக்குமோ, காசு இருந்தால் எங்கேயும் கொண்டு போய் நிறுத்தலாம் “என்ற ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று கசடதபரறமுதல் இதழில் வெளிவந்த ஞாபகம். அப்படித்தான் செகந்திராபாத் தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதாக ஆரம்பித்த கனவு இதழ் 38 ஆண்டுகளாக மாற்றுக் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை முன்னணியாகக் கொண்டு இயங்கி வருகிறது .பத்திரிகையில் மட்டுமில்லாமல் கனவு திரைப்பட இயக்கம், தமிழ்மொழி சார்ந்த கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கி தன் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது
அந்த வகையில் அமரர் மோகன் அவர்களின் நினைவுகளாக வழங்கப்படும் இந்த இலக்கிய விருது கனவுக்கு வழங்கப்படுவது ஒரு சிறு அங்கீகாரமாகவே நினைக்கிறேன், இந்த பண்பை பாராட்டும் கௌரவப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து அமர்ர் மோகன் நினைவு குழு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.