Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87604318200?pwd=Y1FOdW1zWnZyZXRyOUVNaVVFOUs2dz09
Meeting ID: 876 0431 8200
Passcode: 122791
சிவசேகரம் ,ஈழத்து தமிழ் கவிதை பரப்பில் முக்கிய கவிஞர்களில் ஒருவர். அவர் ஒரு கவிஞர் மட்டுமன்று .. மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், அரங்கவியலாளர், அரசியல் சமூக செயற்பாட்டாளர், விமர்சகர் என பல தளங்களிலும் மிகக் காத்திரமாக பங்களித்த ஒரு ஆளுமையாகும். கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்து அவரது 32 நூல்கள் இதுவரை வந்துள்ளன. கவிதையும் அரசியலும், விமர்சனமும் அவரது முக்கியமான மூன்று துறைகளாக இருந்துள்ளன.
இதுவரை இவருடைய 9 கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.
01. ‘நதிக்கரை மூங்கில்’ 1983,
02. செப்பனிட்ட படிமங்கள்’ 1988,
03. . ‘தேவி எழுந்தாள்’ 1991,
04. . ‘ஏகலைவ பூமி’ 1995,
05. ‘போரின் முகங்கள்’ 1996,
06. ‘வடலி’ 1999, 07.
07. ‘இன்னொன்றைப் பற்றி’ 2003,
08. ‘கல்லெறி தூரம்’ 2008,
09. ‘முட்கம்பித் தீவு’ 2010
சிவானந்தம் சிவசேகரம்:
1942 இல் பிறந்தார், திருக்கோணமலையை சேர்ந்தவர். இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, திருக்கோணமலையில் வாழ்ந்த பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. இவரது பெற்றோர்கள் தற்காலிகமாக யாழ்ப்பாணம் , இணுவிலில் தங்கி இருந்த போது சிவசேகரம் பிறந்தார்! இரண்டாண்டுகளின் பின் மீளவும் இவரது குடும்பம் திருக்கோணமலைக்கு திரும்பி விட்டது . இங்குதான் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். பாடசாலைக்காலத்திலிருந்தே இலக்கியம் , அரசியல் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இடதுசாரிய கருத்துநிலையை அடித்தளமாக கொண்டு அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுத்து, சிந்தனை , செயற்பாட்டுத் தளங்களில் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்.
தனது கல்வித்துறை சார்ந்து சிலோன் பல்கலைக்கழகத்தில் ( 1978 இல் இருந்து பேராதனை பல்கலைக்கழகம்) பொறியியல்துறை பட்டதாரியானார். 1964 தொடக்கம் 1970 வரை பொறியியல்துறை உதவி விரிவுரையாளராக இப்பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தார். 1970இல் கலாநிதி பட்டத்தை பெற்றார். அங்கே 1998 - 1999, 2003 -2008, 2009- 2015 வரை பேராசிரியராக பணி செய்தார். கற்பித்தல் வழியிலும், மாணவர் ஆசிரிய உறவிலும் முன்மாதிரியான ஒரு பேராசிரியராக இவர் இருந்தார் என்பதை , உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இவரது மாணவர்கள் நினைவு கொள்கின்றனர்.
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் துறைத் தலைவராக 2000 -2005 வரையும், இப்பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராக 2003 இலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக 2015- 2019 வரையும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதித் தலைவராக 2015-2016 வரையும் , பொறியியல் கற்கைத்துறை சார்ந்த பல்வேறு முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளார்.
இலங்கைக்கு வெளியே , இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் 1981, 1984 வருகைப்பேராசிரியராகவும் 1984 – 1997 வரை பேராசிரியராகவும் பணிசெய்துள்ளார். 1984 – 1997 வரை இங்கிலாந்தில் வாழ்ந்த காலத்தில் புகலிட தமிழ் இலக்கியம், அரசியல் உள்ளடக்கத்திலும் உரையாடலிலும் அதிகம் பங்களித்துள்ளார்.
கவிதைத் தொகுதிகளாக , ஒரு ஆங்கிலத் தொகுப்பு உட்பட பத்து தொகுதிகளும் , நான்கு கவிதை மொழிபெயர்ப்புத் தொகுப்புகளும் , இரண்டு பாநாடகம் தொகுதிகளும் , ஒரு சிறுகதைத் தொகுதியும் , இரண்டு நாடகத் தமிழாக்கத் தொகுப்புகளும்,மொழி – இலக்கியம்- சமூகம்- அரசியல்- விமர்சனத்துறைகள் சார்ந்து பதின்மூன்று தொகுதிகளுமாக , இதுவரை 32 நூல்களை தந்துள்ளார். இன்னும் வெளிவராத , தொகுக்கப்படாத பல நூல்களுக்கான எழுத்துக்கள் இவரிடமுள்ளன. தனது கல்வித்துறை சார்ந்த நூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளும் , நூல்களுக்கான அத்தியாயங்களையும் எழுதி உள்ளார்.
உங்களை அழைக்கிறோம்! மேலதிக விபரங்களுக்கு இணைப்பினை பார்க்கவும். ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.