அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், ஏறக்குறைய இருபது வருடகாலமாக இயங்குகிறது. தமிழ் எழுத்தாளர் விழாக்கள், இலக்கிய சந்திப்புகள் மற்றும் வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்குகள் நடத்திவந்திருக்கும் இச்சங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்வாறு ஓரிடத்தில் அதாவது மண்டபங்களிலோ அல்லது திறந்த அரங்குகளிலோ, அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த முடியாது போய்விட்டது. சமகாலத்தில் சமூக இடைவெளி பேண வேண்டியிருப்பதனால், நவீன தொழில் நுட்பம் எமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம் மூலம் கணினியில் இணையவழி காணொளி ஊடாக அரங்குகளை நடத்திவருகின்றோம். அதன் ஊடாக உலகின் எந்தப்பாகத்தைச் சேர்ந்தவர்களுடனும் முகம் பார்த்து நேரடியாக உரையாடக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், கல்வி, இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை சார்ந்து பணியாற்றி, அவுஸ்திரேலியாவிலேயே மறைந்த ஆளுமைகளை நினைவுகூரும் வகையிலும், இந்த நாட்டில் வாழும் இளம் தமிழ் சந்ததிகளிடம், குறிப்பாக இங்கு தமிழையும் ஒரு பாடமாக உயர் வகுப்பிலும் படிக்கின்ற மாணவர்களுக்காகவும், பல்கலைக்கழக பிரவேச பரீட்சைகளில் தோற்றவிருக்கும் தமிழ் மாணவர்களுக்காகவும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை இணைய வழி அரங்கின் ஊடாக நடத்தி வருகின்றது. இதனை மெய் நிகர் தொடர்பாடல் எனவும் அழைக்கின்றார்கள். இந்த நாட்டிற்கு வந்து தமிழ் சார்ந்த அனைத்து சமூகப்பணிகளையும் மேற்கொண்டு மறைந்தவர்களின் வாழ்வையும் பணிகளையும் இத்தகைய அரங்குகள் மூலம் திரும்பிப்பார்க்கின்றோம். அந்த வகையில், இங்கு மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை இன்று 20 ஆம் திகதி ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.

சங்கத்தின் தலைவர் மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சித் தொடரின் முதலாவது அங்கம் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடந்தவேளையில், ஏற்கனவே அமரத்துவம் எய்திய எழுத்தாளர்கள் எஸ். பொன்னுத்துரை , நித்தியகீர்த்தி, காவலூர் இராஜதுரை, கலாநிதிகள் வேந்தனார் இளங்கோ, ஆ. கந்தையா, பேராசிரியர்கள் பொன். பூலோகசிங்கம், கைலாசநாதக் குருக்கள் ஆகியோரின் வாழ்வும் பணிகளும் தொடர்பான நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தத் தொடர் அரங்கின் இரண்டாவது அங்கம் இன்று இடம்பெறவுள்ளது. இவ்வரங்கில் ஓவியர் கே.ரி. செல்வத்துரை பற்றி அவரது பேரனும் இசைக்கலைஞருமான திரு. அர்ஜுனன் புவீந்திரன் உரையாற்றுகிறார். ஓவியர் செல்வத்துரை இலங்கையிலும், புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் புகழ்பெற்றவர். அத்துடன் ஒளிப்படக் கலைஞருமாவார். நாம் இன்றும் ஊடகங்களிலும் தமிழ்ப்பாட நூல்களிலும் காணும் நவாலியூர் சோமசுந்தரப்புலவர், மற்றும் யோகர் சுவாமிகளின் படங்களை அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தமது ஒளிப்படக்கருவியால் பதிவுசெய்த கலைஞருமாவார். அவரது ஓவியக்கண்காட்சிகள் முன்னர் மெல்பனில் நடந்துள்ளன.

கலைவளன் சிசு. நாகேந்திரன் பற்றிய நினைவுரையை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு துணைத்தலைவர் திரு. மணியன் சங்கரன் நிகழ்த்துவார். சிசு. நாகேந்திரன், இலங்கையில் குத்துவிளக்கு, நிர்மலா முதலான திரைப்படங்களிலும் நடித்தவர். அத்துடன் நாடக, கூத்து கலைஞருமாவார். அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும், தமிழ் – ஆங்கிலம் மொழிமாற்று அகராதி முதலான நூல்களையும் எழுதியவர். இந்த அரங்கை நடத்தும் சங்கத்தின் தலைவராகவும், காப்பாளராகவும் முன்னர் இயங்கியவர்.

இலங்கையில் கல்விப்பணிக்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்தவரும் இந்திய தத்துவ ஞானம் என்ற அரிய நூலை எழுதியவருமான வித்தியாதிபதி கி. இலக்‌ஷ்மண அய்யர், அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் மறைந்தவர். தமிழ் ஊடகங்களில் எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் நேர்ந்துவிடாதிருக்கவேண்டும் என தொடர்ந்து தமது கட்டுரைகள் வாயிலாக வலியுறுத்தி வந்திருப்பவர். அவர் மறைந்த பின்னர் வெளியான அவரது கட்டுரைகள் அடங்கிய நூல் சிப்பிக்குள் முத்து அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது. அன்னாரைப்பற்றிய நினைவுரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான இலக்கிய திறனாய்வாளர் கலாநிதி நா. சுப்பிரமணிய அய்யர் நிகழ்த்துவார்.

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவரும் அவுஸ்திரேலியாவுக்கு முதல் முதலில் புகலிடம்பெற்று வந்த தமிழ் சமூகத்தினரின் ஞானத்தந்தையாக விளங்கியவருமான பேராசிரியர் சி. ஜே. இலியேஸர், மெல்பன் 3 E A வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இயங்கியவர். அத்துடன் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கங்களின் சம்மேளனம் ஆகியனவற்றின் ஸ்தாபகத் தலைவராகவும் பணியாற்றியவர். அவுஸ்திரேலியாவில் , இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் , நலன்கள் தொடர்பாக நடந்த பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர். இவர் பற்றிய நினைவுரையை, விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமூகப்பணியாளருமான மருத்துவ கலாநிதி இராஜன் இராசையா நிகழ்த்துவார்.

இலங்கை வானொலி, லண்டன் பி. பி.சி. தமிழோசை முதலானவற்றில் முன்னர் பணியாற்றியவரும், இலங்கை நாடாளுமன்றில் முன்னர் சமகால மொழிபெயர்ப்பாளராக இயங்கியவருமான ‘ சுந்தா ‘ சுந்தரலிங்கம், இலங்கை வானொலி கலையகத்தில் சிறந்த நாடகக்கலைஞராகவும் விளம்பர அறிவிப்பாளராகவும் மிளிர்ந்தவர். அப்பல்லோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய வேளையில் அந்த உலகசாதனை பற்றி வானொலிகளில் விவரணச்சித்திரம் வழங்கி, அன்றைய அமெரிக்க ஜனாதிபதியால் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டவர். அன்று முதல் “ அப்பல்லோ “ சுந்தா எனவும் அழைக்கப்பட்டவர். சிட்னிக்கு வந்தபின்னரும் வானொலி ஊடகத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். இவர் தமது வானொலி ஊடக அனுபவம் சார்ந்து எழுதிய மனவோசை நூல் குறிப்பிடத்தகுந்தது. சுந்தா – சுந்தரலிங்கம் பற்றிய நினைவுரையை சிட்னியில் வதியும் எழுத்தாளரும், ஊடகவியலாளரும் தமிழ் அவுஸ்திரேலியன் இதழின் முன்னாள் ஆசிரியருமான சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியம் நிகழ்த்தவுள்ளார்.

புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரும், குத்துவிளக்கு - ஈழத்து திரைப்படத்தின் தயாரிப்பாளருமான வி. எஸ். துரைராஜா, சிறந்த சமூகப்பணியாளருமாவார். இலங்கையில் நடந்த தமிழராய்ச்சி மாநாடு மற்றும் தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக்கழகம் முதலானவற்றின் பணிகளில் பங்கேற்றவர். யாழ் . பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டதன் பின்னர், அதன் புனர் நிர்மாணப்பணிகளுக்காகவும் ஆக்கபூர்வமாக உழைத்தவர். யாழ். பொது நூலகம் குறித்த ஆவணப்பதிவொன்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அன்னாரைப்பற்றிய நினைவுரையை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினரும், ஆங்கிலத்திலும், தமிழிலும் இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவருமான திருமதி சகுந்தலா கணநாதன் நிகழ்த்துவார்.

சிட்னியில் தமிழ் நூலகம் அமைப்பதில் பல வருடங்களுக்கு முன்னர் பாடுபட்ட கலாநிதி வே. இ. பாக்கியநாதன், தமிழ் நூலகம் தொடர்பாக வழிகாட்டும் கைநூலும் எழுதியவர். சிட்னியிலிருந்து வெளியான கலப்பை இதழில் எழுத்தின் கதை என்ற தலைப்பில் கல்லிலிருந்து கணினி வரையில் தமிழ் எழுத்தின் வரிவடிவத்தில் நேர்ந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதியவரான கலாநிதி வே. இ . பாக்கியநாதன் , தொடர்ந்தும் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர். இவர் பற்றி சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான திரு. கானா. பிரபா நினைவுரையாற்றுவார்.


அவுஸ்திரேலியா மெல்பனில் ஒன்றியத்தமிழர் தோழமை என்ற அமைப்பினை தொடக்கியவரும், தமிழ் உலகம் – Tamil World ஆகிய பத்திரிகைகளின் நிருவாக ஆசிரியராக விளங்கியவருமான மருத்துவர் பொன். சத்தியநாதன், தீவிர தமிழ்ப்பற்றாளர். கணினியில் தமிழ் உருபுகள் தொடர்பாக ஆய்வுகளையும் மேற்கொண்ட சத்தியநாதன், சிறந்த சமூகப்பணியாளராகவும் விளங்கியவர். விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரான சத்தியநாதன் பற்றி திரு. நவரத்தினம் இளங்கோ உரையாற்றுவார்.

எழுத்தாளரும், சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி, அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசு இதழின் ஆசிரியராகவும் இயங்கியவர். கன்னிகா தானங்கள் நூலுருவில் வெளிவந்த இவரது முதல் கதைத் தொகுதி. அருண். விஜயராணியின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள் என்பனவும் வான் அலைகளில் பரவியுள்ளன. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றிலும் தலைவராக பணியாற்றியவர். அருண். விஜயராணி பற்றிய நினைவுரையை மெல்பன் பல்கலைக்கழக மாணவி செல்வி மோஷிகா பிரேமதாச நிகழ்த்துவார்.

விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முதலானவற்றில் அங்கம் வகித்து பல்வேறு தமிழர் உரிமைப் போராட்டங்களில் முன்னணி வகித்தவரும் எழுத்தாளருமான சண்முகம் சபேசன் அவர்கள் மெல்பன் 3 C R வானொலி தமிழ்க்குரலில் கால் நூற்றாண்டு காலம் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தியாளராகவும் பணியாற்றியவர். ஏராளமான அரசியல் விமர்சன ஆய்வுக்கட்டுரைகளை எழுதி 3 C R வானொலி தமிழ்க்குரலில் ஒலிபரப்பியிருக்கும் சண்முகம் சபேசனின் பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் Tamil Nation ஊடகத்திலும் வெளிவந்துள்ளன. சண்முகம் சபேசன் எழுதியிருக்கும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் மெல்பனில் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. சண்முகம் சபேசன் பற்றிய நினைவுரையை அவரது நீண்டகால நண்பரும் சமூகப் பணியாளருமான திரு. என். விவேகானந்தன் நிகழ்த்துவார். இணைவழி விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88334290335?pwd=dlBDWHZDNXRVQVoybXJyVTEzM2g5Zz09

Meeting ID: 883 3429 0335
Passcode: 158352

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

 
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
PATHIVUKAL.COM -  Media Kit

குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

குரு அரவிந்தன் திறனாய்வுப் போட்டி முடிவுகள்!

வாசிக்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்' - ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can




வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ