மெய்நிகர் அரங்கு: மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ்!



பல வருடங்களுக்குப் பின்னர் எனது சிறுகதைத்தொகுதியொன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரவுள்ளது. ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாகக் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' என்னும் தலைப்பில் எனது 27 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதி புரட்டாதி 25 அன்று வெளிவரவுள்ளது. நான் நினைத்தவாறு தொகுப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிலையில் வெளிவருகின்றது. இதற்காக ஜீவநதி பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் பரணீதரனுக்கும் நன்றி.
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், விதை குழுமம் செப்ரம்பர் மாதத்தில் 12, 19, 26 ஆகிய திகதிகளில் தனது நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருக்கின்றது. இந்நிகழ்வுகளில் நீங்களும் கலந்துகொள்வதோடு ஆர்வமுள்ளாவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நிகழ்வு 01
அறிமுகமும் உரையாடலும் - நிகழ்வு 03
நூலகங்கள் என்பவை வெறும் கட்டடங்களும் புத்தகங்களும் அல்ல, அவை சமூகத்தின் உயிர்ப்பான ஓர் அங்கமாகவும் சமூக முன்னேற்றத்திற்கான கருவிகளில் ஒன்றாகவும் இருப்பன என்கிற புரிதலை அறிவுறுத்திவரும் மிகச்சிலரில் நூலியலாளர் என். செல்வராஜா முக்கியமான ஒருவர். கிராமிய நூலகங்கள் குறித்தும் சிறுவர் நூலகங்களின் உருவாக்கம் குறித்தும், பட்டியலாக்கம், ஆவணமாக்கல் செயற்பாடுகள், நூலகர்களுக்கான வழிகாட்டல்கள் என்பவை சார்ந்ததுமாக அவரது செயற்பாடுகள் நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்பவை. ஈழத்து நூல்களின் விபரப்பட்டியலான நூல் தேட்டத்தின் 15வது தொகுதி இவ்வாண்டின் ஆரம்பப்பகுதியில் வெளிவந்திருக்கின்றது.
'எங்கட புத்தகங்கள்' வெளியீடாக இவ்வாண்டு வெளிவந்த என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூலின் அறிமுகத்துடன் அதன் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் தேவைகள் குறித்தும் சமூக அபிவிருத்தியில் அவற்றின் வகிபாகம் குறித்ததுமாக விதை குழுமம் ஒருங்கிணைக்கும் ”அறிமுகமும் உரையாடலும்” தொடரின் மூன்றாவது நிகழ்வு நடைபெற இருக்கின்றது.
அன்புத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். வருடம் தோறும் வழங்கப்படும் திருப்பூர் இலக்கிய விருது வழங்கும் விழா இவ்வாண்டு சென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும். இவ்வாண்டு முதல் கொங்கு முன்னோடி எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் நினைவுவிருது வழங்கப்படும். இவ்விருது இவ்வாண்டு‘தாளடி’நாவல், எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழாநடைபெறும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னைவிழாவில்விருதுபெறுவோர் :
அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி.
பாண்டிச்சேரிஎழுத்தாளர்கள் :
லெனின்பாரதி, டாக்டர்சந்திரசேகரன், பாரதிவசந்தன், பூங்குழலி, கலாவிசு, பூபதிபெரியசாமி, செந்தமிழினியன், தி.கோவிந்தராசு, நா.இராசசெல்வம், ஊத்தங்கால்கோவிந்தராசு, இரா.இளமுருகன், துரையரசன்.

கூகுள் சந்திப்பு: https://meet.google.com/srz-beaj-equ

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: ‘தமிழரின் காப்பிய அழகியல் ’ - இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை! பேசுபவர்: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்!

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 33 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம், மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் தற்போது உதவி வருகிறது. நுவரேலியா மாவட்டத்தில் நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

சிரித்திரன் சஞ்சிகை மீண்டும் வெளிவருவது தெரிந்ததே. தற்போது உலகமெங்கும் விற்பனையாகும் சிரித்திரன் இதழ்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு இலங்கையில் புது வழியொன்றினைக் கையாள்கின்றார்கள். இளைஞர்கள் எவ்விதம் சிரித்திரன் சஞ்சிகையை மக்களிடத்தில் கொண்டு செல்கின்றார்கள் என்பதை விளக்கும் புகைப்படங்கள் இவை. இவற்றை அனுப்பிய சிரித்திரன் ஆசிரியரின் மகன் ஜீவகனுக்கு நன்றி.