அன்பான தமிழ் உறவுகளே, உலக அளவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச ஆண்கள் தினமான Nov 19, இந்த வருடம் எதிர்வரும் Nov 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை (இலங்கை நேரப்படி) – காலை 7.30 – 8.30 மணி வரை (கனடா நேரப்படி) சர்வதேச ஆண்கள் தினம் – இலங்கை (International Men’s Day – Sri Lanka) மற்றும் ஆண்களின் குரல் 360 அமைப்பும் இணைந்து முன்னெடுக்க இருக்கும் இணையவழி கலந்துரையாடலில் இணைந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
2023க்கான கருப்பொருள்: ஆண் தற்கொலையை இல்லாதொழித்தல்
இந்தக் கருப்பொருளில் அல்லது பொதுவாக ஆண்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேச விரும்பினால் தயவுசெய்து எங்களுடன் Nov 10, 2023ம் திகதிக்கு முன் தொடர்புகொள்ளவும்.
பின்குறிப்பு: இலங்கையிலுள்ள சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ-சுகாதார தளங்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் இதர அமைப்புக்களில் பணிபுரிபவர்களை நாம் குறிப்பாக எதிர்பார்க்கிறோம்.
ஆண்களின் குரல் 360 – Voice of Men 360 அமைப்பு பற்றிய அறிமுகம்!
ஆண்களின் குரல் 360 – Voice of Men 360 அமைப்பு ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பு. இது இலண்டன், ஒன்ராரியோ கனடாவில் இருந்து இயங்கி வருகின்றது. இது 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சர்வதேச ஆண்கள் தினம் எனும் உலகளாவிய அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். கனடாவில் சர்வதேச ஆண்கள் தினம் அமைப்பின் உத்தியோக பூர்வ அமைப்பாக எமது ஆண்களின் குரல் 360 அமைப்பு இயங்கி வருகின்றது.
எங்களது குறிக்கோள் ஆண்கள் உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை முன்னெடுப்பதும் ஆகும்.
விழி எனும் பெயரில் எங்களது தளத்தினூடாக நேரடிக் கலந்துரையாடல் நிகழ்வை வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணியளவில் (கனடா நேரப்படி) எடுத்து வருகின்றோம். இந்த நிகழ்வில் நீங்கள் இணைந்துகொண்டு உங்களது வாழ்க்கைப் பயண அனுபவங்களையும் மற்றும் உங்கள் பார்வையில் எமது தமிழ் சமுதாயத்தில் ஆண்கள் உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் அவைகளுக்கான தீர்வுகள் பற்றியும் பகிர்ந்துகொள்ள விரும்பினால் எம்முடன் தொடர்புகொள்ளவும்.
மேலும் எமது சமூகத்தில் ஆண்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவை பற்றி எழுதக்கூடியவர்களையும் (தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ) நாம் எதிர்பார்க்கிறோம. மற்றும் எமது அமைப்பில் இணைந்து செயற்படவும் தன்னார்வத் தொண்டர்களையும் எதிர்பார்க்கிறோம். மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து எம்முடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி
ஆண்களின் குரல் 360
226-289-8784 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எமது சமூக வலைத்தளங்கள்:
https://www.voiceofmen360.org/
https://anchor.fm/voiceofmen360
https://www.facebook.com/groups/voiceofmen360
https://www.facebook.com/voiceofmen360
https://www.youtube.com/c/VoiceofMen360
https://www.tiktok.com/@voiceofmen360
https://www.instagram.com/voiceofmen360/
https://twitter.com/VoiceofMen360
https://www.linkedin.com/groups/12471961/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.