பேரன்புடையீர், வணக்கம்!
ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் மாநாடு, 2021 பெப்ரவரி 12, 13ஆம் திகதிகளில், ‘ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈழத்துத் தமிழ்நாடக வரலாற்றில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பணி மகத்தானது. பேராசிரியர்களான சுவாமி விபுலானந்தர், க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன் ஆகியோர் தொடக்கம் இன்றுவரையும் ஈழத்தின் தமிழ் நாடக இலக்கியத்துக்கான பேராதனையின் பணி வளமிக்கதாகத் தொடர்கிறது. நாடகப் பிரதி, நாடக ஆற்றுகை முதலாய செயற்பாடுகள் மட்டுமன்றி, ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பேராதனைத் தமிழ்த்துறைப் புலமையாளர்களின் பங்களிப்புக் கனதியானது. இந்த மரபின் தொடர்ச்சியை மீள நினைவுகூரவும், ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம் தொடர்பான புலமைசார் உரையாடலை நிகழ்த்தவும், இந்த மாநாடு வழிசமைக்கும் என்று நம்புகின்றோம்.
ஈழத்தில் வெளிவந்த பல்வகையான தமிழ் நாடகப் பிரதிகளை, இலக்கியப் பிரதிகளாகக் கருதி ஆராய்வதும், அவற்றைச் சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தில் வைத்து வாசிப்பதும் இந்த மாநாட்டுக் கருப்பொருளின் முக்கிய நோக்கங்களாகும்.
ஆய்வு மாநாடு சிறப்புற நிகழத் தங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
ஆய்வு மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, இந்த மின்னஞ்சலின் இணைப்பில் உள்ள மாநாடு பற்றிய அறிவித்தலைப் பார்வையிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நன்றி
தமிழ்த்துறையினர் சார்பில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்
கலாநிதி செல்லத்துரை சுதர்சன்
திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன்
தமிழ்த்துறை, கலைப்பீடம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை, இலங்கை.
தொலைபேசி: +94772323743 / +94778338766
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.