படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு அரங்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி (05-10-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும். மகாகவி பாரதியின் படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்ட இந்நூலின் உள்ளடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் இதழில் 40 வாரங்கள் தொடராக வெளியானது. அத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் மறுபிரசுரமானது.
இலங்கையில் பாரதி நூல் வெளியீட்டரங்கு செல்வி பாமினி செல்லத்துரையின் வரவேற்புரையுடன், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் திரு. தெளிவத்தைஜோசப் தலைமையில் நடைபெறும். யாழ். காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன் நூல் வெளியீட்டுரை நிகழ்த்துவார். ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலன், திருமதி கௌரி அனந்தன், திருமதி வானதி சந்திரா ஆகியோர் நூல் மதிப்பீட்டுரை வழங்குவர்.
நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.
நிகழ்ச்சியில் இலக்கிய கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும். கலை, இலக்கிய அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.