விருட்சம் வெளியீடு: திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்களின் 'உப்புக்கணக்கு'!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மீண்டும் ஒரு அக்னிபார்வை நிகழ்ச்சி குறித்து. இம்முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தோழர் நடேசன் அவர்கள் புதிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் மாசில் பாலன் அவர்களை நேர்காணல் செய்கிறார். தோழர் பாலன் அவர்கள் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர். புரட்சிகர குடும்பப் பின்னணியும் பின்புலமும் கொண்ட அவர் சிறு வயது முதலே தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் பிணைத்துக் கொண்டவர். 90 களின் பின்பும் பல்வேறு மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து பணி புரிந்தவர். இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னான புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு அங்கு ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ‘புதிய திசைகள்’ என்ற அமைப்பினை ஒருங்கிணைத்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருபவர். இந்நிகழ்வில் அவர் தனது அமைப்பு குறித்தும் அதனது வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
“ஈழவிடுதலைப் போராட்டம் அழிந்து போய்விடவில்லை. இல்லாமல் போய் விடவில்லை. அது பின் தங்கியுள்ளது” என்று கூறிய அவர் ‘புதிய திசைகள்’ மற்றைய அமைப்புகளிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதினையும் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்ற விளக்கத்தையும் அளித்தார். இந்நிகழ்வில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விடயங்கள் ஆவன.
•இன்று தமிழீழ விடுதலை குறித்து பேசுகின்ற எந்த ஒரு அமைப்பும் தமது அரசியல் வேலைத்திட்டங்களை முன் வைக்கவில்லை.
•போரிற்கு பிந்திய சூழலில் அனைத்து கட்டுமானங்களும் சிதைவடைந்துள்ள. சமூகங்களுக்கு இடையில் அடிப்படை அலகுகள் எதுவுமே கிடையாது. அதனை கட்டி எழுப்ப வேண்டும்.
•சாதியம், வர்க்கம் போன்ற அகமுரண்பாடுகளிற்காக எமது உரிமைகளை விற்க முடியாது.
•தலித்தியம் என்பது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாடல்.
•வர்க்கம், சமூகங்களின் பிணைப்புக்களின் மூலம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.
மேலும் “எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல” என்று எடுத்துரைத்த அவர் எமது சமூகமானது பல களங்களைக் கண்ட பல இழப்புக்களையும் வேதனைகளையும் கண்ட ஒரு வலி மிகுந்த சமூகமாக இருக்கின்றது என்பதினையும் அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துவதில் உள்ள சிரமத்தினையும் விளக்கிக் கூறினார்.
முஸ்லிம் – தமிழ் முரண்பாடுகள் குறித்து அவர் பேச முற்படும்போது நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் அதனை இடையிலேயே மறித்து வேறு திசைக்கு மாற்றியது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அத்துடன் அவர் பஞ்சமர் என்ற சாதியக் கட்டுமானம் இப்போது இல்லை என்று கூறியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகவே எமக்குப் படுகின்றது.
கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பானது மிக அண்மையில் (ஒரு சில வருடங்களுக்கு முன்பே) உருவாக்கம் பெற்ற இடது சாரி சார்பு நிலை கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பாகும். மக்களின் சமகால பிரச்சனைகளை, சமூக வாழ்வியலை அவர்களின் வாழ்வியலினூடக, அவர்களின் வாழ்க்கையின் மொழியினூடாக, கலை, இலக்கிய வடிவங்களாக வெளிக்கொண்டுவருவதும் அதையே அவர்களது போராட்ட ஆயுதமாக்குவதும் தான் மக்கள் கலை பண்பாட்டு களத்தின் நோக்கமாகும்.
அவர்கள் கடந்த காலங்களில் நடாத்திய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற அமைப்பினர்களைப் போல் அல்லாமல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குறித்த நேரத்தில் நடாத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணத்தில் நானும் குறித்த நேரத்திற்கு முன்பே சமூகமளித்திருந்தேன். ஆனால் இந்த தடவை அவர்களது நிகழ்வும் ஒரு கொஞ்ச நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது என்பதினையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
ஒரு நிமிடநேர மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய அந்நிகழ்வானது நேரிடையாகவே தோழர் சி.கா.செந்தில்வேல் இன் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ நூல் அறிமுகத்திற்குள் நுழைந்தது.
நிகழ்வினை தோழர் வேலு அவர்கள் நெறிப்படுத்தினார். முதலில் புதியதிசைகள் ஒருங்கிணைப்பாளர் மாசில் பாலன் அவர்கள் உரையாற்றினார். இது போன்ற வரலாற்று ஆவணங்கள் வெளிவரவேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரவேற்று பேசிய அவர் அதற்குமப்பால் இந்நூல் குறித்தும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறுவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஈழ விடுதலைப் போரை முற்று முழுதாக நிராகரிக்கும் அவர்கள் அந்த முப்பது வருட காலத்தில் வெறும் அறிக்கைகள் விட்டதற்கும் அப்பால் செய்த நடவடிக்கைகள் என்ன என்றும், முற்போக்கு தேசியம் குறித்தும், அப்படி ஒரு தேசியம் உருவானால் அதனுடன் இணைந்து பயணிப்பதாகவும் இப்போது குறிப்பிடும் இவர்கள் கடந்த காலங்களில் ஒரு முற்போக்கு தேசியத்தின் உருவாக்கத்திற்கு என்ன நடவைக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் பயிற்சிப்பட்டறை இம்மாதம் எதிர் வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று காலை 10:15 தொடக்கம் 11:45 வரை ஸ்காபுறோவில் 90 Littles road (BLue clour building - Sewell and Littles ) என்னும் விலாசத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
சிறுகதை பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் குரு அரவிந்தன். நாவல் (புதினம்) பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் கே. ரவீந்திரநாதன்
சிறுகதை, நாவல் இலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
Kuru Aravinthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
![]()
தலைப்பு: கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்
சிறப்புரை ஆர் வெங்கடேஷ் (பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர்)
இடம் : கிளை நூலகம், தேதி 26.07.2018
7 இராகவன் காலனி 3வது தெரு, (வியாழக்கிழமை)
ஜாபர்கான் பேட்டை, சென்னை நேரம் மாலை 5.45 மணி
அன்புடன்
நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடா, மிசசாகாவில் உள்ள சொப்பா குடும்ப மன்றத்தின் கனடாதினக் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை, யூன் மாதம் 30 ஆம் திகதி 2018 இல் மிசசாகாவலியில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கில் கொண்டாடப்பட்டது. 500 மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. சென்ற சனிக்கிழமை மிசசாகா நகரில் கனடா தினம் கொண்டாடப்பட்ட போது பல்வேறு சமூகம் சார்ந்த பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர்.
கனடாதின விழாவின் ஆரம்பத்தில் விசேட விருந்தினர் ரஜீவ்கரன் முத்துராமன் அவர்களால் கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, சொப்கா மன்றக் கீதம் ஆகியன மன்ற அங்கத்தவர்களால் இசைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வைத்தியகலாநிதி வி. பிகராடோ, திருமதி பிகராடோ ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின்போது கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டு, அவரது பிரதம விருந்தினர் உரையும் அப்போது இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த மிசசாகா மேயர் மதிப்புக்குரிய போணி குறம்பி (டீழnnநை ஊசழஅடிநை) அவர்களின் உரை இடம் பெற்றது. தொடர்ந்து நகரசபை, மாகாணசபை அங்கத்தவர்களின் உரைகள் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து மன்றத்தின் முன்னாள் தலைவியும், தற்போதைய காப்பாளருமான சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்கள் மன்றத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தனால் அவரது கடந்தகால சேவைகளைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

கோவை புத்தக திருவிழாவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஆசி கந்தராஜாவின் "கள்ளக்கணக்கு" சிறுகதைத் தொகுப்பு அ முத்துலிங்கத்தின் முன்னுரையுடன் வெளியிடப்படுகின்றது.
கோவை வெளியீடு:
உரை: திரு க மோகனரங்கன்
காலம்: 2018 ஜூலை 22 ஞாயிறு காலை 10:00 மணி.
இடம்: கோவை புத்தக திருவிழா. ஆர்த்ரா ஹால், அண்ணா சிலை அருகில். கோவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மீண்டும் ஒரு நூல் அறிமுக விழா கடந்த வாரம் சனிக்கிழமையன்று (23.06.2018) ஈஸ்ட்ஹாம் இல் உள்ள Trinity Centre இல் நடைபெற்றது. கௌசல்யா சுப்ரமணியனின் ‘இசைத்தமிழ் சிந்தனைகள்’ ‘தமிழ் இசைப்பாடல் வகைகள்’ என்ற இரு நூல்களே அவை. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ரசிப்பதுடன் சரி. இப்போது கொஞ்சம் எனது வாசிப்பு எல்லைகளை விரிவு படுத்திய காரணத்தினால் இசையை ரசிப்பது என்பதுவும் அறவே இல்லாமல் போய்விட்டது. எனவே வேண்டா வெறுப்பாகத்தான் அரங்கில் போய் உட்கார்ந்தேன். 4 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்வு மிகவும் தாமதமாக 6 மணிக்கே ஆரம்பமாகியது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் நா.சுப்பிரமணியம் அவர்கள் ‘ஒரு கால கட்டத்து நாவல்கள்’ என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. எனவே அவர் உரையைச் செவி மடுப்பதே எனது நோக்கமாக இருந்தது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133) இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி அவர்கள் " தமிழ் - முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம் - எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்" என்னும் தொனிப்பொருளில் உரையாற்றுவார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு சமூகங்களிடையில் ஏற்படுத்தப்படவேண்டிய நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன் - செயற்குழுவினர்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங் கம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வணக்கம்! பீல் குடும்ப ஒன்றியத்தின் (SCREEN OF PEEL Community Association) கனடாதினக் கொண்டாட்டம் எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் சனிக்கிழமைää யூன் மாதம் 30 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு மிசசாகாவில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கத்தில் (L.C.Tylor Auditorium, 1275 Mississauga Valley Community Centre) மாலை 6:00 மணியளவில் நடைபெற இருக்கின்றது. நடனம், நாடகம், பாடல் போன்ற கலை நிகழ்வுகளோடு கனடாதினப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்கு நிகழ்வின்போது பரிசுகளும் வழங்கப்படும். நிகழ்வில் பங்குபற்றி இளம் தலைமுறையினருக்கு ஆதரவு தருமாறு ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
![]()
ராகவன் காலனி ஜாபர்கான்பேட்டை கிளை நூலகத்தில் தொடர் நிகழ்வு
முதல் நிகழ்வினை துவக்கி வைப்பவர்: திரு. ச. இளங்கோ சந்திரகுமார் Bsc. MLIS, மாவட்ட நூலக அலுவலர்
வாழ்த்துரை : எம் . தன்ராஜ் - கிளை நூலகர்
முதல் நிகழ்வு: “உவேசா வும் பதிப்புப் பணியும்”
சிறப்புரை : முனைவர் பா சரவணன்.
இடம் : கிளை நூலகம் எண் 7,காலனி மூன்றாவது தெரு, ஜாபர்கான்பேட்டை, சென்னை 600083
காலம்: 28.06.2018 வியாழக் கிழமை மாலை 5.45 மணி
அன்புடன் வரவேற்கும் நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் 9444113205
நவீன விருட்சம் <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
"இந்தப் புகைப்படத்தில் எழுதியிருப்பது எனது கடல் அல்லவென்று சொல்வதியலாது. எனினும்
சிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை என்பது தவிர யாதான கடல் போல் தான் தோன்றுகிறது.
தரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள் அறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும்
அலைகள் குற்றுத்தாவரங்கள் அழிபட்ட மொட்டைக்கரை. இதுவல்ல எனது கடல்". - பிரம்மராஜன்.
இம்மாத ஆரம்பத்தில் 6 நாட்களாக (8th to 13th June 2018) இங்கு இலண்டனில் Whitechapel Gallery இல் கவிஞரும் புகைபடக் கலைஞருமான தோழர் சுகுணசபேசனின் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. “Transnational Proximities - நாடு கடந்ததும் அண்மையும்” என்ற கருத்தாடலில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கண்காட்சியில் சுவீடனை சேர்ந்த அனா லெயின் உம் தனது புகைப்படங்களையும் காட்சிப் படுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று பார்வையிடுவதற்கும், இரு கலைஞர்களுடன் சந்தித்து உரையாடுவதற்குமான ஒரு ஏற்பாட்டினை தோழர் எம். பௌசர் அவர்கள் மேற்கொண்டிருந்தார். அதன்படியே 09 ஜூன் 18, சனிகிழமை மாலை 4 மணியளவில் ஈஸ்ட்ஹாம் புகையிரத நிலைய வாசலில் சந்தித்து 12 பேரடங்கிய பேரணியாக ?? அந்நிகழ்வில் போய் கலந்து கொண்டோம்.
அழகானதும் அடக்கமானதுமான Gallery இல் அனைவரும் அமைதியாக புகைப்படங்களை ரசித்தனர். அனா லெயின் தனது புகைப்படங்களாக தமிழகத்தின் தலித்திய பெண்களின் காலடிகளை மட்டும் காட்சிப்படுத்தியிருந்தார். அழகற்றதும் அழுக்கு நிறைந்ததுமான வடுக்கள் நிறையப் பெற்ற காலடிகள் தலித்தியப் பெண்களின் ஆயிரமாண்டு கால அடக்குமுறைகளையும் சாதீயக் கொடுமைகளையும் புகைப்படங்களாக பேசி நின்றன.
சுகுணசபேசன் எமது வலி மிகுந்த சமூகத்தின் துயர் படிந்த கதைகளின் எச்சங்களை The last walk to the beach என்ற தலைப்பில் புகைப்படங்களாக பதிவு செய்திருந்தார். 2009 இல் ஒரு மானிட அவலமாக முற்றுப் பெற்ற எமது இனப்படுகொலையின் இன்னமும் மீளாத துயரங்களை, 2016 இல் அங்கு சென்ற அவர் அதனை படமாக்கியிருந்தார், அதனையே அவர் இங்கு காட்சிப்படுத்தியிருந்தார். ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. துயரங்களின் வடுக்கள் இன்னும் அகலவில்லை. இடுபாடுகளின் சிதைவுகள் இன்னமும் அகற்றப் பட வில்லை. மீள்கட்டுமானம் இன்னும் முறையே நடந்து முடிக்கப்படவில்லை. இவை பற்றியே இவரது படங்கள் எம்முடன் உரையாடி நின்றன. முள்ளிவாய்க்கால் கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதையின் இன்றைய தோற்றமானது இங்குதான் அனைத்துமே நடந்தது என்பது போல் மௌனமாக காட்சியளித்தது. இவையனைத்துக்கும் அப்பால் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அவர் எதேச்சையாக சந்தித்த ஒரு சிறுவனின் Negative தோற்றத்தில் அமைக்கப்பட்ட புகைப்படமானது ஒரு அசாதாரணமான அழகியலைக் கொண்டிருந்தது. ஒரு முகமறியாச் சிறுவனாக (A unknown Boy ) அந்தக் கடற்கரையில் அவர் சந்தித்துக் கொண்ட அந்தச் சிறுவனின் தோற்றமானது முடிவற்ற துயரங்களின் பதிவுறாத சாட்சியங்களில் ஒன்றாக எமக்குக் காட்சியளித்தது.
ஹென்றிக் இப்சனின் புகழ் பெற்ற நாடகமான 'ஒரு பொம்மை வீடு' (A Doll's House) பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் இலக்கியப்படைப்புகளுக்கெல்லாம் ஒரு முன்னோடியான இலக்கியப்படைப்பு என்று கூறலாம். 'ஒரு பொம்மை வீடு' நாடகத்தைக் கனடாவில் நாடகத்துறையில் காத்திரமான பங்களிப்பினைப் பல்லாண்டுகளாகச் செய்து வரும் மனவெளி கலையாற்றுக்குழுவினர் தமது பத்தொன்பதாவது அரங்காடல் நிகழ்வாக எதிர்வரும் ஜூன் 30 அன்று மேடையேற்றவுள்ளனர். எழுத்தாளரும், வானொலித்துறையில் பன்முக ஆற்றல் வாய்ந்தவருமான பி.விக்னேஸ்வரனின் மொழிபெயர்ப்பில் , இயக்கத்தில் மேடையேற்றப்படும் இந்நாடகத்தின் வெற்றிக்கு கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் ஆதரவு நல்கவேண்டும். மிகவும் பொருட்செலவில் மேடையேறவுள்ள நல்ல நாடகமொன்றின் மேடையேற்றத்துக்கான ஆதரவு இது போன்ற மேலும் பல நாடகங்களை மேடையேற்றித் தமிழ் நாடக உலகை மேலும் வளப்படுத்த அவர்களை உற்சாகப்படுத்தும்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mahroof Fauzar <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“கம்பராமாயணத்தில் மேலாண்மை” - பேராசிரியர் சு.பசுபதி
“தமிழியல் பாரம்பரியத்தில் அறிவியல் தடங்கள்” - கலாசூரி ஆ.சிவநேசச்செல்வன் MA
“திருமந்திரத்தில் அறிவியல் தடங்கள்” - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
ஐயந்தெளிதல் அரங்கு
"புத்தகம் புதிது" - முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
நாள்: 30-06-2018
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement)

காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில்
இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5
சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல்
காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம்
•வரவேற்பும் சிற்றுண்டியும்
•ஓவியக் கண்காட்சி
•நூலக நிறுவனத்தின் கண்காட்சி
•புத்தகக் கண்காட்சி ஆரம்பம்
காலை 11:00: ஆரம்ப நிகழ்வு
•வரவேற்பும் மௌன வணக்கமும்
•பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு
•இலக்கியச் சந்திப்பின் வரலாறு - அதீதா
காலை 11:20 - பி.ப 1:00 : அமர்வு 1: இளையோர் உலகம்: சமகாலப் பார்வைகள்
சாலினி | கவிதன் | ஶ்ரீரஞ்சனி

'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'நந்தலாலா', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'யுத்தம் செய்','பிசாசு', 'துப்பறிவாளன்' போன்ற திரைப்படங்களை இயக்கியவரும், நடிகரும், எழுத்தாளருமாகிய திரு மிஷ்கின் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் ஏற்பாடாகி உள்ளது. இந்நிகழ்விற்கு ஆர்வமுள்ளவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : ஸ்காபரோ சிவிக் சென்ரர் | காலம் : 25.05.2018 வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணி.
தொடர்புகளுக்கு : 416 731 1752
Arul Saverimuthu <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
![]()
கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று 19-05-2018 ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது. புதிய இயக்குனர் சபைக்கான தேர்தல் (2018) நடைபெற்றபோது தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகசபையினரின் பதவிகளுக்கான தெரிவில் போட்டி எதுவுமின்றி அனைத்து பதவிகளுக்கும் பின்வருவோர் சபையினால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்