பல வருடங்களுக்குப் பின்னர் எனது சிறுகதைத்தொகுதியொன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரவுள்ளது. ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாகக் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' என்னும் தலைப்பில் எனது 27 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதி புரட்டாதி 25 அன்று வெளிவரவுள்ளது. நான் நினைத்தவாறு தொகுப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிலையில் வெளிவருகின்றது. இதற்காக ஜீவநதி பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் பரணீதரனுக்கும் நன்றி.
இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் கனேடியப் புகலிட அனுபவங்களை உள்ளடக்கிய தொகுப்பினை முழுமையாக வாசிக்கும் போது ஒரு நாவலை வாசித்த உணர்வினை அடைவீர்கள்.
ஏற்கனவே எனது அமெரிக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு அமெரிக்கா, குடிவரவாளன் என்னும் நாவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கனேடிய அனுபவங்களைப் பிரதிபலிக்கும் இத்தொகுப்பு வெளியாகின்றது.
இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுள்ள பாடசாலை நூலகங்களுக்கும் பிரதிகளைக் கொடுக்க விரும்புகின்றேன். ஆர்வமுள்ளவர்கள் பற்றிய விபரங்களை அறியத்தரவும்.