ஏப்ரில் 2, 2017 ஞாயிற்றுக் கிழமை இகுருவி வருடாந்த விழாவில் இகுருவி இதழின் எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘கனடா தமிழர் வரலாறு’ ( Canadian Tamils' History) என்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பு, நூல் வடிவமாக வெளியிடப்பட்டது. இந்த இகுருவி விழாவில் இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், இலங்கையில் இருந்து சின்னத்தம்பி குணசீலன் ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
குரு அரவிந்தனின் ‘கனடா தமிழர் வரலாறு’ நூல் வெளியிடப்பட்ட போது சிறப்புப் பிரதிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ரொறன்ரோ நகராட்சி மன்ற உறுப்பினர் நீதன் சண் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் வெளிவந்த இந்த நூலில் குரு அரவிந்தனனின் ‘பிறீடம் இஸ் பிறி இன் கனடா’ என்ற கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. கனடாவின் 150 வது பிறந்த தினத்தை 2017 இல் கொண்டாடும் கனடிய அரசு பல்கலாச்சார சமூகங்களிடையே இருந்து தெரிவு செய்யப்பட்ட கதைகளில் தமிழ் சமூகத்தைப் பிரதிபலிக்கும் குரு அரவிந்தனின் கதையும் 150 கதைகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 150 வது பிறந்த தினத்தைக் கனடிய அரசுகொண்டாடும் இந்த வேளையில் தமிழர்களின் புலம் பெயர்ந்த வரலாற்றை, அவர்களின் கடந்த 40 வருடகால பங்களிப்பைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் முடிந்த அளவு இடம் பெறற்றிருக்கின்றன. கனடா தமிழர் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.