அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133) இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி அவர்கள் " தமிழ் - முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம் - எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்" என்னும் தொனிப்பொருளில் உரையாற்றுவார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு சமூகங்களிடையில் ஏற்படுத்தப்படவேண்டிய நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன் - செயற்குழுவினர்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங் கம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.