”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் !
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கழகமும் இணைந்து 08 & 09-10-2020 ஆகிய இரண்டு நாள் நடத்திய “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” எனும் பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை மற்றும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.
நிகழ்வின் தொடக்கமாக 08 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையர் இரா.பூ.இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் செயலர் CA அம்மங்கி V. பாலாஜி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் S. ஸ்ரீவித்யா அவர்களும் முனைவர் J.ராதிகா அவர்களும் வாழ்த்துரை நல்கினர். நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா நன்றியுரை வழங்கினார்.
முதல் நாள் நிகழ்வில் இணைய தமிழ் ஆய்வாளரும், தமிழ் இணைய கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன் "தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் அனைவரும் பயன்படுத்துமாறும், தமிழ் எழுத்துருக்கள் அது கடந்து வந்த பாதை பற்றியும் விரிவாக எடுத்துக் காட்டினார்.













மொத்தம் 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ. 27,250










பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









