- ''பதிவுகள்' இதழின் நிகழ்வுகள் பகுதிக்குத் தகவல்கள் அனுப்புபவர்கள் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னராவது அனுப்புங்கள். கடைசி நேரத்தில் வரும் தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடாமல் போகும் சந்தர்ப்பங்களுண்டு. இத்தகவலும் இறுதி நேரத்தில் வந்த தகவல். ஒரு பதிவுக்காகப் பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், அந்தனி டி சிமித் [ANTHONY D SMITH] லண்டன் ஸ்கூல் ஒவ் இக்கொனமிக்ஸ் [LSE] என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தவர். 1982 - 2000 காலத்தில் இவர் தேசியவாதம் குறித்த மிக முக்கியமான கோட்பாட்டாளர்களில் ஒருவராக அறிவுலகின் கவனத்தைப் பெற்றார்.
1980 களில் தேசியவாதம் பற்றிய மூன்று கோட்பாடுகள் முதன்மையிடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தன. அவையாவன:
i. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM]
ii. நிரந்தரவாதம் [PERENNIALISM]
iii. நவீனத்துவவாதம் [MODERNISM]
இக்கோட்பாடுகளோடு 1990 களில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் இன்னொரு முக்கியமான கோட்பாடு என்ற தகுதியயைப் பெற்றது.
விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் டிசம்பர் 2021 நிகழ்வில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் பற்றி விரிவாக ஆராயப்படும். அந்தனி டி சிமித் ஆதிமுதல்வாதம், நிரந்தரவாதம், நவீனத்துவவாதம் என்னும் கோட்பாடுகளின் குறை நிறைகளை விமர்சனநோக்கில் மதிப்பீடு செய்வதோடு, இக்கோட்பாடுகளின் சிறப்பான கூறுகளை ஏற்றுக் கொண்டு தேசியவாதங்கள் பற்றிய புதிய விளக்கத்தை முன்வைக்கின்றார்.