அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து, பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூலாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புத் துறையில் ஒரே ஒரு நூலே போட்டிக்கு வந்தமையால், இனிவரும் ஆண்டுகளில் நடத்தவிருக்கும் போட்டியில் அதனை பரிசீலிப்பது என முடிவாகியிருக்கிறது.
போட்டி முடிவுகளும் பரிசுத் தொகையும்
கே. ஆர். டேவிட் சிறுகதைகள் ( சிறுகதை )
கே. ஆர் . டேவிட் எழுதியது - ரூபா ஐம்பதினாயிரம்
குஞ்சரம் ஊர்ந்தோர் ( நாவல் ) - ரூபா ஐம்பதினாயிரம்
சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதியது
மைவண்ணன் இராம காவியம் – ( கவிதை ) ரூபா ஐம்பதினாயிரம்.
காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் எழுதியது.
குன்றிலிருந்து கோட்டைக்கு - ( கட்டுரை ) ரூபா ஐம்பதினாயிரம்.
எம். வாமதேவன் எழுதியது.
பரிசு பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையும் சான்றிதழ்களும், 2022 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக அனுப்பி வைக்கப்படும் . பரிசுத்தொகை – இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா. (50,000/= ரூபா )
குறிப்பிட்ட பரிசுத்தொகைகளை வழங்க முன்வந்துள்ளவர்கள்:
திரு. நா . அருணகிரி ( மெல்பன் )
எழுத்தாளர் ( அமரர் ) அருண் விஜயராணி நினைவுப்பரிசு.
திரு. முகம்மது ஆரீஃப் ( சிட்னி )
எழுத்தாளர் அமரர் மருதூர்க்கொத்தன் நினைவுப்பரிசு.
மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் ( மெல்பன் )
எழுத்தாளர் (அமரர் ) மருதூர்க்கனி நினைவுப்பரிசு .
மருத்துவர் நொயல் நடேசன் ( மெல்பன் )
எழுத்தாளர் ( அமரர் ) மல்லிகை ஜீவா நினைவுப்பரிசு .
( தகவல்: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் . )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். --- web: www.atlasonline.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.