நண்பர்களே 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது இயக்குனர் தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லெனின் விருது பெறுபவர்களின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு உங்கள் ஊரில் தீபா தன்ராஜின் படங்களை திரையிட விரும்பினால் உடனே தொடர்பு கொள்ளுங்கள். திரையிடப்பட வேண்டிய இரண்டு படங்களில் ஒன்று தமிழ். இன்னொன்று ஆங்கில சப் டைட்டிலுடன் இருக்கும். படங்களில் பெயர்கள்: 'Something like a War' (1991) (english sub-titles), Invoking Justice (2011) (தமிழ்)
இதில் 'Something like a War' பெண்களுக்கு செய்யப்படும் கருத்தடை ஆபரேஷன் பற்றியது. இன்னொன்று தமிழகத்தின் பெண் ஜமாத்துகள் பற்றியது. இரண்டு படங்களும் சேர்த்து இரண்டு மணி நேரம் கால அளவு உள்ளவை. படங்களை உங்கள் ஊரில் திரையிட விரும்பினால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.