அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா! ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம்! தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம்!

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன. சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழா, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் 6 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
நிகழ்ச்சிகளை திரு, திருமதி கணநாதன் தம்பதியர் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள். திருமதி சகுந்தலா கணநாதன் ஆங்கிலத்தில் படைப்பு இலக்கியம் எழுதும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. திருவாளர்கள் அ. நாகராஜா, சந்திரசேகரம் ஆகியோரின் தமிழ்ப்பெண் வாழ்த்து, தமிழ்த்தாய் நடனம் என்பனவற்றுடன் அரங்குகள் ஆரம்பமாகும். கவிஞர் கல்லோடைக்கரன் தலைமையில் இவர்களின் பார்வையில் பெண் என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கில், அறவேந்தன், வெள்ளையன் தங்கையன், நந்தகுமார் இராமலிங்கம், சகீம் மாத்தயஸ், கேதா ஆகியோர் பங்குபற்றுவர்.

‘தமிழ் மக்களின் வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும்பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும் இசைää கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பறை போன்ற எமது பாரம்பரிய இசைமரபினை தமிழரின் தொன்மை இசைமரபாக நாம் முன்னெடுக்க வேண்டும். பரதநாட்டியம் போன்ற நடனங்களில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு அக்கறை காட்டினாலும் இந்த நடனங்கள் எமது பாரம்பரியக் கலாச்சார மரபை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதற்கில்லை. எமது பாரம்பரிய கூத்துமரபு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கலாநிதி பார்வதி கந்தசாமி கடந்த வாரம் மாசி மாதம் 6ஆம் திகதி ‘ஹரோ தமிழ் சந்தி’ அமைப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறையின் ஜந்தாவது மேடையேற்றம் மார்ச் மாதம் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறை இதுவரையில் நான்கு நிகழ்வுகளை நடாத்தி முடித்திருக்கின்றது. ”உயிர்ப்பு” நிகழ்வுகள் விழிம்பு நிலை மக்களின் குரலாய் நாடகங்களின் மூலம் ரொரொன்டோவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. புதிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடக அமைப்பாக உயிர்ப்பு நாடகப்பட்டறை அமைந்துள்ளது . சீரிய நாடகங்களை எழுதித் தயாரிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள உயிர்ப்பு ஆர்வமாக உள்ளது. மார்ச் மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் உயிர்ப்பின் 5ஆவது நிகழ்வில் மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன.
சென்ற வாரம் ரொறன்ரோவில் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் என்ற இதழ் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் நண்பர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். மலர் வெளியீட்டுக் குழுவில் பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர், அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன், கனி விமலநாதன், இராஜ்மீரா இராசையா, அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பொங்கல் விழாவுடன் சேர்த்து நூல் வெளியிடப்பட்டதால் எல்லோருக்கும் பொங்கல் பரிமாறினார்கள். தமிழ் மரபுத் திங்கள் என்பதால் தைமாதம் முழவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ரொறன்ரோவின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.
கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது. 

இலங்கை - இந்தியா - பாக்கிஸ்தான் - பங்களாதேஷ் - நேபாளம் - பூட்டான் - மாலைதீவு - ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது. 
'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு. அலெக்ஸ் வர்மா அவர்களிடமுள்ளன. நூலின் விலை $10 (கனடியன்). நூலினை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:



‘


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









