ஹென்றிக் இப்சனின் புகழ் பெற்ற நாடகமான 'ஒரு பொம்மை வீடு' (A Doll's House) பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் இலக்கியப்படைப்புகளுக்கெல்லாம் ஒரு முன்னோடியான இலக்கியப்படைப்பு என்று கூறலாம். 'ஒரு பொம்மை வீடு' நாடகத்தைக் கனடாவில் நாடகத்துறையில் காத்திரமான பங்களிப்பினைப் பல்லாண்டுகளாகச் செய்து வரும் மனவெளி கலையாற்றுக்குழுவினர் தமது பத்தொன்பதாவது அரங்காடல் நிகழ்வாக எதிர்வரும் ஜூன் 30 அன்று மேடையேற்றவுள்ளனர். எழுத்தாளரும், வானொலித்துறையில் பன்முக ஆற்றல் வாய்ந்தவருமான பி.விக்னேஸ்வரனின் மொழிபெயர்ப்பில் , இயக்கத்தில் மேடையேற்றப்படும் இந்நாடகத்தின் வெற்றிக்கு கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் ஆதரவு நல்கவேண்டும். மிகவும் பொருட்செலவில் மேடையேறவுள்ள நல்ல நாடகமொன்றின் மேடையேற்றத்துக்கான ஆதரவு இது போன்ற மேலும் பல நாடகங்களை மேடையேற்றித் தமிழ் நாடக உலகை மேலும் வளப்படுத்த அவர்களை உற்சாகப்படுத்தும்.