

- சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் -
இன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023ற்கான இயல்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. JC'S Banquet மண்டபத்தில் நடந்தது. கவிஞரும், பேராசிரியருமான உ.சேரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணனுக்கும், புனைவுக்கான விருது 'சற்றே பெரிய கதைகளின் புத்தகம்' நூலுக்காக எழுத்தாளர் றஷ்மிக்கும், கவிதைக்கான விருது கவிஞர் இளவாலை விஜயேந்திரனுக்கும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது' நூலுக்கும்., அல்புனைவுக்கான விருது 'நினைவு நல்லது' நூலுக்காக வானொலி / தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான ப.விக்னேஸ்வரனுக்கும், மொழியாக்கத்துக்கான விருது ஜெகதீஷ்குமார் கேசவனுக்கும், இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது முனைவர் பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், இலங்கைத் தமிழ் நாடக அரங்க ஆளுமையாளருமான 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு
இந்தியத் தேசிய விருது பெற்ற ஆவணத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் கலை விமர்சகருமான திரு. அம்ஷன் குமார் அவர்களின் இயக்கத்தில் உருவான 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு, 23.10.2024, காலை 9 மணிக்கு, கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.
Join Zoom Meeting | Meeting ID: 865 5516 7525 |Passcode: 903772

அன்பு உறவுகளுக்கு, இந்த நூல் வெளியீட்டு விழாவில், கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளில் நிறைந்துள்ள, தொன்தமிழின்கலாச்சாரம், பண்பாடு; பெண்ணியம், காதல், வீரம் கூறும் இலக்கியம் என ஒர் ஆய்வு அரங்கேறுகிறது. ஆர்வலர்களுக்கு பகிருங்கள்.அரங்கத்தை மெருகேற்றுங்கள்,
நன்றி.
ஆறு. சிறீகாந்தன்.

திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!
22-09-2024 ஞாயிறு பகல் 1:30 . Scarborough Civic Centre.

இலண்டன் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளன. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீடு லண்டன் ஈலிங் அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (London Ealing Amman temple, 5, Chapel Rd, London W13 9AE, U.K)
Join Zoom Meeting | Meeting ID: 820 8933 7233 & Passcode: 986965 -


மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.
இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.
மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின் பணித்தொகுதியில் இணைந்தார்.
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்று கூறும் பாலகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுக்க இடையறாது பழந்தமிழ் இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு ஆகியவற்றிற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். சிந்துவெளிப் பண்பாடு மற்றும் தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் குறித்த புரிதல்களுக்கு இடப்பெயராய்வுகள் வலிமை தரும் என்பதைச் சான்றுடன் நிறுவியுள்ளார். இந்தியாவை ‘உருக்குப் பானை’ என்று சொல்வதற்குப் பதிலாக இந்தியத் துணைகண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் ‘இந்தியா ஒரு மழைக்காடு’ (Rain forest) என்கிற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பொதுவெளியில் பேசியும் எழுதியும் வருகிறார்.
இந்தியவியல், மானிடவியல், தொல்லியல், இடப்பெயராய்வு ஆகியவை இவரது முனைப்புக் களங்களாகும். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ’கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’ ஆய்வுலகின் கவனத்திற்கு இவர்தான் முதன்முதலாகக் கொண்டுவந்தார். சிந்துவெளி நகரங்களின் ‘மேல் மேற்கு, கீழ் கிழக்கு வடிவமைப்பும் அதன் திராவிட அடித்தளமும்’ என்கிற தலைப்பிலான இவரது ஆய்வு பரவலாகக் கவனம் பெற்ற ஒன்றாகும். சிந்துவெளிப் பண்பாட்டிற்கான திராவிட அடித்தளத்தைப் பண்பாட்டு ஆய்வுகளின் பின்புலத்தில் நிறுவியவர் பாலகிருஷ்ணன். இவரது சிந்துவெளி ஆய்வுகளுக்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 2017இல் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய எழுத்தாளர் அரங்கம் (25) நிகழ்வில் கடந்த வெள்ளி கலந்துகொண்டு உரையாற்றினேன்.
அதில் என் எழுத்துலக அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்துகொண்டேன். எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை அறிவதில் பெரு விருப்பு மிக்க எனக்கு என் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் முக்கியமான அனுபவம்.
நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை, கலந்துகொண்டவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு நீங்கள் கேட்கலாம். கேட்டுப் பாருங்கள். என் எழுத்துலக ஆர்வத்தினை, வாசிப்பிலுள்ள பெரு விருப்பினை, என் எழுத்துலகக் காலகட்டங்களை, என் சிந்தனைகளை எனப் பலவற்றை இங்கு நீங்கள் கேட்கலாம்.

இலக்கியவெளியின் வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
நாள்: 14-09-2024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3.30
இடம்:
எங்கட புத்தகங்கள் இல்லம்
18/2, திருவடி நிழல்
அம்மன் வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்

கலாசாதனா கலைக்கூட நடன ஆசிரியை கவிதாலக்ஷ்மி அவர்களது மாணவிகள் ஹரிணி நகுலேஸ்வரதாஸ், தீபிகா மகேசன் இருவரும் 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நோர்வே ஒஸ்லோ Sandvika Teater இல் ‘’தீதும் நன்றும்’’ எனும் தலைப்பில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தந்தனர். அன்றைய பொழுதைக் கலைப் பொழுதாக்கி கண்களுக்கும் மனதுக்கும் இரசனைப் பொழுதாக அமைத்துத் தந்த ஆடலரசிகள் இருவரும் பாராட்டுதல்களுக்குரியவர்களாவர்.
கூத்தப்பெருமான் அண்டம் முழுவதையும் தனது ஆடல் அரங்காகக் கொண்டு ஆடும் போது உயிரினங்கள் அனைத்தும் சுகம் பெறுகின்றன. அந்த இன்பத்தை ஆடலரசிகள் இருவரும் கண்ணுக்கு முன் கொண்டு வந்தனர்.
குரு ஸ்ரீமதி கவிதாலக்ஷ்மி அவர்கள் பல்துறை சார்ந்த ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டவர். பரதக்கலை மீது அவர் கொண்ட ஈடுபாட்டை அர்ப்பணிப்பை அதனை மாணவரிடையே கொண்டு சேர்க்கும் முறையையும் அன்றுஅரங்கில் தரிசிக்க முடிந்தது. கவிதாலக்ஷ்மி நடன ஆசிரியர் மட்டுமல்ல. கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், தமிழ் புலைமையாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். ஒரு குருவின் தகுதியும் அதுவே. அதனை நன்னூல் ’கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும்’ வேண்டும் எனக் கூறும். அதாவது பல கலை அறிவும் அதனை மாணவருக்குப் போதிக்கும் வன்மையும் வேண்டுமென்பர். புதுமைகளும் நுட்பங்களும் கட்டுடைப்பும் இந்த அரங்க்கில் சிறப்புப் பெற்றன. தமிழ் பாரம்பரிய முறையில் அமைந்த அரங்கேற்ற நிகழ்வாக அமைந்தமை யாவரையும் கவர்ந்திருந்தது. ஆடையலங்கார நேர்த்தியும் பின்னணி ஒலி ஒளியமைப்பும் இன்னோர் உலகிற்கு எம்மை அழைத்துச் சென்றன. பெண் அர்ச்சகர் சிவாஜினி ராஜன் அவர்கள் தமிழில் பூசை செய்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
கொழும்பு மருதானை தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரபல எழுத்தாளரும் கவிஞரும் நாவலாசிரியரும் பன்னூலாசிரியருமான திக்குவல்லை கமால் அவர்கள் தலைமை வகிக்கவுள்ளார்.
பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் இந்த நிகழ்வில் வாசனா தனியார் வைத்தியசாலையின் தலைவரும் தொழிலதிபருமான கலாநிதி அல்ஹாஜ் ரம்ஸி அமானுல்லாஹ் விசேட அதிதியாக கலந்து கொள்வதோடு நூலின் முதன் பிரதியையும் பெற்றுக் கொள்வார்.
ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.எம். ஹிஸ்புல்லாஹ் சிரேஷ்ட அதிதியாக கலந்துகொள்வார். கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணிகளான எம்.ஆர்.எம். ரம்ஸீன், சால்தீன் எம். ஸப்ரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

சென்ற சனிக்கிழைம யூலை மாதம் 27 ஆம் திகதி 2024 அன்று மலை 6:00 மணியளவில் ரெறன்ரோவில் உள்ள சீன கலாச்சாரமண்டபத்தில் செல்வி சாக்ஸவி திலீபனின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. நண்பர் திலீபனின் அழைப்பை ஏற்று நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இது போன்ற பரதநாட்டிய, இசை அரங்கேற்றங்கள் சிலவற்றுக்குச் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டிருந்தாலும், அன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டது போல இசை, நடன ஆசிரியர்களை நான் ஒரு போதும் இப்படியான நிகழ்வுகளில் சந்திக்கவில்லை. இந்த நிகழ்வில் பல புதிய இசை, நடன ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடவும் முடிந்தது குறிப்பிடத் தக்கது.
சாக்ஸவியின் தாயார் ஸ்ரீமதி சுதர்சினி அவர்கள் நடன ஆசிரியராக இருப்பதும் இவர்களின் வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கனடா வளாகத்தைச் சேர்ந்த டாக்டர் சூரியகலா சந்திரிகா ஜீவானந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு அற்புத நர்த்தனாலய அதிபர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் ‘செல்வி சாக்ஸவி திலீபன் மிகவும் திறமை உள்ள பாத்திரலட்சணங்கள் பொருந்திய அன்பும், அடக்கமும், பணிவும் உள்ள சிறந்த மாணவி. நல்ல அங்கசுத்தம், சிறந்த வயப்பிடிப்பு, உணர்ந்த பாவம் என்பனவற்றை சாக்ஸவியின் இந்த நடனத்தில் கண்டு மகிழ்ந்தேன். இந்த அரிய கலையைப் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் உள்ள அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு சாக்ஸவி போன்றவர்களிடமே இருக்கிறது, அவரது எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
- தெளிவாகப் பார்ப்பதற்கு படங்களை ஒரு தடவை அழுத்தவும். -

கனடா வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ளது.
தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து ஏனையோர்க்கு முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே வென்மேரி அறக்கட்டளை.
மேற்படி அறக்கட்டளையின் முதலாவது விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ் . நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் அறக்கட்டளையின் தலைவர் வென்சிலாஸ் அனுரா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டுக்கான இரண்டாவது சர்வதேச விருது வழங்கும் விழா பிரான்ஸில் நாட்டில் நடைபெற்றது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி 2024ம் ஆண்டுக்கான மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா கனடாவில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு Audley Recreation center Ajax என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
அனைவரையும் பணிவன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
வென்சிலாஸ் அனுரா
நிறுவுனர்,
வென்மேரி அறக்கட்டளை
Join Zoom Meeting | Meeting ID: 813 0576 0745 | Passcode: 381740