அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்!
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன. இதுவே இவரது முதலாவது நூலாகும்.
இலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். எனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. 1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குத்தயாராகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு கல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக் தலைமையில், நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன அரங்குடன், புதிய நாவலான கானல் தேசம், மற்றும் நனவிடை தோயும் சுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும் அறிமுகப்படுத்தப்படும்.







கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்


'மக்கள் பணிபுரிந்த மாமனிதர்கள் குறித்துச் சிறப்பான பதிவுகளை இளங்கோவன் செய்துவருகிறார். அவை அவசியமான சிறந்த பணியாகும். நவீன தொழில்நுட்ப வசதி> முகநூல்> இணையத்தளங்கள் புத்தக வாசிப்பை அருகிடச் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தருவதாகும். முற்போக்குச் சிந்தனையுடனும் மாறாத இலட்சியப் பிடிப்புடனும் எழுதிவருபவர் இளங்கோவன். அவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியாகி பல நாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது." இவ்வாறு கடந்த 31 -ம் திகதி ஞாயிறு (31 - 03 - 2019) இலண்டன் மாநகர் - ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் கரவை மு. தயாளன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் 'கலாபூஷணம் - இலக்கிய வித்தகர்" வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல, ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்" என்ற நூலும் வெளியிடப்பட்டன.
இன்று ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோ பார்ட்டி ஹா'லில் அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்கள் ஆகியவற்றில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. தற்போதுள்ள சூழலில் மிகவும் கட்டாயமாக நடத்த வேண்டிய இந்நிகழ்வினைச் சிறப்பாகக் குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ததற்காகக் 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' பாராட்டுக்குரியது. குறிப்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த ரட்ணம் கணேஷ், நேசன் & டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை , சபேசன், சத்தியசீலன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.







புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









