கலை, இலக்கியத் திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் நூல் வெளியீடும் பவளவிழாவும்!



அமெரிக்கா கனடா வாழ் தமிழ் அன்பர்களே! ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இனிய செய்தியோடு வருகிறோம். பேரவை பெருமையுடன் வழங்கும் "வணக்கம் வட அமெரிக்கா-இயல்" உங்களுக்காக ! கவிதைப்போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி. போட்டிகள் அனைத்தும் வயதிற்கு ஏற்ப நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.
காந்தள் (5 முதல் 8 வயது வரை)
முல்லை (9 முதல் 12 வயது வரை )
தாமரை (13 முதல் 7 வயது வரை )
தாழை (18 வயதிற்கு மேற்பட்டோர் )
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரபல ஆளுமைகளுடன் பயிற்சிப் பட்டறையை பேரவை ஏற்பாடு செய்யும். நீங்கள் இந்த செய்தியை உங்கள் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் அறிவிப்பு செய்தாலே போதுமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பதிவு செய்து விடுவார்கள். உங்கள் சங்கத்தில் எந்த போட்டிகளையும் நடத்த.. இப்போட்டிகளை மாநில அளவில் (முதல், இரண்டாம்) சுற்றுகளாகவும், இறுதிச் சுற்றை பேரவை விழாவிலும் பேரவையின் "வணக்கம் வடஅமெரிக்கா" குழு மூலம் நடத்தவிருக்கிறோம். விழாவில் வெற்றி பெறுபவருக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும் போட்டிகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்ள, போட்டிகளில் பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். https://forms.gle/ FEh5vEPCpV4NAqoR7 (பதிவு செய்வதற்கான இறுதி நாள் FEB 28 2023.)

வலையொளி இணைப்பு - https://www.youtube.com/live/s7gPNB6aAbc?feature=share

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தினம் ( 17-02-2023 ) மெய்நிகர் அரங்கு! அம்பியின் சொல்லாத கதைகள் மின்னூல் வெளியீடு!
அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் மூத்த எழுத்தாளர் – கவிஞர் அம்பி எழுதிய சொல்லாத கதைகள் தொடர், அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு இணைய இதழ்களில் முன்னர் வெளியானது. தற்போது இந்தத் தொடர் மின்னூல் வடிவத்தில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டு அரங்கும், கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வும் இம்மாதம் 17 ஆம் திகதி ( 17-02-2023 ) வெள்ளிக்கிழமை மெய்நிகரில் நடைபெறும்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து, பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூல்களாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இம்முறை சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் மூன்று நூல்கள் போட்டியில் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நாவல், மொழிபெயர்ப்பு துறைகளில் இம்முறை எந்த நூலும் பரிசுக்குரியதாக தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
போட்டி முடிவுகளும் பரிசுத் தொகையும்
வேப்பமரமும் பவளம் ஆச்சியும் ( சிறுகதை )
விவேகானந்தனூர் சதீஸ் எழுதியது - பரிசு - ரூபா ஐம்பதினாயிரம்
கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை )
சி. கருணாகரன் எழுதியது. பரிசு ரூபா ஐம்பதினாயிரம்.
மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை )
அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் எழுதியது.
பரிசு - ரூபா ஐம்பதினாயிரம்.
பரிசு பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையும் சான்றிதழ்களும், 2023 பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் . பரிசுத்தொகை – இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா. (50,000/= ரூபா )

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆவூரான் சந்திரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக் காலம். இவர் எழுதிய சின்னான் ( குறுநாவல் ) வெளியீடு, ஜனவரி 28 ஆம் திகதி ( 28-01-2023 ) சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறும். முகவரி: 112, High Street, Berwick, Vic – 3806
* படங்களை அழுத்துவதன் மூலம் பெரியதாக, தெளிவாகப் பார்க்கலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு நாளை (18-01-2023) ஆரம்பமாகிறது. “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் நாளையும் (18-01-2023) நாளை மறுதினம் (19-01-2023) இணையவழியாகவும் நடைபெறவுள்ளது. பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டின் இணையவழி அமர்வுகள் 19-01-2023 காலை 9 மணிக்கு ஆரம்பிக்கின்றன.
இணைவதற்கான வழி: Join Zoom Meeting

சிலாவத்துறை பாடசாலை வரலாறு நூல் வெளியீடானது 24.12.2022 அன்று சிலாவத்துறை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூலின் முதல் பிரதியை கலைத்தென்றல் கவிஞர் ஹாமித் எம். சுஹைப் அவர்கள் நூலாசிரியரும் ஆய்வாளருமான எஸ்.எம். அன்ஸார் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதையும், இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம்.
அண்மையில் மறைந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான ஜெயக்குமாரன் மகாதேவனின் (ஜெயன் தேவா) இறுதிக்கரியைகள் எதிர்வரும் 11.01.2023 அன்று லிவர்பூலில் நடைபெறவுள்ளது.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் நாடகக் கலைஞர் க. பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் எனும் புதிய நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 07 ஆம் திகதி ( 07-01-2023 ) சனிக்கிழமை மாலை 4-30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறும்.
ஈழத்து நவீன தமிழ் நாடக உலகில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவருபவரும், தற்போது இங்கிலாந்தில் வசிப்பவருமான கலைஞரும் நாடக இயக்குநருமான க. பாலேந்திரா எழுதி கொழும்பு குமரன் இல்லம் பதிப்பகத்தினால் வெளியாகியிருக்கும் பாலேந்திராவின் அரங்கக்கட்டுரைகள் நூலில், அவர் ஏற்கனவே எழுதி ஊடகங்களில் வெளியான பல ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2022 ) வருடாந்த பொதுக்கூட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி (18-12-2022) ஞாயிற்றுக் கிழமை மாலை 3-00 மணியிலிருந்து மாலை 5-00 மணி வரையில் மெய்நிகரில் ( Zoom Meeting) நடைபெறும்.

பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் அவர்கள் கலந்துகொண்டு புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் குறித்த அடிப்படைகளையும், எளிமையாக கதைகளைத் தேர்வு செய்து எழுதுவதையும், கதைகளுக்கான மொழி மற்றும் எளிய பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கவுள்ளார்.