'காஞ்சி' சேரன் கவிதைகள் நூல் வெளியீடு! - தகவல்: 'காலம்' செல்வம் -


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா ஒருங்கிணைக்கும் வெவ்வேறு பிரிவுகளைச் (Inter Batch) சேர்ந்த பழைய மாணவர்களுக்கு இடையிலான மென்பந்து துடுப்பாட்டப் போட்டிகள் இவ்வருடம் சனிக்கிழமை ஜூன் 15, 2024 அன்று 16 Corinthian Blvd, Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள Fairglen Park மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.
அணியொன்றுக்கு 6 பேரையும் ஐந்து பந்துப் பரிமாற்றங்களையும் கொண்ட இந்தப் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களை ஒன்றிணைப்பதையும் அவர்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்றது. இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற இயல், இசை, நாடக வடிவங்களைக் கட்டிக் காப்பதில் புலம் பெயர்ந்து கனடா வந்த ஈழத்தமிழர்கள், வேலைப் பளுவுக்கு மத்தியிலும் மிகவும் ஆர்வத்தோடு அத்துறையில் ஈடுபட்டார்கள். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்வதில் கஸ்டங்களை அனுபவித்தாலும், தங்களுடன் ஒன்றாக இணைந்த கலை வடிவங்களைப் புலம் பெயர்ந்த மண்ணில் வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் சென்ற சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்களால் தொகுக்கப் பெற்ற ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூலும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘சாக்லட் பெண்ணும் பண்ணைவீடும்,’ ‘யாதுமாகி நின்றவள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனை இணையாசிரியராகக் கொண்ட ‘தமிழ் ஆரம் - 2024’ சிறுவர்களுக்கான சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப் பெற்றன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர், மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
- தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

நேற்று ஸ்கார்பரோவில் எழுத்தாளர் தேவகாந்தனின் 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்', 'சகுனியின் சிரம்' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
முனைவர் மைதிலி தயாநிதி, எழுத்தாளர் அருண்மொழிவர்மன், எழுத்தாளர் த.அகிலன் நூல்களைப்பற்றிய தமதுரைகளை ஆற்றினர். நிகழ்வுக்குத் தலைமையேற்று நெறிப்படுத்தியவர் எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன். பேச்சாளர்கள் தமதுரைகளை நூல்கள் பற்றிய குறை நிறைகளுடன் சுட்டிக்காட்டி ஆற்றினர். முதற் பிரதியினைக் 'காலம்' செல்வம் பெற்றுக்கொண்டார்.
அண்மையில் ரொரன்றோ'வில் அவரது புனைவுகள் பற்றி இலக்கியவெளி நடாத்திய மெய்நிகர்க் கருத்தரங்கக் காணொளியை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். இவர் யாழ் வேலணையில் பிறந்த இவர் பூரணி காலாடிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஆசிரியராகவிருந்து ஓய்வு பெற்றவர். இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைத்தனது உலா சிறுகதைத் தொகுப்புக்காகப் பெற்றவர். இவரது நூல்கள் நூலகத்தளத்திலுள்ளன. அவற்றை வாசிப்பதற்கான இணைப்பு.
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 |Passcode: 12345
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
நேர்காணல்: "கருத்து முரண்பாடுகள், ஒருவரின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடலாகாது நியூசிலாந்து 'நியூசிலாந்து தமிழ் மையம்' ஊடகத்திற்கு எழுத்தாளர் முருகபூபதி வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: நியூசிலாந்திலிருந்து எழுத்தாளர் சிற்சபேசன்
https://youtu.be/QmZYXkR17e8?si=b0UR1Ua6QE38ZQ33
* படத்தை இரு தடவைகள் அழுத்தித் தெளிவாகப் பார்க்கவும்.
மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் (Perth) மாநகரில் கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடக பணியை கௌரவிக்கும் முகமாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ. சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் மாநகரில்
நடைபெறவுள்ளது.
தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராக பணியாற்றிய, கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. அவரின் நினைவாக இந்நூல் வெளியீடு, ஹில்வியூ இன்டர்கல்ச்சுரல் கம்யூனிட்டி சென்டர் மண்டபத்தில், 01/06/2024 மாலை 3.30 முதல் 5.30 வரை நடைபெறும். 1 ஹில் வியூ பிளேஸ், பென்ட்லி, மேற்கு அவுஸ்திரேலியா. (Hillview Intercultural Community Centre, 1 Hill View Place, Bentley, Western Australia) எனும் முகவரியில் நடைபெறும்.
* படங்கள் ஒரு தடவை அழுத்துவதன் மூலம் தெளிவாகப் பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், எதிர்வரும் வெள்ளி 12 April இரவு 8:45 மணிதொடக்கம் சூடான இலக்கியக் களம். சிவ வரதன் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார். களமாடுபவர்கள் ஆசி கந்தராஜா, பொன்ராஜ் தங்கமணி, ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி. பிற்பகுதி ஆட்டத்தில் நேயர்களும் கலந்துகொள்ளலாம்.
பாரிஸ் மாநகரில் 51 -வது இலக்கியச் சந்திப்பு கடந்த சனி - ஞாயிறு (30 - 31 மார்ச் 2024) தினங்களில் சிறப்பாக நடைப்பெற்றது. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள படைப்பாளிகள், இலக்கிய இரசிகர்கள், ஆர்வலர்களால் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகள் ஐரோப்பாவில் ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், டென்மார்க், நோர்வேஇ சுவிஸ் மற்றும் கனடாஇ இலங்கை எனப் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. கொரோனாக் காலத்தில் மட்டும் இலக்கியச் சந்திப்பு தடைப்பட்டிருந்தது. கடந்த வருடம் 50 -வது இலக்கியச் சந்திப்பு அனலைதீவில் நடைபெற்றது.
இலக்கியச் சந்திப்புக்கென நிரந்தர நிர்வாகக் குழு இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் இதனை நடத்துவதற்கெனப் பொறுப்பேற்றுக்கொள்பவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து இலக்கியச் சந்திப்புக்கான ஒழுங்குகளை மேற்கொள்வது வழமை. அந்த வகையில் 51 -வது இலக்கியச் சந்திப்பு பாரிஸ் மாநகரில் நடைபெறச் சிறப்பான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

‘சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி 2024இல் லண்டன் ‘பாரதிய வித்யா பவனில்’ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சென்னை ‘அபய்’ பரதநாட்டிய கலைஞர்கள் சங்கமமும் லண்டன், சலங்கை நர்த்தனாலயா’ நுண்கலைக் கூடமும் இணைந்து செயற்பட்ட இந்நிகழ்வை, நிறுவனர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும் துணை நிறுவனர் பவித்திரா சிவயோகமும் நேர்த்தியாக முன்னெடுத்தமை பாராட்டுக்குரிய விடயம். இதன் அங்கத்தவர்களாக சஸ்கியா கிஷான் மற்றும் றூபேஷ் கேசியும் செயற்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலாநிதி கீதா உபாத்தியாயரும் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதிகள் அம்பிகா தாமோதரம், பாமினி சித்தரஞ்சன், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். பிரதம விருந்தினர் அவர்களுக்கு அந்நிகழ்வில் ‘சாஸ்வத கலா போஷக’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடவேண்டியதொன்றாகும்.
- தெளிவாகப் பார்ப்பதற்கு அறிவித்தல் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
Join Zoom Meeting | Meeting ID: 851 1978 3516 | Passcode: 881566

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் வதியும் ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பில் நடைபெற்றது.
கல்வி நிதியத்தின் கிழக்கு மாகாண தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் முன்னாள் அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையில் வாழ்க்கைச்செலவு அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டிருப்பதனால், இவ்வாண்டு ( 2024 ) முதல் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் ) அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும் அனுப்பலாம். 31 மார்ச், 2024க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.
( ஓசோ இல்லம், 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, , திருப்பூர் 641 604 / 99940 79600 )
திருப்பூர் சக்தி விருது குழு,( (கனவு / முத்தமிழ்ச்சங்கம் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.