நபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
'நபிகள் நாயகம்' எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது.
முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் வெளியீடான இந்நூலுக்கு கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் தொகுப்பாசிரியராகவும் கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளா உதவியாளராகவும் இருந்து நெறிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் தொகுப்பாக்க ஆலோசனை கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி, பிரதம நூலகர் எம்.ரீ. சபருள்ளாக்கான் போன்றோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கவிஞர்களின் கவிதைகள் ஒன்றுதிரட்டப்பட்டு நூலுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இதில் சகோதர இனத்துக் கவிஞர்களது கவிதைகளும் இடம்பெற்றிருப்பதானது இந்நூலின் மதிப்பினை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது.
இந்நூலுக்கு கணிப்புரை வழங்கியுள்ள கவிஞரும், விரிவுரையாளருமான எப்.எச்.ஏ. ஷிப்லி 'உலக மக்களால் அறிவிலிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அரேபிய பாலைவனப் பூமியில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்நிலையை அடைய முடிந்தது எப்படி? என்ற கேள்விக்கான விடையை இந்நூலில் நீங்கள் பெறலாம்' மேலும் 'நபிகள் நாயகம் போன்று ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்? நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அப்படியே இன்றும் பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விக்கான விடைகளும் கவிதை வடிவில் இந்நூல் எங்கும் விரவிக் கிடக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார்.


அன்புடையீர் வணக்கம் . இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வின் அழைப்பிதழை இணைத்துள்ளேன் . உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இலக்கியவீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும், 'கலைகளால் செழிக்கும் செம்மொழி' - தொடர் நிகழ்வு - இந்த மாதம் 08.08.2017. செவ்வாயன்று, மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் - செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு என்கிற நிகழ்வுக்கு, தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் , முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் , சிறப்புரை : கவனகக்கலை மாமணி - கலை. செழியன் அவர்கள் , அன்னம் விருது பெறுபவர் : 'திருக்குறள்' இரா. எல்லப்பன் அவர்கள், நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் . தகுதியுரை : செல்வி . ப. யாழினி அவர்கள். உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் கோவை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டன. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவனரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில் வெளிப்படுத்தி வருகிறார். சமூகச் சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை அவரின் நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இலக்கிய ரசனை என்பதை மீறி சமூகச் சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும்.உழைக்கும் பெண்கள், அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை , அவர்களுக்கான மீட்சிகளைப் பற்றி தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் பேசுகிறார்.


நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு விருது வழங்கப்படும். படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே லெனின் விருதின் தனித்தன்மை.
"1970களில் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களில் ஒருவராக போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய தோழர் சுகு, சமூக ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவராகவும் . ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கு குரல் எழுப்புவராகவும் , தொடர்ச்சியான சமூக, அரசியல் செயற்பாட்டாளராகவும் உள்ளவர். ஈழ அரசியல் வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஆளுமைகளில் ஒருவர். தன்னடக்கத்துடன் எப்போதுமே தன்னை மிகச் சாதாரண மனிதராகவே அடையாளப்படுத்த விரும்புபவர். கடந்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட 129 அரசியல்- சமூக, பண்பாட்டு பதிவுகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது."
கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பையும், சொப்கா மஞ்சரியையும் வெளியிடுவதில் பெருமைப்படுவதாக இச் சிறுகதைத் தொகுப்பை மிஸசாகா அடல்ட் சீனிய சென்ரரில் வெளியிட்டு வைத்த பீல் குடும்ப மன்றத்தின் உபதலைவரும், இந்த நூல்களின் தொகுப்பாசிரியருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். முதற் பிரதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி கோபி பிரசாந்தன் அவர்களும் சிறப்புப் பிரதிகளை மன்றத் தலைவர் சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் சூ மக்பெடன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் றொன் ஸ்ராறா அவர்களும், எழுத்தாளர்களின் சார்பில் ஜெயசீலி இன்பநாயகம் அவர்களும் மற்றும் சில பிரமுகர்களும் எழுத்தாளர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பல்வேறு வயதுடைய பெண்கள் எழுதிய, அவர்களின் எண்ணக் கருக்களைக் கொண்ட, இளமையும், முதுமையும் கலந்த சிறுகதைத் தொகுப்பாக இச் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருப்பது மட்டுமல்ல, கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது. புலம் பெயர்ந்து வந்த பெண்கள், கனடாவில் பிறந்த பெண்கள், பல்கலைக்கழக மாணவிகள் என்று பல தரப்பட்ட தமிழ் பெண்களின் ஆக்கங்களும் இச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
அன்புடையீர்,
வாரா வாரம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகும் இலக்கியப்பூக்கள் 150ஆவது வாரத்தை நோக்கி பயணிக்கிறது. உங்கள் குரலில் படைப்புக்கள் தர விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொண்டு(தகவல்களை உள்பெட்டியில் இடுங்கள்) உங்கள் நேரத்தை தெரிவு செய்து ஒலிப்பதிவினை மேற்கொள்ளலாம். இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.

‘ஈழத்தின் இசை மரபு குறித்தும், நடன மரபு குறித்தும், ஓவிய மரபு குறித்தும் ஏனைய நுண் கலைகள் பற்றியதுமான முறைமையான வரலாறு எழுதப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும். ஈழத்து இலக்கிய வரலாறு ஒழுங்குமுறையான வரலாற்று நெறிக்கு உட்படுத்தப்பட்டதுபோல ஏனைய துறைகளில் அந்தச் சாதனை நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நோர்காணல் தொகுப்பு ஈழத்தின் இசை, நாடக, நாட்டிய, ஓவிய, இலக்கிய, அரசியல், மருத்துவ, தொழில்முயற்சி வரலாற்றின் மிக நேர்த்தியான பதிவுகளைக் கொண்டு காணப்படுவது பாராட்டத்தக்க எழுத்து முயற்சியாகும்’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ஈலிங் நூல்நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









