வளர்மதி 60இல் (1963 - 2023) உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்! - தகவல்: செல்வன் -


* படங்களை அழுத்துவதன் மூலம் பெரியதாக, தெளிவாகப் பார்க்கலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு நாளை (18-01-2023) ஆரம்பமாகிறது. “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் நாளையும் (18-01-2023) நாளை மறுதினம் (19-01-2023) இணையவழியாகவும் நடைபெறவுள்ளது. பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டின் இணையவழி அமர்வுகள் 19-01-2023 காலை 9 மணிக்கு ஆரம்பிக்கின்றன.
இணைவதற்கான வழி: Join Zoom Meeting

சிலாவத்துறை பாடசாலை வரலாறு நூல் வெளியீடானது 24.12.2022 அன்று சிலாவத்துறை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூலின் முதல் பிரதியை கலைத்தென்றல் கவிஞர் ஹாமித் எம். சுஹைப் அவர்கள் நூலாசிரியரும் ஆய்வாளருமான எஸ்.எம். அன்ஸார் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதையும், இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம்.
அண்மையில் மறைந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான ஜெயக்குமாரன் மகாதேவனின் (ஜெயன் தேவா) இறுதிக்கரியைகள் எதிர்வரும் 11.01.2023 அன்று லிவர்பூலில் நடைபெறவுள்ளது.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் நாடகக் கலைஞர் க. பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் எனும் புதிய நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 07 ஆம் திகதி ( 07-01-2023 ) சனிக்கிழமை மாலை 4-30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறும்.
ஈழத்து நவீன தமிழ் நாடக உலகில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவருபவரும், தற்போது இங்கிலாந்தில் வசிப்பவருமான கலைஞரும் நாடக இயக்குநருமான க. பாலேந்திரா எழுதி கொழும்பு குமரன் இல்லம் பதிப்பகத்தினால் வெளியாகியிருக்கும் பாலேந்திராவின் அரங்கக்கட்டுரைகள் நூலில், அவர் ஏற்கனவே எழுதி ஊடகங்களில் வெளியான பல ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2022 ) வருடாந்த பொதுக்கூட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி (18-12-2022) ஞாயிற்றுக் கிழமை மாலை 3-00 மணியிலிருந்து மாலை 5-00 மணி வரையில் மெய்நிகரில் ( Zoom Meeting) நடைபெறும்.

பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் அவர்கள் கலந்துகொண்டு புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் குறித்த அடிப்படைகளையும், எளிமையாக கதைகளைத் தேர்வு செய்து எழுதுவதையும், கதைகளுக்கான மொழி மற்றும் எளிய பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கவுள்ளார்.
'எங்கட புத்தகங்கள்' புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடந்திட வாழ்த்துகள். கலை, இலக்கிய ஆர்வலர்களே! கண்காட்சியில் விற்பனையாகும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கி ஆதரியுங்கள். எதிர்காலத்தில் மேலும் பல நூல்கள் வெளியாகும் வாய்ப்புகள் இதனால் அதிகரிக்கும்.



சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறந்த பேச்சாளரான திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகப் பிற்போடப் பட்டிருந்த இந்தவிழா இம்முறை மிகச் சிறப்பாக நடந்தேறியது.
திரு. சாள்ஸ் தேவசகாயம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவரும் இந்தத் தமிழ் மிரர் பத்திரிகை தமிழ் வாசகர்களை மட்டுமல்ல, ஆங்கிலம் தெரிந்த பல்வேறு சமூகங்களையும் சென்றடைவதால், தமிழர்களைப் பற்றி, அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தை, அரசியல் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் ஏனைய கனடியர்களும் அறிந்து கொள்ள மிகவும் உதவியான ஊடகமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
காலம் - நவம்பர் 12, 2022 சனிக்கிழமை பிற்பகல் 4 மணி.
இடம் - Scarborough Village Recreation Center , 3600 Kingston Road, Toronto.

இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.10.2022) கொழும்பில் நடைபெற்ற 'அரச சாகித்திய இலக்கிய விருது' விழாவில் இலங்கை தமிழ் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் வெளியான 'அந்திம காலத்தின் இறுதி நேசம்' நூல், சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதினை வென்றுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, சிங்களப் பெண் எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் அடங்கிய அந்த நூலை ஆதிரை பதிப்பகம் வெளியிட்டிருந்தது.
வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.பழ மோகன்(சிங்கப்பூர்) (கவிதை: பெருங்கடல் நட்பில் கலக்க...நன்றி:அய்யப்ப மாதவன்(தமிழகம்),
எழுத்தாளர்/முனைவர்.முபீன் சாதிகா(குறுங்கதை:புத்தகம்),
கவிஞர்.பிரேம பிரபா)சென்னை) (கவிதை:ஒற்றைப் புன்னகை),
எழுத்தாளர்.ஜெயா சுந்தா (குறுங்கதை:தோல்வி..),
எழுத்தாளர்.'பாடுமீன்'சிறீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா) (இலக்கியம்: குறளின்பம்),
கவிஞர்.பழநி பாரதி (கவிதை:வீட்டுக்காரம்மாள் சாமிக்கு...),
கவிஞர்.பா.திருச்செந்தாழை (கவிதை:ஒரு பாறையின் மீது வெய்யில் விழுந்து...),
கவிஞர்.இரா.மதிராஜ்(தமிழகம்) (கவிதை:அறச்சாலை..),
கவிஞர்.அகமது பைசால் (இலங்கை) (கவிதை:புது இடம்..),
கவிஞர்.காசி ஆனந்தன் (குறுங்கதை:இரவு...),
ஆகியோரின் படைப்புக்கள் இணைகப்பட்டுள்ளன.