நூல் வெளியீடு - எல்.சாந்திகுமாரின் 'காலமும் மனிதர்களும்'



பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் அவர்கள் கலந்துகொண்டு புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் குறித்த அடிப்படைகளையும், எளிமையாக கதைகளைத் தேர்வு செய்து எழுதுவதையும், கதைகளுக்கான மொழி மற்றும் எளிய பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கவுள்ளார்.
'எங்கட புத்தகங்கள்' புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடந்திட வாழ்த்துகள். கலை, இலக்கிய ஆர்வலர்களே! கண்காட்சியில் விற்பனையாகும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கி ஆதரியுங்கள். எதிர்காலத்தில் மேலும் பல நூல்கள் வெளியாகும் வாய்ப்புகள் இதனால் அதிகரிக்கும்.



சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறந்த பேச்சாளரான திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகப் பிற்போடப் பட்டிருந்த இந்தவிழா இம்முறை மிகச் சிறப்பாக நடந்தேறியது.
திரு. சாள்ஸ் தேவசகாயம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவரும் இந்தத் தமிழ் மிரர் பத்திரிகை தமிழ் வாசகர்களை மட்டுமல்ல, ஆங்கிலம் தெரிந்த பல்வேறு சமூகங்களையும் சென்றடைவதால், தமிழர்களைப் பற்றி, அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தை, அரசியல் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் ஏனைய கனடியர்களும் அறிந்து கொள்ள மிகவும் உதவியான ஊடகமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
காலம் - நவம்பர் 12, 2022 சனிக்கிழமை பிற்பகல் 4 மணி.
இடம் - Scarborough Village Recreation Center , 3600 Kingston Road, Toronto.

இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.10.2022) கொழும்பில் நடைபெற்ற 'அரச சாகித்திய இலக்கிய விருது' விழாவில் இலங்கை தமிழ் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் வெளியான 'அந்திம காலத்தின் இறுதி நேசம்' நூல், சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதினை வென்றுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, சிங்களப் பெண் எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் அடங்கிய அந்த நூலை ஆதிரை பதிப்பகம் வெளியிட்டிருந்தது.
வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.பழ மோகன்(சிங்கப்பூர்) (கவிதை: பெருங்கடல் நட்பில் கலக்க...நன்றி:அய்யப்ப மாதவன்(தமிழகம்),
எழுத்தாளர்/முனைவர்.முபீன் சாதிகா(குறுங்கதை:புத்தகம்),
கவிஞர்.பிரேம பிரபா)சென்னை) (கவிதை:ஒற்றைப் புன்னகை),
எழுத்தாளர்.ஜெயா சுந்தா (குறுங்கதை:தோல்வி..),
எழுத்தாளர்.'பாடுமீன்'சிறீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா) (இலக்கியம்: குறளின்பம்),
கவிஞர்.பழநி பாரதி (கவிதை:வீட்டுக்காரம்மாள் சாமிக்கு...),
கவிஞர்.பா.திருச்செந்தாழை (கவிதை:ஒரு பாறையின் மீது வெய்யில் விழுந்து...),
கவிஞர்.இரா.மதிராஜ்(தமிழகம்) (கவிதை:அறச்சாலை..),
கவிஞர்.அகமது பைசால் (இலங்கை) (கவிதை:புது இடம்..),
கவிஞர்.காசி ஆனந்தன் (குறுங்கதை:இரவு...),
ஆகியோரின் படைப்புக்கள் இணைகப்பட்டுள்ளன.
மெய்நிகர் இணைப்பு | Meeting ID: 895 2954 3173 | Passcode: 202886

வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.பா.நூருல்லாஹ்(மதுரை) (சிறுகதை:வேண்டாத காரணம்..),
கவிஞர்.கவிஜி (கவிதை:இறைவேளை..),
கவிஞர்.பாத்திமா முஜாமளா முபாரக்,
கவிஞர்.ராகினி முருகேசன்(கவிதை:பிரசவிக்கும் வலி..),
எழுத்தாளர்.முபீன் சாதிகா (குறுங்கதை:மயில் பெண்),
எழுத்தாளர்.திருமலை.சுந்தா(குறுங்கதை: பொறுமையும் சினமும்..),
கவிஞர்.வே.சுகந்தி(தமிழகம்)(கவிதை:தென்றலே தூது போ)
கவிஞர்.விக்ரமாதித்தன் (எப்படியும் இருந்துகொண்டே இரு.. நன்றி:ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா'),
எழுத்தாளர். இரா.சம்பந்தன்(கனடா) (கட்டுரை:ஓளவை காட்டும் பெண்கள்),
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும். உங்கள் படைப்புக்களையும் உங்கள் குரலில் (எம் பி 3 ஒலிவடிவில்)ஒலிப்பதிவுசெய்து அனுப்புங்கள்.உங்கல் நண்பர்களின் படைப்புக்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.

மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும் எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு பேருவலை, மருதானையிலுள்ள அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் அப்துல் அஃலாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இரத்தினக்கல் வியாபாரிகளான அல்ஹாஜ் எம்.ரீ.எம். ஹாரிஸ் மற்றும் அல்ஹாஜ் அஸ்ஹர் ஸவாஹிர் ஆகியோர்கள் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
மெய்நிகர் அரங்கு ( 11-09-2022 ) காணொளி - https://youtu.be/9XKG3bJ-77I