பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: லென்ஸ் திரைப்பட இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
15-07-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான லென்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ நடத்தும் நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இந்த வாரம் லென்ஸ் திரைப்பட இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது. சினிமாவில் இருக்க வேண்டிய சமூக அக்கறை, ஒரு பிரச்சனையை பிரச்சார தன்மை இல்லாமல் எப்படி சினிமாவில் எப்படி சொல்வது, சமூக வலைத்தளங்களின் நன்மை தீமைகளை இந்த சந்திப்பில் கலந்துரையாடலாம். அவசியம் வாருங்கள்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.