'ரொறன்ரோ" தமிழ்ச் சங்கம் நடத்தும் மாத இலக்கிய அமர்வுகளிலொன்றில், எழுத்தாளர் செங்கை ஆழியான் பற்றிய எனது பார்வை என்னும் உரையினை ஆற்றும் காணொளி இது. பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தலைமையில் , நடந்த நிகழ்வு. அந்நிகழ்வில் 'செங்கை ஆழியான் ஒரு கல்வியாளர்' என்னும் தலைப்பில் கவிஞர் கந்தவனமும், 'ஈழத்தின் நவீனத் தமிழிலக்கியத்தில் செங்கை ஆழியானுக்குரிய இடம்' என்னும் தலைப்பில் பேராசியர் நா.சுப்பிரமணியன் அவர்களும் உரையாற்றினார்கள். நிகழ்வு நடந்த நாள்: ஆகஸ்ட்27, 2016
'ரொறன்ரோ" தமிழ்ச் சங்க நிகழ்வுகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று எழுத்தாளர் அகிலின் உழைப்பு. எழுத்தாளர் அகில், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், மருத்துவர் இலம்போதரன், கவிஞர் கந்தவனம் , எழுத்தாளர் த.சிவபாலு என்று பலர் இச்சங்கம் திறம்பட இயங்குவதற்குக் காரணமானவர்கள். காணொளிக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=Wwhq4bV-FCU
மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் 'கசாக்கின் இதயம்' நாவல் பற்றி 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் நான் ஆற்றிய உரையிது. நிகழ்வு நடந்த நாள்: செப்டெம்பர் 30, 2017. இந்நாவல் இந்திய மத்திய அரசின் சாகித்திய விருது பெற்ற நாவலென்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி பாலகடாட்சம் ஒருங்கிணைப்பில் நடந்த நிகழ்வில் 'புத்தகம் புதிது' என்னும் பிரிவில் நான் ஆற்றிய உரையிது. உரையினைப் பின்வரும் இணைய முகவரியில் கேட்கலாம்: https://www.youtube.com/watch?v=-m0lS4L1G-A
இதன் முழு வடிவத்தினைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4166:2017-10-01-21-00-15&catid=28:2011-03-07-22-20-27
தேடகம் அமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் அறிமுக நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3645:2016-11-14-05-21-14&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
நிகழ்வு நடந்த நாள்: நவம்பர் 13, 2016
உரையின் முழு வடிவத்தினையும் பதிவுகள் இணைய இதழில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு:
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3645:2016-11-14-05-21-14&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54