ஒரு தகாப்சத்தை கடந்து.. முத்துக்குமார் பற்றிய நினைவலைகள்..
முத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19 அன்று தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன். தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது. தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில் குழந்தைகளும் பெண்களும் உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் ஈவு இரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்டதை எதிர்த்து எந்த அரசியல் வாதியும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் இந்த இளம் எழுத்தான் ஜனவரி மாதம் 29-ம் திகதி 2009 அன்று தன்மீது பெட்ரோலை ஊற்றி தன்னையே ஆகுதியாக்கி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தான். தான் எதற்காக தீக்குளிக்க முடிவு செய்தான் என்பதை கடிதம் ஒன்றில் பதிவு செய்து விட்டு தன் உடலை வைத்து போராடி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, தனது உடலை ஆட்சியாளர்களோ காவல்துறையோ கைப்பற்றி அடக்கம் செய்ய விடாமல் தனது உடலை ஒரு துரும்புச் சீட்டாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டு திரிந்து மாணவர்கள் இளையோர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராடுமாறு கூறி, அப்போராட்டத்தை தொடருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான் அந்த மாவீரன்.
ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி இந்தியாவே பழிவாங்கும் நோக்கில் ஈழத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தான் இந்த உணர்வாளன். அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்ட கல்லூரி மாணவர்களோடு அனைத்து மாணவர்களும் இணைந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு, அகிம்சை வழியில் போராட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தீயில் கருகினான். தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரின் ஆதரவையும் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் இறைஞ்சி, பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து தீயில் வெந்து தீய்ந்தான். அம்மாவீரனின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற அதேவேளை, கொந்தளித்த மாணவர்களை ஒடுக்கும் முயற்சியை அன்றைய தமிழக அரசு வெற்றிகரமாக செய்ததை மறந்து விட்டிருக்க முடியாது. கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி எல்லாமே மறைக்கப்பட்டது , மறுக்கப் பட்டது.













‘இறைவனின் புண்ணிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்து இறைவனை வழிபட்டு வருவது நீண்ட நெடுங்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் யாத்திரையாகும். அதிலும் கைலாச யாத்திரை என்பது கைலயங்கிரியில் வாழும் சிவனைத் தரிசிக்கும் புண்ணிய யாத்திரையாகும். கடினமும். ஊக்கமும்.இறைவனின் பெயரருளும் சித்தித்தால் மட்டுமே அடையக்கூடிய மகத்தான யாத்திரையாகும். சில புண்ணிய ஸ்தலங்கள் தரிசிப்பதால் மட்டுமல்ல நினைத்துப்பார்த்தாலுமேகூட அருள் தருகின்ற புண்ணிய ஸ்தலங்களாகும். அந்த வகையில் லண்டன் டாக்டர் அம்பி அவர்கள் ஆகம முறைகளை அனுசரிக்கும் இந்துப் பெருமகனாய் கைலாசத்தை இரண்டு முறைகள் தரிசித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல பயண அனுபவத்தை ஒழுங்காகக் குறித்து அழகிய தமிழில். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற நோக்கிலே ‘கண்டேன் கைலாசம்;’ என்ற நூலினை எழுதி வெளியிட்டிருப்பது நாம் பெருமையுடன் பாராட்டவேண்டிய அம்சமாகும்’ என்று பிரம்மஸ்ரீ கைலை நாகநாத சிவாச்சாரியார் ‘கண்டேன் கைலாசம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது தனது ஆசியுரையில் தெரிவித்தார்.













பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









