மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும் 2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.
இவ்விழாவில் பிரதம அதிதிகளாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், கொடகே புத்தக நிறுவன அதிபர் சிரிசுமன கொடகே, தேவி ஜீவலர்ஸ் என்.எஸ். வாசு, சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியச் செயலாளர் கமல் பெரேரா, ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வார். மேமன்கவியின் ''மனிதநேய நேசகன்'' மணிவிழா மலரின் சிறப்புப் பிரதியினை தேவி ஜூவலர்ஸ் அதிபர் என். எஸ். வாசு பெற்றுக் கொள்வார். நூல்களுக்கான அறிமுகவுரையை கெக்கிராவ ஸூலைஹா மேற்கொள்வார். வாழ்த்துரைகளை டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப், கமல் பெரேரா, பத்மா சோமகாந்தன், கே.எஸ்.சிவகுமாரன், தமிழ்நாடு வளரி கவிதை ஆசிரியர் அருணாசுந்தரராசன் ஆகியோர் முன் வைப்பார்கள். வரவேற்புரையையும் நிகழ்ச்சித் தொகுப்பினையும் மொழிபெயர்ப்பாளர் ஹேமசந்திர பதிரன நிகழ்த்துவார். ஏற்புரையையும் நன்றியுரையும் மேமன்கவி நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் சகல கலை இலக்கிய நெஞ்சங்கள் கலந்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டதுடன், பூமாலைகளையும், பொன்னாடைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் கலை இலக்கிய நண்பர்கள் பணிவுடன் வேண்டுகிறார்கள்