

'ஈழத்;து வரலாற்றில் 1940-கள் முதல் 1970-கள் வரையான காலகட்டம் அரசியல்இ இலக்கியத்துறைகளில் குறிப்பிடத்தக்க காலமாகும். மார்க்சிசச் சிந்தனைப் பரவலும் நவீன இலக்கிய விழிப்பும் ஏற்பட்ட காலமாகும். அன்று புதிய எழுச்சி ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிலும் அத்தகைய எழுச்சி - மாற்றத்தை நோக்கிய பாய்ச்சல் ஏற்பட்டது. இலங்கையில் அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்; தோற்றமும்இ இலக்கியச் செழிப்பும்இ முன்னோக்கிய பாய்ச்சலும் நடந்தது. அந்தக் கருத்துகளை உள்வாங்கியதாலும்இ குடும்பச் சூழ்நிலையும்இ எழுத்தாளர் கே. டானியலுடன் ஏற்பட்ட தோழமையும்;இ சமூகத்தில் உறவாடிப் பெற்ற அனுபவங்களும் இளங்கோவனை இலக்கியத்துறையில் விருட்சமாக வளர உதவியிருக்கிறது. அவரிடம் நிறைந்துள்ள அனுபவப் பொக்கிஷங்களைப் படைப்புகளாக அவர் மேலும் எழுத்தில் பதிந்திட வேண்டும்."

என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்) என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:
1. என் குருமண் காடே!
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4. இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!
இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன் ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும் மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி, பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.
இவ்வருடம் மேலும் புதிய பாடல்களுக்கான காணொளிகள் பலவற்றை வெளியிடவுள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான கருத்துகளும் நிச்சயம் உதவும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் YouTube சானலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

நண்பர்களே! என் முகநூல் பக்கம் இரு பகுதிளைக கொண்டது. ஒன்று வழக்கமான என் பதிவுகளைத் தாங்கி வரும் பகுதி.
இன்னுமொரு பகுதி ஒன்றுண்டு. அது சந்தாதாரர்களுக்கு மட்டுமே உரிய பகுதி. அது சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய எழுத்துப் பதிவுகள், காணொளிகள், டிஜிட்டல் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடகிய பகுதி. அதற்கான இணையத்தள முகவரி
https://www.facebook.com/VNGiritharan/subscribe/
ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும். இப்புதிய பகுதிக்கான உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன, எதிர்காலத்தில் மேலும் இப்பகுதி சிறப்புற உங்கள் வருகையும், ஆலோசனைகளும் வழி வகுக்கும்.
ஆரம்பத்தில் இப்பகுதியை இலவசமாகப் பார்க்கலாம். இப்பகுதி பிடித்திருந்தால் தொடர்ந்தும் சந்தாரர்களாக இருக்கலாம்.
இவ்வசதியைத் தந்ததற்காக முகநூல் நிறுவனத்துக்கு என் நன்றி.

'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த 'நூலகம்' சாவடியில் நூலகம் நிறுவனத்தின் கனடாக் கிளையில் இயங்கும், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி நிற்கும் காட்சி. எண்ணிம நூலகமான 'நூலகம்' நிறுவனம் மிகப்பெரிய பணியினைச் செய்து வருகின்றது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், நினைவு மலர்கள், பல்வகைச் சிறப்பு மலர்கள், புகைப்படங்கள், காணொளிகள், பல்வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள் எனப் பலவற்றைச் சேகரித்து வருகின்றது. நூலகமாகவும், ஆவணக்காப்பகமாகவும் நூலகம் ஆற்றிவரும் பணி தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.
ஏன் இவ்விதமான நிறுவனங்கள் தேவை?
ஒரு காலகட்டத்து வரலாற்று, கலை, இலக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்துவதென்பது ஓர் இனத்தின் வரலாற்றை முறையாகப்பதிவு செய்யும் முக்கியமானதொரு செயற்பாடு. அரிய பணி. அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அரிய பணியினையும் இத்தகைய நிறுவனமொன்று செய்கின்றது. பல்வகை ஆய்வுகளுக்கும் உசாத்துணைகளாக இவ்விதம் பேணப்படும் ஆவணங்கள் விளங்குகின்றன. இனக்குழுக்களின் சமூக, தனிநபர் அடையாளங்களை இவை தலைமுறை கடந்து கடத்துகின்றன. இவை முக்கியமான காரணங்கள். இதனால் தமிழர்களான எம்மைப் பொறுத்தவரையில் எம் மத்தியில் இவ்விதப் பணிகளைச் செய்யும் நூலகம் நிறுவனத்தின் சேவை தொடர்வது அவசியமானது.
பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ள இலக்கிய மாலையில் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. பாரிஸ் மாநகரில் வாழும் மூத்த எழுத்தாளர்களான வி. ரி. இளங்கோவன் - பத்மா இளங்கோவன் ஆகியோரின் பத்து நூல்கள் அறிமுக நிகழ்வு - இலக்கிய மாலை 07 - 12 - 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாரிஸ் - லாச்சப்பலுக்கு அருகிலுள்ள 'பஜோல்" மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
'இளங்கோவன் படைப்புகள், ஈழத்து இலக்கியச் சிற்பிகள், வெயிலும் பனியும், போர்க்காலக் கதைகள், மக்கள் எழுத்தாளர் கே. டானியல்" ஆகிய வி. ரி. இளங்கோவனின் ஐந்து நூல்களும், 'சிறுவர் தமிழ் அமுதம், சிறுவர் இலக்கிய நுட்பங்கள், சிறுவர் கதைப் பாடல்கள், பாலர் கதைப் பாடல்கள், கொரோனாவின் தடங்களில்.." ஆகிய பத்மா இளங்கோவனின் ஐந்து நூல்களும் அறிமுக நிகழ்வில் இடம்பெறுகின்றன.
மூத்த கவிஞர்இ மொழிபெயர்ப்பாளர் க. வாசுதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்இ ஊடகவியலாளர் இ. கந்தசாமி, எழுத்தாளர் சு. கருணாநிதி, கலைஞர் கே. பி. லோகதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.
கலை இலக்கியப் படைப்பாளிகளான க. முகுந்தன்இ என். கே. துரைசிங்க, பொலிகை கோகிலா, க. தேவதாசன், பிரியா லவன், கே. உதயகுமார், இ நிஷா பீரிஸ் ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்குவர். ஏற்புரைகளை நூலாசிரியர்கள் வழங்குவர். ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.
எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு தமிழர் மருத்துவம் ஆதியாம் துறைகளில் இருபத்திமூன்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பத்துக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார்.
பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ள இவரது நூல்களின் அறிமுக நிகழ்வுகள்இ இலங்கையின் பல பகுதிகளிலும்,ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ன், 22 நவம்பர் 2025:
மெல்பேர்னில் வளர்ந்து வரும் தென் ஆசிய சமூகத்தினர், திரு பந்து திசாநாயக்காவுக்கு " 2025ல் சிறந்த தென்ஆசியர் " விருதை அளித்தார்கள். திரு பந்து திசாநாயக்கா நான்கு வருடங்கள் இலங்கையின் விக்ரோரியா மானில கௌரவ கொன்சல் ஜெனரலாக இருந்தவர். அத்துடன் பகான என்ற சமூக பத்திரிகை,விஷ்வவாகனி என்ற தொலைகாட்சியையும் நடத்துகிறார். பந்து திசாநாயக்கா அவுஸ்திரேலியா சவுத்ஏஷியா சொசைட்டியின் (ASAS) நிறுவுநராகவும் போஷகராகவும் உள்ளார்.
Join Zoom Meeting Meeting ID: 864 8891 1310 | Passcode: 1965


அக்டோபர் 25, 2025, சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது. இந்த விருது விழாவில் இணையத்தினர் எழுத்தாளர் குரு அரவிந்தன், சொற்கோ திரு. வி.என்.மதியழகன், திருமதி செல்லையா யோகரத்தினம், முனைவர் திருமதி பார்வதி கந்தசாமி, திரு. ந. நகுலசிகாமணி ஆகிய ஐந்து கலைஞர்களுக்கு விருது அளித்துக் கௌரவித்தனர். எழுத்தாளர் இணையத்தால் அறிமுக நூல் ஒன்றும், குரு அரவிந்தனின் வாசகர் வட்டத்தால் எழுத்தாளர் குரு அரவிந்தனின் சாதனைகள் குறித்த நூல் ஒன்றும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கப் பெற்றன.
Join Zoom Meeting |Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

Join Zoom Meeting | Meeting ID: 893 0426 1486 | Passcode: 965901

இறுதி வெற்றி: LA Dodgers - 5 Toronto Blue Jays 4

இன்று , நவம்பர் 1, 2025, மாலை எட்டு மணிக்கு பேஸ் பால் விளையாட்டின் 2025 ஆண்டுக்குரிய 'வேர்ல்ட் சீரிஸி'ன் (World Series) இறுதிப்போட்டியான ஏழாவது போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை களத்தில் இருக்கும் குழுக்கள் : லொஸ் ஏஞ்செல்ஸ் டொட்ஜர்ஸ் (Los Angeles) & டொரோண்டோ புளூ ஜேய்ஸ் (Toronto Blue Jays).
இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் இரு குழுக்களும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளதால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த ஏழாவது போட்டி நடைபெறவுள்ளதால் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் பரபரப்பும், ஆவலும் பெருகியுள்ளன.
பேஸ் பாலின் முக்கிய அம்சம் அதன் Bases (முதலாவது பேஸ், இரண்டாவது பேஸ், மூன்றாவது பேஸ் & ஹோம் பேஸ்) அதன் காரணமாகவே விளையாட்டு Baseball என்றழைக்கப்படுகின்றது.
Join Zoom Meeting: | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345


சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், செற்கோ திரு. வி. என். மதியழகன், விரிவுரையாளர் ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி, அம்மன் கோயில் முகாமையாளர் நவா கருணரட்ணராசா, திருமதி பத்மா கரு, திருமதி இராசம்மா இராசதுரை, பொறியியலாளர் திருமதி கேதா கிருபராஜன், திரு ஸ்ரீகுமரகுரு மகாதேவன், நிறுவுனர் கமலவதனா சுந்தா மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.