நூல் வெளியீடும் கலந்துரையாடலும்: தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் (T.செளந்தர்)



' உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு முடிவுகளை காக்கை குழுமம் வெளியிட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த புலம்பெயர் கவிஞர் 'கி பி அரவிந்தன்' நினைவாக ஆண்டு தோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகளை நடாத்திவருகிறது. அந்த வகையில் மூன்றாவது ஆண்டில் ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ இனை நடாத்தியது. இந்தப் போட்டியில் உலகளாவிய 59 எழுத்தாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதிச் சுற்றுக்கு 30 குறுநாவல்கள் தெரிவாகின. இந்தக் கடுமையான எழுத்துப்போட்டியின் தெரிவுகளை நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர்கள் மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே) கொண்ட குழு பரிசீலனையில் எட்டப்பட்ட முடிவுகளை காக்கை இதழ்க் குழுமம் 10.04.2018 அன்று முறைப்படி வெளியிட்டிருக்கிறது.
குறுநாவல்களின் பெறுமானம் கருதி பரிசுக்குரியனவாக 14 குறுநாவல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பூர்வீகமும் – புலம்பெயர்வுமென இந்தியா, இலங்கை, ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என தற்போது புவி எங்கு பரந்து வாழும் தமிழர்களது படைப்புகளின் மஞ்சரியாக அமைந்தமை சிறப்பானதாகும்.
பணப்பரிசுகளும் சான்றிதழுமான குறுநாவல்கள் – 7 மற்றும் காக்கையின் ஓர் ஆண்டு சந்தா பெறும் தெரிவுக் குறுநாவல்கள் - 7 என இவை தெரிவாகியுள்ளன. இந்தக் குறுநாவல்கள் அனைத்தும் காக்கை வெளியீடாக நூல் வடிவம் பெறும் என காக்கை குழுமம் அறிவித்திருக்கிறது..
0. முதலாவது பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் கொங்கை – அண்டனூர் சுரா (இந்தியா)
0. இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் மைதானம் – சோ. தர்மன் (இந்தியா)
0. மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் குரவை மீன்கள் புதைந்த சேறு – மோனிகா மாறன் (இந்தியா)
திருத்தப்பட்ட பட்டியல் : 09.04.2018 அன்று வெளியாகியிருந்த இரண்டாவது பரிசு ‘இராமன் ஒரு தூர தேசத்து மகாராஜா’ எனும் குறுநாவல் ஊடகமொன்றில் ‘தூர தேசத்து மகாராஜா’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளதால் தகுதிநீக்கமடைகிறது.
நான்கு ஆறுதல் பரிசுகள் : 1500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
· நீலு என்கிற நீலாயதாட்சி – எஸ். ஸ்ரீவித்யா
· இனியும் விதி செய்வதோ… ! – மைதிலி தயாபரன் (இலங்கை)
· வெயில் நீர் – பொ. கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)
· நெடுஞ்சாலைப் பைத்தியங்கள் – வி. வல்லபாய் (இந்தியா)
நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது.
விருதுத் தொகை: ஒரு ரோஜா பூ மட்டும் /-
(பாலுமகேந்திரா விருது விழாவில் சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு உள்ளிட்ட மொத்தம் பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். பாலுமகேந்திரா விருது குறும்படங்களை ஒரு இயக்கமாக, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான களமாக மாற்றவே உருவாக்கப்பட்டது. எனவே மற்ற குறும்படப்போட்டிகளை போல் பாலுமகேந்திரா விருது நிகழாது. தொடர்ந்து குறும்படங்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் குறும்படங்கள் சார்ந்து பணியாற்ற வேண்டும். அதனை ஒரு அலையாக செயல்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவிலாவது பரிசு பெரும் திரைக்கலைஞர், நான்காவது ஆண்டும் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவில் விருது பெற்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஆனால் இடையில் ஒரு வருடம் இடைவெளி ஏற்பட்டாலும் பரிசுத்தொகை கிடைக்காது. தொடர்ந்து குறும்படத்துறையில் இயங்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இத்தகைய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். மிக முக்கியமாக விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும் பத்து குறும்படங்களும் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தும் சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 க்கு நேரடியாக தகுதி பெரும். சென்னை சுயாதீன திரைப்பட விழா நடைபெறுவதற்கு முன்னரும் குறும்படங்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு வெளிவரும். ஆனால் அப்போது பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று திரையிட தெரிவான பத்து குறும்படங்களை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அந்த குறும்படங்கள் நேரடியாக IFFC யில் பரிசுக்குரிய பிரிவில் திரையிடப்படும்.

Nadarajah Selvarajah - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வன்னி மண்ணின் வாழ்வை எழுதிய தாமரைச்செல்வியின் "வன்னியாச்சி" கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு!


‘ இத்தாலியின் பலர்மோ நகரில் வாழ்கின்ற செல்விகள் செந்தூரன் சந்தியா, அன்ரன் ரோமன் பிரிஸ்ரிக்கா, ஜெயக்குமார் பிரவீனா, அமலராசா அஸ்வின், சிறிகரன் ஸ்ரெவானியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்க நிகழ்வு ஒரே மேடையில் இடம்பெறுவது பெரும் மகிழ்வைத் தருகின்றது. சிறந்த குருவான ‘நர்த்தன கலாபவன நடனப்பள்ளி’யின் அதிபரான ஸ்ரீமதி லோஜினி திஷரூபனின் பெருமுயற்சியும்; அரங்க நர்த்தகிகளின்;; பெற்றோர்களின் ஒற்றுமையான செயற்பாடுகளுமே இத்தகைய ஒருங்கிணைந்த வெற்றிக்குக் காரணம். நடன நங்கைகளை டிப்ளோமாவரை பயிற்சியளித்து அரங்கேற்றி அந்த மேடையிலேயே பட்டம்பெற வைப்பது என்பது இலகுவான செயலன்று. யாழ்பல்கலைக்கழகத்தில் நாட்டியத்தில் பட்டம் பெற்ற நாட்டியக் கலைமாமணி லோஜினி திஷரூபன் பதினான்கு வருடங்களுக்கு மேலாக பலர்மோவில் நடனப்பள்ளியை நடாத்திய நீண்ட அனுபவமும் பரதக் கலையை வளர்ப்பதில் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் இவை எடுத்துக் காட்டுகின்றது’ என்று பலர்மோ நகரில் உள்ள மிகப் பெரும் அரங்கில் இடம்பெற்ற பரதநாட்டிய அரங்க - பட்டமளிப்பு நிகழ்வில், லண்டனில் இருந்து பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த லண்டன் கீழைத்தேய பரீட்சை நிறுவனத்தின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் குறிப்பிட்டார்.

அன்புள்ள அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வணக்கம். எமது சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் கவிதா மண்டலம் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளோம். நடைபெறும் இடம் கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community Centre Library Meeting Room - 9-15, Cooke Street , Clayton, Victoria - 3168 ) . சங்கத்தின் உறுப்பினர்களான கவிஞர்களும் மெல்பனில் வதியும் இதர கவிஞர்களும் பங்குபற்றலாம். கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள், தமது கவிதையை அல்லது தமக்குப்பிடித்தமான கவிதையை இந்நிகழ்ச்சியில் சமர்ப்பித்து கலந்துரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தங்கள் கவிதையை 5 முதல் 7 நிமிடத்திற்குள் சமர்ப்பிக்கலாம். தங்கள் வருகையை தாமதமின்றி உறுதிப்படுத்தவும். நன்றி.
- முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான "முல்லை நிலமும் நந்திக்கடலும்" எனும் நூல் வெளியீடு! | இடம்: செல்லமுத்து பதிப்பகம் | காலம்: மார்ச் 25, 2018 பிற்பகம் 3 மணி -

முல்லை மண் பெற்றெடுத்த முத்துக்களில் ஒன்றாக அண்ணன் முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான "முல்லை நிலமும் நந்திக்கடலும்" எனும் நூலானது 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலை கொஞ்சும் வல்லை கரையோரம் செல்லமுத்து வெளியீட்டகத்தின் குழந்தையாக பிரசவிக்க இருக்கிறது. கவிக்காதலர்களை அழைப்பதில் செல்லமுத்து வெளியீட்டகத்துடன் அண்ணனுடன் தம்பியாக பெருமைகொள்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் வணக்கம், கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


உங்களின் படைப்புக்களுடன் இவ்வாரம் வெளிவருகிறது. இதழின் அச்சுப் பிரதி தேவையானோர் சந்தாவைச் செலுத்திப்பெற்றுக்கொள்ளலாம். பி.டி.எப் வடிவம் தேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்பினை ஏற்படுத்துங்கள். நெய்தலின் இதழ் ஒன்றிற்கும் (2017),இரண்டிற்குமான (2018) இடைவெளி சற்று அதிகம் தான்.
கவிதைக்கான இதழ் ஆரம்பிக்கவேண்டும் என்ற கனவின் வெளிப்பாடே நெய்தலின் வருகை.எனினும் வழமையான வாழ்வியல் அசௌகரியங்களால் தாமதமாகின..
தொடர்ந்து காலம் பிசகாது வெளிக்கொணர முயற்சிக்கிறோம். நெய்தலை இதர படைப்பாளர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்.
- இவ்வறிவித்தலைப் பிரசுரிப்பதில் தாமதமாகிவிட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இதனைப் பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -

உலகப் பெண்கள் தினவிழா!இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு வரும் சனிக்கிழமையன்று மார்ச் 3ஆம் திகதியன்று பிற்பகல் 230 தொடக்கம் 530 மணி வரை கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய கருத்து ரீதியான நிகழ் வுகளையடக்கிய விழாவை நடாத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பெண்களுக்கென பெண்களால் நடாத்தும் விழா இது என்பதும் குறிப்பிடத் தக்கது.

தொடங்கி வைத்து திரைப்பட ரசனை குறித்து பேசுபவர்: இயக்குநர் வெற்றிமாறன் | 18-03-2018, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு. | MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். | தனி நிகழ்விற்கு: சந்தா 100 ரூபாய்.
நண்பர்களே சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் தொடக்க விழா மற்றும் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் திரையிடப்பட்டு இயக்குனர் வெற்றிமாறன் திரைப்பட ரசனை பற்றிய அறிமுக வகுப்பும் எடுக்கவிருக்கிறார். மிக முக்கியமான இந்த நிகழ்வில் இன்னும் 50 பார்வையாளர்கள் மட்டுமே இணைய முடியும். இது பொது நிகழ்வல்ல, எல்லாரும் கலந்துக்கொள்ள இயலாது. உறுப்பினர்கள் அல்லது திரைப்பட சங்க விதிமுறைப்படி சந்தா செலுத்தியே பங்கேற்க முடியும். இந்த தொடக்க விழாவிற்கு கட்டணம் நூறு ரூபாய். முன்னமே தமிழ் ஸ்டுடியோவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தனியே சந்தா செலுத்த தேவையில்லை. புதிய நண்பர்கள் பியூர் சினிமா அலுவலகத்தில் நூறு ரூபாய் சந்தா செலுத்தி உடனே உங்கள் இருக்கையை உறுதி செய்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன், இந்த நிகழ்வில் இன்னும் 50 வரை மட்டுமே கலந்துக்கொள்ள இயலும். எனவே உங்கள் இருக்கையை உறுதி செய்ய உடனே சந்தா செலுத்தி நுழைவு சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். நேரில் வந்து 100 ரூபாய் செலுத்த இயலாதவர்கள் அலைப்பேசியில் உங்கள் பெயரை பதிவு செய்து நிகழ்வு நடக்கும் அடுத்த ஞாயிறு MM திரையரங்கில் நேரில் பணம் செலுத்தி நிகழ்வில் கலந்துக்கொள்ளலாம்.
‘ஈழத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் மார்க்சிய அணுகுமுறையோடு இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட கவிஞர் செழியனின் மறைவு ஈழத்து அரசியல் போராட்டத்தின் ஒரு துயர சம்பவமாகும்’ என்று லண்டனில் இடம்பெற்ற கவிஞர் செழியனின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகையில் ‘பனி மலர்’ இதழ் ஆசிரியர் நா. சபேசன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்: ‘ ‘மாணவர் குரல்’ என்ற சஞ்சிகையைச் செழியன் என்று அறியப்படும் சிவகுமாரன் அவர்கள் நடத்திய காலத்தில் இருந்தே அவரை நான் அறிவேன். மாவட்ட ரீதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தலை இலங்கை அரசு கொண்டுவந்தபோது அந்நடவடிக்கைக்கு எதிராக யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒருங்கிணைத்துப் போராடும் முயற்சியில் செழியன் வகித்த பாத்திரம் முக்கியமானதாகும். மாணவர் எழுச்சிக்கு வழிவகுத்தவர் என்று மட்டுமல்லாது ஒடுக்குமுறைக்குள்ளான கூலி விவசாயிகளின் அமைப்பிலும் செழியன் தீவிர பங்காற்றி வந்திருக்கின்றார். தனது சொந்தக் கிராமமான உரும்பிராயில் சாதித் தடிப்பு மிக்க நிலவுடைமையாளர்கள் மத்தியில் எளிய, நிலமற்ற விவசாயிகளுக்காக அவர் போராடியபோது அதிகார மையத்தின் பெரும் எதிர்ப்பை அவர் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எனினும் தனது சொந்தக் கிராமத்திலேயே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த புரட்சிகர செயற்பாட்டாளராகவே செழியன் திகழ்ந்தார்’ என்று நா. சபேசன் மேலும் தெரிவித்தார்.
விமர்சகர் மு. நித்தியானந்தன் உரையாற்றும்போது: ‘80களில் சமூக உணர்வு கொண்டு பல்வேறு இயக்கங்களிலும் தீவிர அர்ப்பணிப்போடும், பொதுநலச் சிந்தனையோடும் செயற்பட்ட உயிர்த்துடிப்பு மிக்க ஒரு சந்ததியின் குறியீடாகத் திகழ்ந்த கவிஞர் செழியனின் மறைவு வருந்தத்தக்கதாகும்.
‘மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லையென்றும், புதிய எஜமானர்களின் அடிமைகளாக மரணிப்பதையே வெறுக்கிறோம்’ என்றும் பிரகடனம் செய்த செழியன் இறுதிவரை அடக்குமுறைக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்காரனாகவே திகழ்ந்தார். அவர் கவிதைகள் வாழ்வின் குரூர யதார்த்தத்திலிருந்து பிறந்தவையாகும். அதனால்த்தான் எஞ்சியது கரித்துண்டுகளேயாயினும் இறுதிவரை எழுதியே தீருவோம்’ என்று அவரால் முழக்கமிட முடிந்தது. தனது கவிதைகளை அழகழகாய் அச்சிட்டுப் பார்க்க வேண்டுமென்றோ, உலகமொழிகளிலெல்லாம் தனது கவிதைகள் போய்ச் சேரவேண்டுமென்றோ ஒரு கணமு
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை ”உலகத்தமிழ்” என்னும் மின்னிதழைத் தொடங்கவுள்ளது. அந்த இதழுக்காக உலகெங்கிலுமுள்ள பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்களிடமிருந்து தரம்வாய்ந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு உலகத் தமிழ்ச் சங்கம் வலைத்தள முகவாி:www.ulagatamilsangam.in மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்: ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018. முகவரி: 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) /0421 2212210
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

‘கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில் மட்டுமன்றி இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களிலும் தனது நாட்டியத் திறமையால் கலாநர்த்தகியாகத் திகழும் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா லண்டனில் விடாமுயற்சியுடன் தனது ‘சலங்கை நர்த்தனாலயா’ நடனப் பள்ளி மாணவர்களுக்குக் களம் அமைத்து, அவர்களின் நாட்டியத் திறமைகளை வெளிக்கொண்டுவருவது பாராட்டுக்குரிய விடயம்’ என்று முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் விரிவுரையாளரும், சுயவயெஅ குழரனெயவழைn ஐ நடாத்தி வரும் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அண்மையில் லண்டன் வின்சன்சேர்ச் மண்டபத்தில் இடம்பெற்ற சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்பு வழங்கிய ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியில் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் லண்டனில் பல்வேறு நிகழ்வுகளின் மத்தியில் மாணவர்களை ஒருங்கிணைத்து கணேச ஸ்துதி, அலாரிப்பு, .பதம், குறத்தி நடனம், சீதா கல்யாணம், முருகன் கௌத்வம், சிவ கிருத்தி போன்ற நாட்டிய வடிவங்களால் அலங்கரித்தமை மிக மெச்சத்தக்க விடயம். இதற்கு பார்வையாளர்கள்; மேலும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த அமைப்பின் தலைவியான நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அவரது மகளான உயிரியல் பட்டதாரியான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் மாணவர்களுடன் இணைந்து உறவும் மரபும் சேர்வதுபோல் வாழ்க்கையிலும், மகத்தான நாட்டியக் கலையிலும் ஒன்றிணைவது பார்வையாளர்களை மேலும் ஈர்ப்புக்கொள்ள வைத்தது என்றால் அது மிகையாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

The 22nd Technological Advances in Science, Medicine and Engineering Conference (TASME2018) will be hosted in SickKids / University of Toronto on July 7-8, 2018. This is a unique International conference dedicated specifically to Science, Medicine and Engineering Advancements. We need your support and active participation to make the event successful. Anyone willing to volunteer in various conference related activities, please let us know. You are welcome to contribute professional papers, student papers and/or student posters. We would also like to invite you and your students to submit papers to the conference. For more info please visit our website; http://www.tasmeconferences.org/

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது‘ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், ஜெய்காந்தன், சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன்,வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன் இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப் புனைவுகளில் சமூக விமர்சனம்,தர்க்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதுபவர். இலக்கியப் படைப்பாற்றலில் முழுமை கருதி இந்த விருது அவருக்கு அளிக்கப்பெறுகிறது. இவரது கதைகள் ஆங்கிலம் இந்தி போன்ற இந்திய மொழிகளில் மட்டுமன்றி சீனம், மலாய், பிரெஞ் போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர்.சரஸ்வதி சன்மான் விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுவின் தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட்களில் உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். மலேயா, சிங்கப்பூர், மெல்பன் ஆகிய பல அயலகப் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் லீ காங் சியான் ஆய்வுக் கொடை வழங்கப்பட்டு சிங்கப்பூரில் ஆறுமாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டவர். இந்தக் கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும் தமிழரும் இவரே ஆவார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடகக் கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் ஞாநி சங்கரன். பரீக்ஷா நாடகக் குழுவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு சமூக நோக்குள்ள வீதி நாடகங்களையும், மேடை நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.
1954ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர். அங்குள்ள புனித சூசையப்பர் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரிக் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் விளம்பர்ப பிரிவில் பணியாற்றியவர், இதழியல் பட்டயப் படித்து பின்பு அதே நாளிதழில் நிருபராகவும் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய காலத்தில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதி அவருக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார். அவருடைய ஞான பானு என்கிற பதிப்பகத்தின் மூலம் அவருடைய படைப்புகள் அனைத்தையும் புத்தகமாக கொண்டுவந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்கு கெளரவ ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் தினமலர் நாளிதழின் இணைப்புப் பிரதியான ‘பட்டம்’ இதழின் ஆலோசகராக பணியாற்றினார்.