குவிகம் இலக்கிய வாசல் புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அடியேனின் நேர் பக்கம் என்ற கட்டுரைத்தொகுதிதான் அது. டிசம்பர் 19, 2015 (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பனுவல் புத்தக மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தள்ளாத வயதிலும் அசோகமித்திரன் அவர்கள் என் புத்தகத்தைப் பற்றி சில வார்த்தை பேச உள்ளார். அதேபோல் ராஜாமணி, க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களும் பேச உள்ளார்கள். கூட்டம் ஏற்பாடு செய்துள்ள குவிகம் இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் என் புத்தகத்தைப் பற்றி எதாவது நாலுவார்த்தை நல்லபடியாக சொல்வார்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் தவறாமல் கலந்துகொண்டு தடபுடலாக கூட்டத்தை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இக் கூட்டத்தில் ஒருவர் கதையும், இன்னொருவர் கவிதையும் வாசிக்கிறார். இடம் : பனுவல் புத்தக நிலையம், 112 திருவள்ளுவர் சாலை,திருவான்மியூர், சென்னை 600 041. திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில, பாம்பே டையிங் அருகில்.மாலை 6.30க்கு.
அனுப்பியவர்: லதா ராமகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.