ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: ‘பிரபஞ்சத்தின் முதல் மூன்று நிமிடங்கள்’ !



எமது இனிய நண்பர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் திடீரென எம்மைவிட்டுச் சென்ற 14ஆம் திகதி யூன் மாதம் 2021 அன்று பிரிந்து விட்டார். கோவிட்-19 காலச் சூழ்நிலையில் நேரடியான தொடர்புகள் அற்ற நிலையில் அவரது திடீர் மறைவு கனடிய தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இந்தக் குறுகிய காலத்தில் இவரைப் போன்ற மூத்த தலைமுறைத் தமிழ் உணர்வாளர்கள் பலரை நாம் இழந்திருக்கின்றோம். இந்த மண்ணில் தமிழ் மொழியும், எமது பண்பாடும் நிலைத்து நிற்கப் பாடுபட்டவர்களில் நண்பர் கலாநிதி வசந்தகுமார் அவர்களுக்கும் பெரியதொரு பங்குண்டு. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக எங்களைப் போலவே அவரும் கனடிய மண்ணில் எம்மினத்தின், எமது மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
‘வானவில்’ என்ற நிகழ்ச்சிகள் மூலம்தான் இவர் எனக்கு முதலில் அறிமுகமானார். 90 களின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் எமது மொழி மற்றும் பாரம்பரியத்தைப் பேணக்கூடிய வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் வருடம் தோறும் நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது. ஒன்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை பழைய மணவர்களின் ‘வானவில்’ கலை நிகழ்ச்சி, மற்றது நான் கல்வி கற்ற மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ‘முத்தமிழ் விழா’ நிகழ்ச்சி. குறிப்பாக நாடக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் பழைய மணவர்களின் நிகழ்ச்சிகளாக இவை இரண்டும் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பல தடவைகள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய நிகழ்வுகளிலும், ஸ்ரீமதி நிராசந்துரு அவர்களின் நடனக்கல்லூரி பட்டமளிப்பு நிகழ்வுகளிலும் சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன். ஒருமுறை நூல் வெளியீட்டு நிகழ்வின் போதும், என்னை அழைத்துச் சபையோருக்கு அறிமுகம் செய்து, முதற்பிரதி வாங்கவைத்துக் கௌரவித்திருந்தார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், ஏறக்குறைய இருபது வருடகாலமாக இயங்குகிறது. தமிழ் எழுத்தாளர் விழாக்கள், இலக்கிய சந்திப்புகள் மற்றும் வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்குகள் நடத்திவந்திருக்கும் இச்சங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்வாறு ஓரிடத்தில் அதாவது மண்டபங்களிலோ அல்லது திறந்த அரங்குகளிலோ, அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த முடியாது போய்விட்டது. சமகாலத்தில் சமூக இடைவெளி பேண வேண்டியிருப்பதனால், நவீன தொழில் நுட்பம் எமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம் மூலம் கணினியில் இணையவழி காணொளி ஊடாக அரங்குகளை நடத்திவருகின்றோம். அதன் ஊடாக உலகின் எந்தப்பாகத்தைச் சேர்ந்தவர்களுடனும் முகம் பார்த்து நேரடியாக உரையாடக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், கல்வி, இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை சார்ந்து பணியாற்றி, அவுஸ்திரேலியாவிலேயே மறைந்த ஆளுமைகளை நினைவுகூரும் வகையிலும், இந்த நாட்டில் வாழும் இளம் தமிழ் சந்ததிகளிடம், குறிப்பாக இங்கு தமிழையும் ஒரு பாடமாக உயர் வகுப்பிலும் படிக்கின்ற மாணவர்களுக்காகவும், பல்கலைக்கழக பிரவேச பரீட்சைகளில் தோற்றவிருக்கும் தமிழ் மாணவர்களுக்காகவும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை இணைய வழி அரங்கின் ஊடாக நடத்தி வருகின்றது. இதனை மெய் நிகர் தொடர்பாடல் எனவும் அழைக்கின்றார்கள். இந்த நாட்டிற்கு வந்து தமிழ் சார்ந்த அனைத்து சமூகப்பணிகளையும் மேற்கொண்டு மறைந்தவர்களின் வாழ்வையும் பணிகளையும் இத்தகைய அரங்குகள் மூலம் திரும்பிப்பார்க்கின்றோம். அந்த வகையில், இங்கு மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை இன்று 20 ஆம் திகதி ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.
அறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்

வணக்கம், திறனாய்வுப் போட்டி முடிவுகள் இத்துடன் இணைத்திருக்கின்றேன். 14 நாடுகளில் இருந்து பங்குபற்றி இருந்தார்கள். பல போட்டியாளர்கள் எனது சிறுகதைகளை தங்கள் இணையத்தளதில் படித்தாகக் குறிப்பிட்டிருந்தார்கள். தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
குரு அரவிந்தன்
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய
திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்!
1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள்
நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை
2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள்
சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை
3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள்
முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு
4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள்
ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை
5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள்
சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு

அவுஸ்திரேலியாவிலிருந்து 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம், சமகால இடைவெளிபேணல் நடைமுறைக்கு அமைவாக அண்மையில் இணைய வழி காணொளியூடாக நடைபெற்றது.
நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதி வரவேற்புரை நிகழ்த்துகையில் கடந்த வருடமும் இந்த வருடமும் மறைந்த நிதியத்தின் உறுப்பினர்கள் கலைவளன் சிசு. நாகேந்திரன், மற்றும் திருமதி சுகந்தி சஞ்சீவன் ஆகியோர் குறித்து நினைவுபடுத்திப் பேசினார்.
மறைந்த இருவரும் கல்வி நிதியத்தின் ஊடாக பல வருடங்கள் இலங்கையில் சில மாணவர்களுக்கு உதவி வந்தவர்கள். அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுட்டிக்கப்பட்டது.

முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச் சகோதரரின் மிருதங்க அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின் அணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இரு மருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன.வாழைகளின் நடுவில் பச்சையினைவெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருபடுத்தி நின்றன. மேடையின் முன்னே மங்கலாமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய் கோலமிட கோலத்தின் நடுவே - தேவ சபையில் சிவனினாரின் திருநடனத்துக்கு லயத்தைக் கொடுத்து மிருதங்கம் முழங்கும் நந்தியெம்பெருமானின் வெண்கல வடிவம் வைக்கப்பட்டிருந்தமையினப் பாராட்டியே ஆக வேண்டும்.விநாயகப் பெருமானும் , கல்வித் தெய்வமான கலைமகளும் மங்கல விளக்குகள் மத்தியில் மேடைக்குக் காவலாய் , அரங்கேற்றத்துக்கு அரணாக வைக்கப்படிருந்தமை பக்தியின் பரவசத்தை நல்கியது எனலாம்.

17.04.2021 அன்று மாலை 6 மணிக்கு நண்பர்கள், வசந்தாவும் மாறனும் மற்றும் அவந்திக்காவின் பள்ளி நாள் ஆகிய மூன்று சிறுவர் சிறுகதைகள் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது. தற்கால கொரோணா சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு இணைய முற்றத்தில் Team செயலியூடாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.