"அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு , மார்ச் 2000 இலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை http://www.geotamil.com , http://www.pathivukal.com , http://www.pathivugal.com ஆகிய இணையத் தள முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகளை இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் கருதி, அவை மின்னூல்களாக இணையக் காப்பகம், நூலகம் போன்ற எண்ணிம நூலகங்களில் ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில் 'பதிவுகள் 55 சிறுகதைகள்' & 'பதிவுகள் 27 சிறுகதைகள்' ஆகிய மின்னூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளியாகியுள்ளன.
'பதிவுகள்' சிறுகதைகள் (தொகுதிகள் 1 & 2) : பதிவுகள் இணைய இதழில் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் இரு தொகுதிகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. இவை 2000 -2010 காலகட்டத்தில் வெளியான சிறுகதைகள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய சிறுகதைகளும் எதிர்காலத்தில் மின்னூற் தொகுதிகளாக வெளியிடப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இத்தொகுப்புகளை இணையக் காப்பகம் (https://archive.org) தளத்தில் வாசிக்கலாம். முதற் தொகுதியில் 55 சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 27 சிறுகதைகளும் , மொத்தமாக 82 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதற் தொகுப்பு மின்னூலாக வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணைய இதழில் வெளியான , வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் ஆகியன தொகுப்புகளாக வெளியாகும். இத்தொகுப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பதிவுகள் ஆற்றிய பங்களிப்பினை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை.