வணக்கம்! “காடு: இயற்கை – காட்டுயிர்” இதழும் சென்னை எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் “இயற்கையோடு நாம் – 2017”
8 & 9 ஜூலை, 2017 (இரண்டு நாட்கள்)
இடம்: எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அடையார்.
தொடர்புக்கு: 89399-67179 / 9789-00-9666
சிறப்பு கூறுகள்:
1. கருத்தரங்கு:
இயற்கையோடு இயந்த வாழ்வை கொண்டிருந்த முன்னோர்களின் வாழ்வியல் சிந்தனையும், தற்போதைய பருவ நிலை மாற்றத்தையும், வரும் காலத்தில் பல்லுயிரிய சமநிலைக்கு செய்ய வேண்டியவை குறித்து சிந்திக்கவும் செயல்படவும் கருத்துரைகள் தெறிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 8, 2017 (சனிக் கிழமை)
காலை 10:00
நிகழ்ச்சி துவக்கம்
மதியம் 12:00
அமர்வு 1: இயற்கையோடு இணைந்த வாழ்வு: சங்க இலக்கியத்தில் இயற்கை - மக்கள் வாழ்வியல் நினைவுகூற வேண்டிய இயல் தாவரங்கள், மரங்கள்
மதியம் 1:30
உணவு இடைவேளை
மதியம் 2:30
அமர்வு 2: வளர்ச்சியும் – பல்லுயிர்ச் சூழலும்: நகரமயமாக்குதலில் பலியாகும் பல்லுயிர்ச் சூழல் இயற்கைவளங்களும், பொருளாதார வளர்ச்சியும் சென்னையின் இயற்கை, சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும்
ஜூலை 9, 2017 (ஞாயிற்றுக் கிழமை)
காலை 10
அமர்வு 3: நீர் நிலைகளின் நிலை அன்றும் இன்றும்: சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மழையின்றி பெருவெள்ளமும், கனமழையால் நீர் பெருக்கும்
காலை 11:30
அமர்வு 4: கரைக்கடலும் கடற்கரையும்: கடற்கரையும், கடல் வளம், கடல்சார் மக்கள் அலையாத்திக் காடுகள், மன்னார் வளைகுடா கடலோர நன்னீர் வளங்களும் மழைப்பொழிவும்
மதியம் 1:30
உணவு இடைவேளை
மதியம் 2:30
அமர்வு 5: மறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயிர்ச் சூழலும்: பழங்குடிகளின் தாவரங்கள் பற்றிய அறிவு தாவரங்களைச் சுற்றியுள்ள அரசியல் தாவரங்களைப் பயன்படுத்தி நீர்நிலைகளை பராமரித்தல்
2. ஒளிப்படக் கண்காட்சி:
பல்லுயிர்களின் அழகிய ஒளிப்படங்களின் வழியே இயற்கை – காட்டுயிரைக் காணுதல். பல்வேறு ஒளிப்படக் கலைஞர்களின் நுணுக்கமான அழகிய ஒளிப்படங்கள் காட்சிபடுத்தப்படும்.
3. கிராமிய கலை நிகழ்ச்சிகள் - கதை சொல்லி: ( 4 PM)
குழந்தைளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி
சிலம்பம்
கைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி
பழங்ககுடி இருளர் இசை நிகழ்ச்சி (ஞாயிறு மாலை மட்டும்): தொல் பழங்குடி இனத்தில் இருளர் குழுவும் ஒன்று. மிகக் குறைந்த மக்கள் தொகையில் கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் நிகழ்த்துக் கலையில் இயற்கை-குலதெய்வம்-வாழ்நிலை-வா ழ்க்கைச் சூழல் போன்றவற்றை அற்புதமாக உள்ளடக்கி பாடல், கதை, நடனம், போன்ற வடிவங்களில் நிகழ்த்த உள்ளனர்.
4. மரபு உணவு திருவிழா: (6.30 PM)
உணவே மருந்து என்கிற மரபு சிந்தைனையின் படி, சுவை மிகுந்த, இயற்கை வேளாண்மையில் வழியில், சூழலியலுக்கும் உடலுக்கும் உகந்த மரபு உணவு திருவிழா. Tickets for food festival at https://www.panuval.com/ iyarkayodu-nam-2017
மேலும் தகவலுக்கு: https://www.panuval.com/ iyarkayodunam2017
Facebook Event page: https://www.facebook.com/events/1464761950253667/
நன்றி!
Panuval Bookstore
112, Thiruvalluvar Salai,
Thiruvanmiyur. Chennai - 41.
Ph: 044-431-00-442 | 9789009666
www.panuval.com | fb.com/panuval | twitter.com/panuval
Join Panuval Book club
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.